அனுபவங்கள் பாலிச்சகள்

1972 ஆணைடய மலையளத் திரைப்படம்

அனுபவங்கள் பாலிச்சகள் ( ஆங்கில மொழி: Shattered experience ) என்பது 1971 ஆம் ஆண்டைய மலையாள திரைப்படமாகும், இப்பபடானது தோப்பில் பாசி திரைக்கதை எழுத கே. எஸ். சேதுமாதவன் இயக்கிய படமாகும். இப்படத்தின் கதையானது தகழி சிவசங்கரப் பிள்ளை எழுதிய இதே பெயரிலான புதினத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் படத்தில் சத்யன், பிரேம் நசீர் மற்றும் ஷீலா ஆகியோர் நடித்துள்ளர். படத்தின் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்படுவதற்கு முன்பே இறந்த சத்யனின் கடைசி படம் இது. இது மம்மூட்டி அறிமுகமான திரைப்படமும் இது ஆகும். இப்படத்தில் மம்முட்டி சிறிய துணைக் கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார்.[1]

அனுபவங்கள் பாலிச்சகள்
இயக்கம்கே. எஸ். சேதுமாதவன்
தயாரிப்புஎம். ஓ. ஜோசப்
மூலக்கதைஅனுபவங்கள் பாலிச்சகள்
படைத்தவர் தகழி சிவசங்கரப் பிள்ளை
திரைக்கதைதோப்பில் பாசி
இசைஜி. தேவராஜன்
நடிப்புசத்யன்
பிரேம் நசீர்
ஷீலா
பகதூர்
அடூர் பசீ
கே.பி.ஏ.சி லலிதா
ஒளிப்பதிவுமெல்லி இரானி
படத்தொகுப்புஎம். எஸ். மணி
கலையகம்மஞ்சிளாஸ் பிலிம்ஸ்
விநியோகம்விமளா பிலிம்ஸ் (கேரளம்)
கேரளா பிலிம்ஸ் (தமிழ்நாடு)
சஜ்சன் பிலிம்ஸ் (வட இந்தியா)
வெளியீடுஆகத்து 6, 1971 (1971-08-06)
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

கதைச்சுருக்கம்

தொகு

இப்படமானது தொழிலாளர் தலைவனின் தடுமாறும் வாழ்கையைச் சுற்றியதாக உள்ளது. சங்கப் பணிகள் என்று வீட்டைக் கவனிக்காமல் அலைபவனாக நாயகன் இருக்கிறான். இதனால் பிள்ளைகள் உணவுக்காக அழும் சூழலும் நிலவுகிறது. இதுமட்டுமல்லாமல் மனைவி மீது சந்தேகம் கொண்டவனாகவும் நாயகன் இருக்கிறான். இப்படிபட்ட இவர்களின் வாழ்வை சொல்லுவதாக படத்தின் கதை உள்ளது.

நடிகர்கள்

தொகு
  • செல்லப்பன் / பிரபாகரனாக சத்யன்
  • கோபாலனாக பிரேம் நசீர்
  • பவானியாக ஷீலா
  • பார்வதியாக கே.பி.ஏ.சி லலிதா
  • குமரியாக குழந்தை நட்சத்திரம் சுமதி
  • குட்டப்பனாக மாஸ்டர் செல்வி
  • ராஜப்பனாக அடூர் பாசி
  • ஹம்சாவாக பகதூர்
  • கொச்சுன்னியாக சங்கராடி
  • கொச்சுன்னியின் மனைவியாக பிலோமினா
  • டி. கே. பாலசந்திரன்
  • முத்துக்குளம் ராகவன் பிள்ளை
  • என். கோவிந்தன் குட்டி
  • பரவூர் பரதன்
  • கிரிஷ்குமார்
  • மம்மூட்டி (அங்கீகரிக்கப்படாத துணை நடிகர்)

தயாரிப்பு

தொகு

படத்தின் முதன்மை படப்பிடிப்பானது கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் நடத்தபட்டது. உட்புறப் படப்பிடிப்புகள் விக்ரம், பரணி, சியாமளா படப்பிடிப்பு தளங்களில் படமாக்கப்பட்டது. படத்தின் கலை இயக்குநராக ஆர். பி. எஸ் மணி இருந்தார்.[1] இப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் மம்மூட்டி தோன்றி அறிமுகமுமான படம் இது.

இப்படத்திற்காக வயலார் எழுதிய பாடல்களுக்கு ஜி. தேவராஜன் இசையமைத்த பாடல்கள் வெற்றிபெற்றன.

  1. "சர்வராஜ்யதோழிலலிகலே" - கே.ஜே.யேசுதாஸ், பி. லீலா & கோரஸ்
  2. "கல்யாணி கலாவாணி" - பி.மாதுரி
  3. "பிரவச்சகண்மரே பரயூ" - கே.ஜே.யேசுதாஸ்
  4. "அக்னிபர்வதம் புகஞ்சு" - கே.ஜே.யேசுதாஸ்

வரவேற்பு

தொகு

இது தனக்கு பிடித்தமான படங்களில் ஒன்று என்றுகமல்ஹாசன் கூறி, "இது ஒரு அதிர்ச்சியூட்டும் கதையைக் கொண்டதாக [. . ] மிகவும் சஸ்பென்சாக இருந்தது, இது மனித மனதை ஆராய்ந்த விதத்தில் மிகவும் சுவாரஸ்யமான படம். " என்றார் [2]

குறிப்புகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  • "Anubhavangal Paalichakal". தி இந்து. Hindu.com. 25 March 2011. பார்க்கப்பட்ட நாள் 4 April 2011.
  • இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Anubhavangal Palichakal
  • அனுபவங்கல் பாலிச்சகல் [தொடர்பிழந்த இணைப்பு] மலையாள திரைப்பட தரவுத்தளத்தில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுபவங்கள்_பாலிச்சகள்&oldid=3953224" இலிருந்து மீள்விக்கப்பட்டது