ஆன்டன் செக்கோவ்

உருசிய நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர்
(அன்டன் செக்கோவ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆன்டன் பாவ்லோவிச் செகாவ் (Anton Pavlovich Chekhov, /ˈɛkɔːf, -ɒf/;[1] உருசியம்: Анто́н Па́влович Че́хов, உருசிய பலுக்கல்: [ɐnˈton ˈpavɫəvʲɪtɕ ˈtɕɛxəf], அந்தோன் பாவ்லொவிச் சேகவ்; 29 சனவரி [யூ.நா. 17 சனவரி] 1860 – 15 சூலை [யூ.நா. 2 சூலை] 1904) ஒரு உருசிய நாடக ஆசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் புனைகதை இலக்கிய உலகில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார். நாடக ஆசிரியராக இருந்து இவர் படைத்த கடற்புறா, அங்கிள் வான்யா, மூன்று சகோதரிகள், செர்ரிப் பழத்தோட்டம் ஆகிய நான்கு செவ்வியல் நாடகங்கள் மற்றும் இவரது சிறந்த சிறுகதைகளும் ஏனைய எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இவருக்குத் தனி மரியாதையை ஏற்படுத்தின.[2][3] ஹென்ரிக் இப்சன், ஆகஸ்ட் ஸ்ட்ரின்ட்பெர்க் ஆகிய இருவருடனும் செகாவ் இணைந்து நவீனத்துவத்தை மேடைகளில் புகுத்தினார். நவீனத்துவத்தை நாடகங்களில் தொடங்கி வைத்ததில் இம்மூவரும் முக்கியமானவர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர்.[4] செகாவ் தனது இலக்கியப் பயணத்தினுடன் கூடவே, மருத்துவர் பணியையும் செவ்வனே மேற்கொண்டு வந்தார். "மருத்துவம் என் சட்டப்பூர்வமான மனைவி" என்றும், இலக்கியம் எனது துணைவி என்றும் கூறியுள்ளார்.[5]

ஆன்டன் செகாவ்
Антон Чехов
பிறப்புஆன்டன் பாவ்லோவிச் செக்காவ்
(1860-01-29)29 சனவரி 1860
தகரனோக், உருசியப் பேரரசு
இறப்பு15 சூலை 1904(1904-07-15) (அகவை 44)
பேடன்வைலர், செருமானியப் பேரரசு
கல்லறைமாஸ்கோ
தேசியம்உருசியர்
படித்த கல்வி நிறுவனங்கள்முதலாவது மாஸ்கோ அரசு மருத்துவப் பல்கலைக்கழகம்
பணிமருத்துவர், சிறுகதை, நாடக எழுத்தாளர்
வாழ்க்கைத்
துணை
ஓல்கா நிப்பர்
விருதுகள்பூஷ்கின் பரிசு
கையொப்பம்

1896 ஆம் ஆண்டில் இவரது முதல் நாடகமான கடற்புறா படுதோல்வியடைந்த போது, செக் கோவ் நாடகம் எழுதுவதைக் கைவிட்டார். த சீகல் நாடகத்தின் வரவேற்புக்குப் பின், மீளவும் 1898-இல் கான்சிட்டாண்டின் தாலின்சிலாவிசிக்கியின் மாஸ்கோ கலை அரங்கில் அரங்கேறியபோது இது பெரும் புகழ்பெற்றது. அதன் பின்னரே, மூன்று சகோதரிகள் மற்றும் செர்ரி பழத்தோட்டம் ஆகிய நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. இவை  நாடகக் குழுமத்தினருக்கும்[6], பார்வையாளர்களுக்கும் சவாலாக இருந்தன. மேலும், செகாவின் இந்நாடகங்கள் மரபுவழி நடிப்புக்குப் பதிலாக, பார்வையாளர்களுக்கு "மனநிலை சார்ந்த அரங்கியல்" என்னும் நுட்பத்தையும், "நாடகத்தின் உரைகளுக்குள் ஆழ்ந்து போகும் நிலையையும்" கொடுத்தன.[7]

