அனுபமா புச்சிமந்தா

இந்திய வளைகோல் பந்தாட்ட வீராங்கனை

அனுபமா புச்சிமந்தா (Anupama Puchimanda) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள வீரர் ஆவார். 1980 ஆம் ஆண்டு சூலை மாதம் 8 ஆம் தேதியன்று அனுபமா பிறந்தார். தேசிய அளவில் வளைகோல் பந்தாட்ட விளையாட்டில் இவர் போட்டியிட்டார். பன்னாட்டு அளவில் நடுவராகவும் பணியாற்றினார். 2006 ஆம் ஆண்டு , பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் நடுவராகப் பொறுப்பேற்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. ஆசிய விளையாட்டுகள், மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் விளையாட்டுகள், பன்னாட்டு வளைகோல் பந்தாட்டக் கூட்டமைப்பின் இளையோர் உலகக் கோப்பை மற்றும் கிழக்கு ஆசிய விளையாட்டுகள் உட்பட 90 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பன்னாட்டு வளைகோல் பந்தாட்டப் போட்டிகளுக்கு நடுவராக இருந்தார், அத்துடன் இவரது வாழ்க்கையில் 100 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட இந்திய வளைகோல் பந்தாட்டப் போட்டிகளும் அடங்கும்.

வாழ்க்கை தொகு

அனுபமா புச்சிமந்தா இந்திய மாநிலமான கர்நாடகாவின் விராச்பேட்டையில் பிறந்து சட்டத்தில் பட்டம் பெற்றார். 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அனுபமா புச்சிமந்தா தனது 41 வயதில் கோவிட்டு -19 நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இவர் மிதுன் மந்தனாவை மணந்தார். [1]

தொழில் தொகு

அனுபமா புச்சிமந்தா தனது வளைகோல் பந்தாட்ட வாழ்க்கையை 1995 ஆம் ஆண்டு தொடங்கினார். சிறார்- தேசிய வெற்றியாளர் போட்டியில் போட்டியிட்டு கர்நாடக மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். பின்னர் இதே வெற்றியாளர் போட்டியில் மூத்த அணியையும் பிரதிநிதித்துவப்படுத்தினார், மங்களூர் பல்கலைக்கழகத்தின் வளைகோல் பந்தாட்ட அணிக்காக விளையாடினார். மேலும் 2004 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தின் வளைகோல் பந்தாட்ட நடுவராக மாறினார். [2] அனுபமா போட்டிகளில் பங்கேற்கும் போது நடுக்களத்திலும் வலது பக்கத்திலும் விளையாடினார். [2]

கர்நாடக மாநிலத்தில் வளைகோல் பந்தாட்ட விளையாட்டை மேம்படுத்துவதில் ஈடுபட்டு, கர்நாடக மாநில வளைகோல் பந்தாட்டச் சங்கத்தின் நிர்வாக உறுப்பினராகப் பணியாற்றினார். 2004 ஆம் ஆண்டில், அனுபமா புச்சிமந்தா, பெண்கள் வளைகோல் பந்தாட்டப் போட்டிகளுக்கு நடுவராகச் செயல்பட முன்னாள் இந்திய வளைகோல் பந்தாட்ட கூட்டமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2]

2006 ஆம் ஆண்டில், அனுபமா புச்சிமந்தா பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றிய இந்தியாவின் முதல் பெண்மணி என்ற சிறப்புக்குரியவர் ஆனார். பின்னர் 2006 ஆம் ஆண்டு மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் விளையாட்டுகள் மற்றும் ஆசிய விளையாட்டுகள், பன்னாட்டு வளைகோல் பந்தாட்டக் கூட்டமைப்பின் இளையோர் உலகக் கோப்பை மற்றும் கிழக்கு ஆசிய விளையாட்டுகளில் நடுவராக பணியாற்றினார். [3] பிடிஓ சிறுவர் உலகக் கோப்பை (பெண்கள்) (2005, சாண்டியாகோ ), ஈரோ வளைகோல் பந்தாட்ட உலக பூர்வாங்கச் சுற்று-2 (பெண்கள்) (2013, தில்லி) மற்றும் 2013 மகளிர் ஆசியக் கோப்பை (கோலாலம்பூர்) ஆகிய போட்டிகளிலும் நடுவராக பணியாற்றினார். [4] [5] [6] 2012 ஆம் ஆண்டு பெண்கள் நான்கு நாடுகளின் வளைகோல் பந்தாட்ட போட்டியில் நடுவராக இருந்தார் . [7] அனுபமா தனது வாழ்க்கையில் 90 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பன்னாட்டு வளைகோல் பந்தாட்ட போட்டிகளிலும், அதே போல் இந்தியாவில் தேசிய மற்றும் மாநில போட்டிகளிலும் சமமான அளவிலும் நடுவராக இருந்தார். [2]

2011 ஆம் ஆண்டில், விளையாட்டில் இவர் செய்த சாதனைகளுக்காக பெங்களூரு நகரத்திலிருந்து நம்ம பெங்களூரு விருதைப் பெற்றார்.[8] [9]

மேற்கோள்கள் தொகு

  1. "International hockey umpire Mundanda Anupama passes away". Star of Mysore (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-04-18. பார்க்கப்பட்ட நாள் 2021-12-02.
  2. 2.0 2.1 2.2 2.3 Apr 18, Manuja; Veerappa (18 April 2021). "Former international female hockey umpire Anupama dies of Covid-19". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-02.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  3. "Covid-19 claims international hockey umpire Anupama". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-12-02.
  4. "The Asian Hockey Federation condoles the death of Anupama Puchimanda". Asian Hockey Federation (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-02.
  5. "OCA » Asian hockey pays tribute to international umpire Anupama, 40". ocasia.org. பார்க்கப்பட்ட நாள் 2021-12-02.
  6. "Hockey India mourns the death of former international umpire Anupama Punchimanda". Hockey India (in ஆங்கிலம்). 2021-04-18. பார்க்கப்பட்ட நாள் 2021-12-02.
  7. "International Hockey Federation: Outdoor Appointments" (PDF).
  8. "Miss. Anupama Puchimanda – Namma Bengaluru Awards" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-02.
  9. Desk, News (2011-02-01). "21 finalists line up for 2011 Namma Bengaluru Awards". Citizen Matters, Bengaluru (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-02. {{cite web}}: |first= has generic name (help)

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுபமா_புச்சிமந்தா&oldid=3327426" இலிருந்து மீள்விக்கப்பட்டது