அந்தோணி கெவின் மொரைஸ்

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அரசு வழக்குரைஞர்

டத்தோ கெவின் மொரைஸ் எனும் அந்தோணி கெவின் மொரைஸ் (22 மார்ச் 1960 - 16 செப்டம்பர் 2015); (மலாய்; ஆங்கிலம்: Anthony Kevin Morais; சீனம்:安东尼·凯文·莫莱斯) என்பவர் மலேசிய அரசுத் தலைமை வழக்குரைஞர் மன்றம் மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) ஆகியவற்றின் அரசு வழக்குரைஞர் (Deputy Public Prosecutor) ஆவார். மலேசிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.

அந்தோணி கெவின் மொரைஸ்
Anthony Kevin Morais
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
மலேசிய தலைமை வழக்குரைஞர் துறை
(Attorney General's Chambers of Malaysia)
விசாரணை மேன்முறையீட்டுப் பிரிவின் துணைத் தலைவர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1960-03-22)மார்ச்சு 22, 1960
கோலாலம்பூர், சிலாங்கூர்
 மலேசியா
இறப்பு16 செப்டம்பர் 2015(2015-09-16) (அகவை 55)
சுபாங் ஜெயா, சிலாங்கூர், மலேசியா
உறவினர்ரிச்சர்ட் திலான் மொரைஸ் (சகோதரர்)
சார்லஸ் சுரேஷ் மொரைஸ் (சகோதரர்)
டேவிட் ரமேஷ் மொரைஸ்
கென்னத் சங்கர்[1]
வாழிடம்புத்ராஜெயா
முன்னாள் கல்லூரி இங்கிலாந்து ஆல்போர்ன் கல்லூரி, இலண்டன்
வேலைவழக்கறிஞர், அரசு வழக்குரைஞர்

செப்டம்பர் 4, 2015-இல் காணாமல் போனவர்; கொல்லப் படுவதற்கு முன்பு அவர் கடத்தப் பட்டு இருக்கலாம் என அறியப்படுகிறது.[2]

பொது

தொகு

அந்தோணி கெவின் மொரைஸ் 1960 மார்ச் 22-ஆம் தேதி கோலாலம்பூரில் பிறந்தார். குடும்பத்தின் நான்கு சகோதரர்களில் இவர் மூத்தவர்.[3] உடன் பிறந்தவர்கள் ரிச்சர்ட் திலான் மொரைஸ்; சார்லஸ் சுரேஷ் மொரைஸ்; டேவிட் ரமேஷ் மொரைஸ்; கென்னத் சங்கர். இவர் 2016 மார்ச் 27-ஆம் தேதி பேராக், ஈப்போவில் அடக்கம் செய்யப்பட்டார்.

இறப்பு

தொகு

அந்தோணி கெவின் மொரைஸ், கடைசியாக 4 செப்டம்பர் 2015 அன்று, கோலாலம்பூர் சிகாம்புட்டில் உள்ள மெனாரா டூத்தா அடுக்குமாடி தளவீட்டை விட்டு, புத்ராஜெயாவில் உள்ள அரசு சட்டத் தலைமை அலுவலகத்திற்குப் பணிபுரியச் சென்றார். அதன் பின்னர் அவர் காணப்படவில்லை.[4] அவர் கைசியாக போக்குவரத்துப் பதிவெண் WA6264Q உரிமத் தகடு கொண்ட புரோட்டான் பெர்டானா வாகனத்தை ஓட்டிச் சென்றார்.

அடுத்த நாள் அந்தோணி கெவின் மொரைஸ் காணாமல் போனோர் என அவரின் இளைய சகோதரர் காவல் நிலையத்தில் முறையீடு செய்தார். இதற்கு முன்னதாக, பேராக், ஊத்தான் மெலிந்தாங், கம்போங் சுங்கை சாமாக் செம்பனைத் தோட்டத்தில், அவருக்குச் சொந்தமான மகிழுந்து போன்ற அமைப்பைக் கொண்ட ஒரு மகிழுந்து வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது.[5][6]

அறுவர் மீது குற்றச்சாட்டு

தொகு

அதன் பின்னர், செப்டம்பர் 16, 2015 அன்று, சிலாங்கூர், சுபாங் ஜெயா, யுஎஸ்ஜே 1-இல் (USJ 1, Subang Jaya) பைஞ்சுதை நிரப்பப்பட்ட ஒரு கொள்கலனில் அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.[7]