செக்கோவ் தான் முதலில் எழுதிய கதைகளைப் பணத்துக்காகவே எழுதினார். ஆனால், அவரது கலைப்படைப்பு ஈர்ப்பு அதிகரித்தபோது, தற்காலச் சிறுகதை வளர்ச்சியில் பின்னர் செல்வாக்கு ஏற்படுத்திய பல புதுமைகளை அவர் தனது கதைகளில் அன்று புகுத்தினார்.[8]

இவரது கதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இளமைக்காலம்

தொகு
 
ரஷ்யாவில் டகன்ரோக் என்னும் இடத்தில், அன்டன் செக்கோவ் பிறந்த வீடு

அன்டன் செக்கோவ் 29, சனவரி 1860 இல், செயின்ட் அந்தோணி பெரிய (17 ஜனவரி பழைய பாணி) விருந்து நாள் அன்று தெற்கு ரஷ்யாவின் ஆழாவ் (Azov) கடல் துறைமுகமான டாகன்ராக் (Taganrog) கில் பிறந்தார். இவருடன் சேர்த்து மொத்தம் ஆறு சகோதரர்கள். இவர் மூன்றாவது நபர் ஆவார். இவரது தந்தையின் பெயர் பவெல் எகொரோவிச் செக்கோவ் என்பதாகும். இவருடைய தந்தை ஒரு பண்ணையடிமையாவார். அவரது மனைவி, உக்ரேனிய நாட்டைச் சார்ந்தவர். அவரது வில்ஹோவட்கா கிராமமானது கொபிலியகி அருகேயுள்ள போல்டவா பகுதியில் உள்ள தற்போதைய உக்ரைன் நாட்டில் அமைந்துள்ளது. ஒரு மளிகைக் கடை நடத்தி வந்தார். இவர் திருச்சபைப் பாடகர் குழுவின் இயக்குநராகவும், பக்தியுள்ள கட்டுப்பாடான கிறிஸ்துவராகவும் மற்றும் உடல் குறைபாடுடையவராகவும் காணப்பட்டார். பவெல் செக்கோவ், சில வரலாற்றாசிரியர்களால் தனது மகனின் பல ஓவியங்களில் காணப்படும் பாவனை மூலமாகப் பார்க்கப்பட்டார். செக்கோவின் தாயான, எவ்ஜெனிய மொரோசாவா சிறந்த கதைசொல்லி. அவர் தம்முடைய குழந்தைகளுக்கு, தாம் தம் துணி வியாபாரியான தந்தையுடன் ரஷ்யா முழுக்கப் பயணித்த பல்வேறு பயண அனுபவங்களைக் கதைகளாக எடுத்துக்கூறுவார்[9].

"எங்கள் திறமைகள் எமது தந்தையிடமிருந்து பெற்றவையே" என்பதையும், "ஆனால் எமது ஆன்மாவோ எங்கள் தாயிடமிருந்து வந்தது" என்பதையும் செகோவ் என நினைவுகூர்வார். வாலிபனான செக்கோவ் அவரது சகோதரர் அலெக்சாண்டர் என்பவர், அவரது மனைவி மற்றும் குழந்தைகளிடம் காட்டும் விரும்பத்தகாத நடவடிக்கைகளைக் கண்டித்ததுடன் தனது தந்தை பவெல் கொடுங்கோன்மையையும் விமர்சித்தார். "எனக்கு நன்கு நினைவிருக்கிறது. அது ஓர் எதேச்சதிகாரப்போக்கு ஆகும். அஃதும் பொய்யும் என் அன்னையின் இளமையான வாழ்வைச் சீர்குலைத்தன. அவ்வெதேச்சதிகாரமும் பொய்மையும் என்னுடைய குழந்தை பருவத்தைப் பாழாக்கியதொடு பயத்தையும் தோற்றுவித்தது. அதைப் பற்றி இப்போது நினைத்தாலும் திகில் மற்றும் வெறுப்பை என்னால் உணர முடியும். ஒரு சமயம் என் தாயார் தயாரித்த சூப்பில் உப்பு அதிகமாகிட, எனது தந்தையார் திடீரென வெறிகொண்டு, அன்னையை, 'நீயொரு முட்டாள்' எனத் திட்டி வீசி எறிந்ததை மறக்கவியலாது.

