அனைத்து-பலத்தீன அரசு

அனைத்து-பலத்தீன அரசு (All-Palestine Government, அரபி: حكومة عموم فلسطين உகுமத் 'உமும் பிலஸ்தீன்) 1948இல் அரபு - இசுரேல் போரின்போது செப்டம்பர் 22, 1948 அன்று அரபு நாடுகளின் கூட்டமைப்பால் நிறுவப்பட்ட அரசாகும். உடனேயே இதனை டிரான்சுயோர்தானைத் தவிர அரபு கூட்டமைப்பிலிருந்த அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டன. இந்த ஆட்சியின் நிலப்பகுதியாக முந்தைய கட்டளைசார் பலத்தீனத்தின் முழு பகுதியும் அறிவிக்கப்பட்டாலும் உண்மையில் இதன் ஆட்பகுதி காசா கரையாக அமைந்திருந்தது.[2] இதன் பிரதமராக அகமது இல்மி பாட்சாவும் குடியரசுத் தலைவராக ஹஜ் அமின் அல்-ஹூசைனியும் இருந்தனர்.[3]

அனைத்து-பலத்தீன அரசு
حكومة عموم فلسطين
உகுமத் 'உமும் பிலஸ்தீன்
1948–1959
கொடி of பலத்தீனம்
கொடி
நிலைபகுதியும் ஏற்கப்பட்ட
எகிப்தின் சார்புநாடு
தலைநகரம்எருசலேம் (அலுவல்முறையாக)
காசா (நடைமுறைப்படி)
கெய்ரோ (நடைமுறைப்படி)
பேசப்படும் மொழிகள்அரபி
அரசாங்கம்குடியரசு
தலைவர் 
• 1948
ஹஜ் அமின் அல்-ஹூசைனி
பிரதமர் 
• 1948
அகமது இல்மி பாட்சா
வரலாற்று சகாப்தம்பனிப்போர்
• தொடக்கம்
22 செப்டம்பர் 1948
1949
• காசா கரையை அரபு நாடுகள் கூட்டமைப்பு எகிப்தின் அலுவல்முறையான சார்பில் வைத்தல்[1]
1952
1956–1957
• முடிவு
1959
முந்தையது
பின்னையது
கட்டளைசார் பலத்தீனம்
காசா கரையை எகிப்து ஆக்கிரமித்தல்
தற்போதைய பகுதிகள் காசாக்கரை

இதற்கு சற்றுப் பின்னர் ஜெரிக்கோ மாநாடு டிரான்சுயோர்தானின் மன்னர் முதலாம் அப்துல்லாவை "அரபு பலத்தீன அரசர்" என அறிவித்தது.[4] இந்த மாநாடு அரபு பலத்தீனமும் டிரான்சுயோர்தானும் இணைய வற்புறுத்தியது; முதலாம் அப்துல்லாவும் மேற்குக் கரையைக் கைப்பற்ற முன்மொழிந்தார். மற்ற அரபுக் கூட்டமைப்பு நாடுகள் இதற்கு ஒப்பவில்லை.

அனைத்து-பலத்தீன அரசு நிறுவப்பட்டமை தனியான பலத்தீன நாடு உருவாக எடுக்கப்பட்ட முதல் முயற்சியாக சிலர் கருதுகின்றனர். இது எகிப்தின் அரவணைப்பில்[2] எவ்வித அதிகாரமுமின்றி செயல்பட்டது. இந்த அரசு அரசியல் மற்றும் அடையாளப்படுத்துதலுக்காகவே நிறுவப்பட்டது.[2] இதன் முக்கியத்துவம் படிப்படியாக குறைந்து வந்தது; 1948இன் பிற்பகுதியில் இசுரேலின் படையெடுப்பிற்குப் பிறகு காசாவிலிருந்து கெய்ரோவிற்கு அரசு இடம் பெயர்ந்த பின்னர் வெகுவாகவே குறைந்தது.

1959இல் அனைத்து-பலத்தீன அரசு எகிப்தும் சிரியாவும் இணைந்த ஐக்கிய அரபுக் குடியரசில் இணைக்கப்பட்டது. காசா கரை முறையாக எகிப்து இராணுவ ஆட்சியின் கீழ் வந்தது. எகிப்து முறையாகவோ மற்ற வழிகளிலோ பலத்தீன பகுதிகளுக்கு உரிமை கோரவில்லை. ஆனால் யோர்தான் மேற்கு கரையை தன்னுடையதாக அறிவித்தது. எகிப்தின் இராணுவம் மற்றும் அரசியல், பொருளியல்நிலைகளை சார்ந்திருந்ததால் அனைத்து-பலத்தீன அரசின் உரிமையுள்ள இறையாண்மை கேள்விக்குறியானது.

மேற்சான்றுகள் தொகு

  1. Kumaraswamy, P.R. The A to Z of the Arab-Israeli Conflict. 2009. p15.
  2. 2.0 2.1 2.2 Gelber, Y. Palestine, 1948. Pp. 177-78
  3. Spencer C. Tucker, Priscilla Mary Roberts. The Encyclopedia of the Arab-Israeli Conflict: A Political, Social, and Military History: A Political, Social, and Military History p 464
  4. "See Jericho Declaration, Palestine Post, December 14, 1948, Front page". Archived from the original on ஜூலை 10, 2012. பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 28, 2021. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனைத்து-பலத்தீன_அரசு&oldid=3579174" இலிருந்து மீள்விக்கப்பட்டது