20 நவம்பர் 2017-இல், அந்தோணி கெவின் மொரைஸ் கொலையில் ஆறு பேர் குற்றம் சாட்டப்பட்டனர். [8]

குற்றம் சாட்டப்பட்ட 6 பேர்:

  1. ஆர். குணசீகரன், 55; முன்னாள் இராணுவ நோயியல் மருத்துவர்
  2. ஆர்.தினீசுவரன், 26
  3. ஏ.கே.தினேஷ்குமார், 25
  4. எம்.விசுவநாத், 28
  5. எஸ்.நிமலன் 25
  6. எஸ். ரவி சந்திரன், 47[9]

விசாரணை

தொகு

தொடக்கக்கட்ட விசாரணையில் ஏழு நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இருப்பினும், அந்த எழு நபர்களில் ஜி. குணசேகரன் என்பவர் மீதான குற்றச்சாட்டை அரசுத் தரப்பு மீட்டுக் கொண்டது. 2016-இல் அவர் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் இருவர் குணசேகரன் எனும் பெயரைக் கொண்டு இருந்தனர். ஒருவர் ஜி. குணசேகரன்; மற்றவர் டாக்டர் ஆர். குணசேகரன்.

செப்டம்பர் 15, 2015 அன்று; கைது செய்யப்பட்ட நாள் முதல் ஜி. குணசேகரனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை அமர்வு நீதிமன்றம் விதித்தது. கெவின் மொரைஸின் உடலை மறைத்த குற்றம், இறந்தவர் வாகனத்தின் போக்குவரத்து பதிவெண் அட்டையை அப்புறப் படுத்திய குற்றம்; ஆகிய இரு குற்றங்களை ஒப்புக்கொண்டார்.[10]

தூக்குத் தண்டனை

தொகு

ஏற்கனவே டாக்டர் ஆர். குணசேகரனுக்கு எதிரான ஓர் ஊழல் வழக்கில், அரசு தரப்பு வழக்குரைஞராக கெவின் மொராயிஸ் இருந்ததால், பழிவாங்கும் நோக்கத்தில் கெவின் மொராயிஸ் கொலை செய்யப்பட்டார் என்று அரசுத் தரப்பு தன் வாதத்தை முன்வைத்தது.[11]

10 சூலை 2020 அன்று, 4 ஆண்டு நீதிமன்ற வழக்கிற்குப் பிறகு, உயர் நீதிமன்றம் ஆறு குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதித்து, தூக்கு தண்டனை வழங்கியது.[12] 15 மார்ச் 2024 அன்று, மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆறு பேரின் மேல்முறையீடுகளை நிராகரித்தது; மேலும் அவர்களின் தண்டனைகளை உறுதி செய்தது.[13]

வேறு காரணங்கள்

தொகு

கெவின் மொராயிஸ் கொலைக்கான காரணம் 1MDB நிறுவனம் (1Malaysia Development Berhad) தொடர்பான விசாரணையில் தொடர்புடையது என்பதை காவல் துறையினர் மறுத்தனர்.[14][15] ஏனெனில், 1MDB நிறுவனம் தொடர்பான விசாரணையில், கைது செய்யச் சொல்லும் கட்டளையாளராக கெவின் மொராயிஸ், இருந்தார்.

அத்துடன் கெவின் மொராயிஸின் இளைய சகோதரர் சார்லஸ் சுரேஷ் மொரைஸ், அதிகாரத்தில் இருப்பவர்களைப் பற்றி கெவின் மொராயிஸ் அதிகம் அறிந்திருந்ததால் தன் சகோதரர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கூறினார்.[16]

கடத்தல்

தொகு

தி சைனா பிரஸ் (China Press) எனும் மலேசிய சீன செய்தித்தாள், கெவின் மொரைஸ், டூத்தா மாஸ் ராயா சாலையில் (Jalan Dutamas Raya) உள்ள அவரின் வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் கடத்தப் பட்டதாக செய்தி வெளியிட்டது.[17] செப்டம்பர் 4 ஆம் தேதி, கெவின் மொரைஸ், புத்ராஜெயாவிற்கு வேலைக்குச் சென்றபோது, ​​நான்கு கடத்தல்காரர்கள் வேண்டுமென்றே கெவின் மொரைஸின் காரை மோதி உள்ளார்கள்.