படிப்பு

தொகு

1879 இல் செக்கோவ் தனது பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார். அதன்பின், அவரது குடும்பத்தினருடன் மாஸ்கோ சென்றடைந்தார். பிறகு, மருத்துவப் பள்ளிப் படிப்பிற்கான சேர்க்கையினை I.M. செசெநோவ் மாஸ்கோ மாநில முதல் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தொடங்கினார்.

தொடக்க கால எழுத்துப் பணி

தொகு

செக்கோவ் இப்போது குடும்பப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக்கொண்டார். குடும்பத்தை நிர்வகிப்பதற்காகவும்,பயிற்சிக்கான கட்டணத்தைச் செலுத்துவதற்காகவும் தம் எழுத்துப் பணியினைத் துவக்கினார். அவருடைய எழுத்துகள் அன்றாட ரஷ்ய வாழ்க்கையின் தினசரி நடவடிக்கைகளைக் குறுகிய, நகைச்சுவையான காட்சிகளை விளக்கும் காட்சிகளாக அமைந்திருந்தன. அவற்றில் பலவற்றை "அன்டோஷா செக்கோன்ட்" மற்றும் மண்ணீரலற்ற மனிதன் போன்ற புனைபெயர்களிலேயே எழுதி வந்தார். அவரது அந்த குறிப்பிடத்தக்க எழுத்துகள் அவருக்குப் படிப்படியாக, நன்மதிப்பைப் பெற்றுத் தந்தன. ரஷ்ய தெரு வாழ்க்கையை வஞ்சகப் புகழ்ச்சியுடன் எழுதக்கூடியவர் என அடையாளப்படுத்தப்பட்டார். 1882 ஆம் ஆண்டில், நிகோலாய் லேய்க்கின் என்னும் அக்காலகட்டத்து முன்னணிப் பதிப்பாளருக்குச் சொந்தமான, ஓஸ்கோல்கியில் (சிறு துண்டுகள் என்னும் அர்த்தம்) எழுதினார். இந்தக் காலகட்டத்தில் செக்கோவின் எழுத்துத் தொனி, அவரது வழமையான முதிர்ச்சியான புனைவுகளைவிடக் கடுமையானதாகக் காணப்பட்டன.[10][11]

1884 ஆம் ஆண்டில், செக்கோவ் மருத்துவராகப் பணியாற்றத் தொடங்கினார். இதனை அவர் தனது முதல் தொழிலாகக் கருதினார். ஆனாலும், ஏழை மக்களுக்கு இலவசமாகவே மருத்துவம் செய்ததனால், அவருக்கு அதிலிருந்து சிறிதளவு பணமே சம்பாதிக்க முடிந்தது.[12]

1884 மற்றும் 1885 ஆம் ஆண்டுகளில், செக்கோவ் காசநோய் பாதிப்பிற்கு ஆட்பட்டார். 1886 இல் அதன் பாதிப்புகளால் உடல்நிலை மோசமடைந்தது. ஆனால், அவர் தனது குடும்பத்தாரோ அல்லது அவரது நண்பர்களிடமோ தனது காசநோயைப் பற்றிக் கூற மறுத்து விட்டார். வாராந்திர ப் பத்திரிகைகளுக்கு அவர் தொடர்ச்சியாக எழுதி, அதன் மூலமாகப் பணம் சம்பாதித்துக் குடும்பத்தைப் படிப்படியாக அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தினார்.