கெவின் மொரைஸ் தன் வாகனத்தின் நிலையைச் சரிபார்க்க காரில் இருந்து இறங்கிய போது, கடத்தல்காரர்கள் அவரைக் கடத்தினார்கள்.[17] சாலைப் போக்குவரத்து நெரிசலில் இந்த நிகழ்ச்சி நடந்ததால், போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தவர்கள் இந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்துள்ளனர்.

காவல்துறை கருத்து

தொகு

மூன்று பேர் கெவின் மொரைஸை ஒரு மிட்சுபிசி டிரைடன் (Mitsubishi Triton) ரக வாகனத்தில் ஏற்றினார்கள். மற்றொருவர் கெவின் மொரைஸின் காரை ஓட்டிச் சென்றார்.[17] காவல்துறையின் கூற்றுப்படி, பொதுமக்கள் புகார் அளித்திருந்தால், கெவின் மொரைஸின் தலைவிதியை மாற்றி இருக்கலாம்; அல்லது அவர் முன்னதாகவே காப்பாற்றப்பட்டு இருக்கலாம்.[17]

இதற்கிடையில், கெவின் மொரைஸின் கொலை என்பது கொலையாளிகளால் கவனமாகத் திட்டமிடப்பட்டது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.[17]

சிறப்புகள்

தொகு

டத்தோ விருது

தொகு

27 நவம்பர் 2015 அன்று, பேராக் சுல்தான் நசுரின் சா அவர்களின் 59-ஆவது பிறந்தநாளில், டத்தோ பதுக்கா மகோத்தா எனும் டத்தோ பட்டம் பேராக் சுல்தானிடம் இருந்து அந்தோனி கெவின் மொரைஸ் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.[18][19] இந்த விருது இறப்பிற்குப் பின்னர் வழங்கப்பட்ட விருதாகும்.

பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு விருது

தொகு

மலேசிய ஊழல் தடுப்பு கல்வி நிலையத்தில் (Malaysian Anti Corruption Academy), "கெவின் மொரைஸ் மூட் கோர்ட்" (Kevin Morais Moot Court) என்று பெயரிடப்பட்ட ஒரு வாதாடு மன்றம் உருவாக்கப்பட்டு உள்ளது. அது அவரின் மரணத்திற்குப் பிறகு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அவருக்குச் செய்த சிறப்புகளில் ஒன்றாகும்.[20][21][22]

2020-ஆம் ஆண்டில், பெர்தானா பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு நிதியத்தின் (Perdana International Anti-Corruption Champion Fund) 2020-ஆம் ஆண்டின் பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு விருது (International Anti-Corruption Award 2020) பெற்ற இரண்டு பெறுநர்களில் ஒருவராக மொரைஸ் தேர்வு பெற்றார்.[23]

விருதுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Statutory Declaration by Charles Suresh Morais - Brother of Murdered Kevin Morais | PDF | Autopsy | Funeral". Scribd (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 September 2024.
  2. "IGP: Mahkamah akan dedah cerita benar pembunuhan Kevin". Malaysiakini. 20 January 2016. பார்க்கப்பட்ட நாள் 23 September 2024.
  3. "Kevin Morais’ youngest sibling attacks SD credibility". Malaysiakini. 27 November 2015. https://m.malaysiakini.com/news/321240. பார்த்த நாள்: 15 July 2020. 
  4. "Malaysian court upholds conviction against former pathologist, 5 others over murder of prosecutor Kevin Morais". CNA. 15 March 2024. Archived from the original on 13 July 2024. பார்க்கப்பட்ட நாள் 13 July 2024.
  5. "Malaysia prosecutor found dead in drum". BBC News. BBC (BBC). 16 September 2015. https://www.bbc.com/news/world-asia-34266319. 
  6. "Six get death for murder of DPP". The Star (in ஆங்கிலம்). Archived from the original on 2024-07-13. பார்க்கப்பட்ட நாள் 2021-06-24.
  7. "Kevin Morais murder: Appeals court upholds death sentence for six". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 September 2024.
  8. "Six get death for murder of DPP". The Star (in ஆங்கிலம்). Archived from the original on 2024-07-13. பார்க்கப்பட்ட நாள் 2021-06-24.
  9. Khairulrijal, Rahmat; Karim, Khairah N. (2020-07-10). "Six sentenced to hang over Kevin Morais murder | New Straits Times". NST Online (in ஆங்கிலம்). Archived from the original on 2024-07-13. பார்க்கப்பட்ட நாள் 2021-06-24.
  10. "Six sentenced to death for murder of Kevin Morais". The Edge Markets. 2020-07-10. Archived from the original on 2024-07-13. பார்க்கப்பட்ட நாள் 2021-06-24.
  11. "Six sentenced to death for murder of Kevin Morais". The Edge Markets. 2020-07-10. Archived from the original on 2021-06-29. பார்க்கப்பட்ட நாள் 2021-06-24.
  12. Khairulrijal, Rahmat; Karim, Khairah N. (2020-07-10). "Six sentenced to hang over Kevin Morais murder | New Straits Times". NST Online (in ஆங்கிலம்). Archived from the original on 2024-07-13. பார்க்கப்பட்ட நாள் 2021-06-24.
  13. "Malaysian court upholds conviction against former pathologist, 5 others over murder of prosecutor Kevin Morais". CNA. 15 March 2024. Archived from the original on 13 July 2024. பார்க்கப்பட்ட நாள் 13 July 2024.
  14. Hayati Ibrahim (7 September 2015). "Anthony Kevin Morais tidak terbabit siasatan 1MDB". Harian Metro. http://www.hmetro.com.my/node/75836. பார்த்த நாள்: 10 Mac 2016. 
  15. "KEVIN MORAIS YANG HILANG TIDAK TERLIBAT SIASAT 1MDB, KATA PEGUAM NEGARA". Malaysian Review இம் மூலத்தில் இருந்து 2017-03-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170312054713/http://malaysianreview.com/143342/kevin-morais-yang-hilang-tidak-terlibat-siasat-1mdb-kata-peguam-negara/. பார்த்த நாள்: 10 Mac 2016. 
  16. Ida Lim (25 November 2015). "Adik dakwa Kevin Morais dibunuh sebab ‘tahu banyak’ kes orang berkuasa". The Malay Mail. http://www.themalaymailonline.com/projekmmo/berita/article/adik-dakwa-kevin-morais-dibunuh-sebab-tahu-banyak-kes-orang-berkuasa. பார்த்த நாள்: 10 Mac 2017. 
  17. 17.0 17.1 17.2 17.3 17.4 Pembunuhan Kevin Morais: Masyarakat turut bersalah பரணிடப்பட்டது 2017-03-06 at the வந்தவழி இயந்திரம் Free Malaysia Today (19 September 2015). Dicapai pada 1 Oktober 2015.
  18. "Mendiang Kevin Morais dianugerah darjah Perak bergelar Datuk". Malaysiakini. 27 November 2015 இம் மூலத்தில் இருந்து 28 November 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151128023359/http://www.malaysiakini.com/news/321241. 
  19. Jaspar Singh (27 November 2015). "Kevin Morais conferred posthumous 'Datuk' title". The Malay Mail இம் மூலத்தில் இருந்து 12 December 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151212045022/http://www.themalaymailonline.com/malaysia/article/kevin-morais-conferred-posthumous-datuk-title. 
  20. "SPRM abadikan nama Kevin Morais pada Moot Court MACA". Berita Harian. 19 September 2015 இம் மூலத்தில் இருந்து 21 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150921052810/http://www.bharian.com.my/node/83068. 
  21. "MACC names moot court after Kevin Morais". The Star (Malaysia). 2 October 2015 இம் மூலத்தில் இருந்து 4 October 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151004100148/http://www.thestar.com.my/News/Nation/2015/10/02/MACC-names-moot-court-after-Kevin-Tears-flow-freely-in-tribute-for-murdered-DPP/. 
  22. Rozanna Latiff (19 September 2015). "MACC renames moot court in honour of Kevin Morais". New Straits Times இம் மூலத்தில் இருந்து 4 October 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151004100148/http://www.thestar.com.my/News/Nation/2015/10/02/MACC-names-moot-court-after-Kevin-Tears-flow-freely-in-tribute-for-murdered-DPP/. 
  23. Perimbanayagam, Kalbana (2020-02-11). "Kevin Morais named as recipient of International Anti-Corruption Award 2020". NST Online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-12.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தோணி_கெவின்_மொரைஸ்&oldid=4107684" இலிருந்து மீள்விக்கப்பட்டது