திருப்புமுனை

தொகு

1887 ஆம் ஆண்டில்,அதிக வேலைப் பளு மற்றும் மோசமான உடல்நிலையிலிருந்து விடுபட எண்ணி, செக்கோவ் உக்ரைனுக்குப் பயணப்பட்டார்.அப்போது அங்கிருந்த அழகான புல்வெளி அவரை வெகுவாக ஈர்த்தது. அவர் தாயகம் திரும்பியவுடன், "புல்வெளி" (The Steppe) என்னும் நீளமான சிறுகதை ஒன்றை எழுதத் தொடங்கினார். இதனை அவர் "சிறிது முரணானதும், மிகவும் உண்மையானதும்" என்று குறிப்பிட்டார். இது இறுதியில் செவர்னி வெஸ்ட்னிக் (தி வடக்கு ஹெரால்ட்) இல் வெளியிடப்பட்டது. இது கதைமாந்தர்களின் சிந்தனைச் செயல்பாடுகளோடு கலந்த ஒரு கதையாகும். செக்கோவ் இக்கதையின் வாயிலாக, வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்ட ஓர் இளம் சிறுவனின் பார்வை வழியாகவும், அவரது தோழர்கள், ஒரு மதபோதகர் மற்றும் வணிகர் மூலமாகவும் ஓர் ஒற்றைக் குதிரை, இரு சக்கர வாகனப் பயணத்தைத் தூண்டுகிறார். மேலும், இது செக்காவின் கவித்துவமிக்க படைப்புகளின் அகராதி என்று பரவலாக அறியப்படுகிறது. இது அன்டன் செக்காவிற்குப் புகழையும், அவரது முதிர்ந்த கற்பனையின் தரத்தையும் மிக அதிகமாக வெளிப்படுத்தியது. தவிர, இதனை ஒரு இலக்கிய இதழில் வெளியிடப்படக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

1890 ஆம் ஆண்டில், செக்காவ் ஜப்பான் நாட்டின் வடக்கில் காணப்படும் ஷேகலின் (Sakhalin) தீவில், ரஷ்ய தூர கிழக்கு மற்றும் கத்தோர்கா அல்லது தண்டனைக்குரிய குடியிருப்புப் பகுதியில், தொடர்வண்டி, குதிரை பூட்டப்பட்ட வண்டி மற்றும் ஆற்றின் நீராவிப் படகு மூலம் கடினமான பயணம் மேற்கொண்டார். சுமார் மூன்று மாத காலம் அந்த இடத்தில் தங்கியிருந்து, அங்கு வசித்த ஆயிரக்கணக்கான குற்றவாளிகள் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பிற்காகக் குடியேறியவர்கள் ஆகியோரிடம் நேர்காணல் எடுத்தார். செக்காவினின் ஷெகாலினுக்கான அந்த இரண்டரை மாத பயணத்தின்போது அவர் எழுதிய கடிதங்கள் சிறந்த படைப்பாக நோக்கப்படுகின்றன. டோம்சுக் (Tomsk) என்னும் நகரைப்பற்றி அவர் தனது சகோதரிக்கு எழுதிய குறிப்புகள் தவறானவையாகக் கருதப்பட்டன. அந்த நகரத்து மாந்தர் அனைவருமே மந்தமானவர்கள் என அவர் குறிப்பிட்டிருந்தார். பிற்காலத்தில் டோம்சுக் மக்கள், அவர் கூறிய கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அவரைக் கேலி செய்வதுபோன்ற அவருடைய ஒரு சிலையை நிறுவினார்கள்.

இறப்பு

தொகு

1904 ஆம் ஆண்டு மே மாதத்தில் செக்கோவ் காசநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். அதுகுறித்து "அவரைப் பார்த்த அனைவரும் அவர் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டதாகத் தமக்குள் நினைத்தனர். ஆனால் அவர் தனது முடிவை நெருங்க நெருங்க, அதனை உணர்ந்து கொள்ளாதவராகவே காணப்பட்டார்". மிக்கேல் செக்கோவ் நினைவுகூர்ந்தார். இறுதியில், ஜூன் மாதம் மூன்றாம் நாள், அவர் பிளாக் வனிலுள்ள ஜேர்மனிய மருத்து நீருற்று நகரமான பேடன்வெலைருக்காக ஓல்காவுடன் சென்றார். அங்கிருந்து அவர் தனது சகோதரியான மாஷாவிற்கு வெளிப்படையாக, நகைச்சுவையாக எழுதிய கடிதங்களில் உணவு மற்றும் சமுதாயவெளி பற்றி விவரிக்கிறார். மேலும், அன்டன் செக்காவ் அவரது தாயாருக்கும் சகோதரிக்கும் தான் நலமாகி வருவதாகக் கூறி வந்தார். அவர் எழுதிய கடைசி கடிதத்தில், ஜேர்மானியப் பெண்கள் ஆடைகள் அணிந்திருக்கும் முறை பற்றி மனவேதனையடைந்தார்.

தமிழில்

தொகு

ஆன்டன் செக்கோவ் படைப்புகள் பல பலரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில:

  1. ஆறாவது வார்டு (தொகுப்பு) - தமிழில்: ரா. கிருஷ்ணையா;
  2. அந்தோன் செகாவ் கதைகள் - தமிழில்: ரா. கிருஷ்ணையா;
  3. ஆன்டன் செகாவ் சிறுகதைகள் - தமிழில்: சந்தியா நடராஜன்; மு.பதிப்பு 2021; சந்தியா பதிப்பகம். (இடம்பெற்றுள்ள கதைகள்: காதல் எனில், பிச்சைக்காரன், அவதூறு உள்ளிடட 20 கதைகள்)
  4. அன்டன் செகாவ் கதைகள் - தமிழில்: எம்.எஸ்; மு.பதிப்பு 2012; பாதரசம் வெளியீடு.
  5. ஆன்டன் செகாவ் கதைகள் - தமிழில்: எம்.கோபாலகிருஷ்ணன; மு.பதிப்பு 2021; நூல்வனம் பதிப்பகம்
  6. ஆன்டன் செக்காவ்: ஆகச் சிறந்த கதைகள் - தமிழில்: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்; மு.பதிப்பு 2019; தடாகம் பதிப்பகம்; பக்.104
  7. அந்தோன் செகாவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்; தமிழில்: பூ. சோமசுந்தரம்;
  8. அந்தோன் செகாவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்; தமிழில்: ?; எதிர் வெளியீடு. (இடம்பெற்றுள்ள கதைகள்: பச்சோந்தி, வான்கா, தத்துக்கிளி, ஆறாவது வார்டு, மாடவீடு ஓவியரின் கதை, இயோனிக், நாய்க்காரச் சீமாட்டி, மண்மகள்)
  9. ஆன்டன் செக்காவ் சிறுகதைகள்- தமிழில்: சூ.ம. ஜெயசீலன்; பாரதி புத்தகாலயம்
  10. ஒன்பது வேடிக்கைக் கதைகள் - தமிழில்: வானதி; மு.பதிப்பு 2021 மே 31; அழிசி பதிப்பகம்
  11. மூன்று ஆண்டுகள் (புதினம்); தமிழில்: ?: மு.பதிப்பு திசம்பர் 2022; நற்றிணை பதிப்பகம்;

படக் காட்சி அகம்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "Chekhov". Random House Webster's Unabridged Dictionary.
  2. "Greatest short story writer who ever lived."
  3. "Stories ... which are among the supreme achievements in prose narrative."
  4. Harold Bloom, Genius: A Study of One Hundred Exemplary Authors.
  5. Letter to Alexei Suvorin, 11 September 1888.
  6. "Actors climb up Chekhov like a mountain, roped together, sharing the glory if they ever make it to the summit". Actor இயன் மெக்கெல்லன், quoted in Miles, 9.
  7. "Chekhov's art demands a theatre of mood." Vsevolod Meyerhold, quoted in Allen, 13; "A richer submerged life in the text is characteristic of a more profound drama of realism, one which depends less on the externals of presentation." Styan, 84.
  8. "Chekhov is said to be the father of the modern short story".
  9. http://www.taganrogcity.com/chekhov_taganrog.html. {{cite book}}: Missing or empty |title= (help)
  10. "There is in these miniatures an arresting potion of cruelty ... The wonderfully compassionate Chekhov was yet to mature." "Vodka Miniatures, Belching and Angry Cats", George Steiner's review of The Undiscovered Chekhov in The Observer, 13 May 2001. Retrieved 16 February 2007.
  11. Willis, Louis (27 January 2013). "Chekhov's Crime Stories". Literary and Genre. Knoxville: SleuthSayers.
  12. Malcolm, Janet (2004) [2001]. Reading Chekhov, a Critical Journey. London: Granta Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-86207-635-8. இணையக் கணினி நூலக மைய எண் 224119811.

வெளி இணைப்புகள்

தொகு
படைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்டன்_செக்கோவ்&oldid=4062650" இலிருந்து மீள்விக்கப்பட்டது