அன்னா சாண்டி
அன்னா சாண்டி (Anna Chandy, 1905-1996) கேரளத்தின் முதல் பெண் வழக்கறிஞர் என்ற பெயர் பெற்றவர். இந்தியாவின் முதல் பெண் நீதியரசராகவும், இந்தியாவின் உயர் நீதிமன்ற முதல் பெண் நீதியரசராகவும் நியமனம் பெற்றவர்.
அன்னா சாண்டி | |
---|---|
நீதிபதி அன்னா சாண்டி | |
பிறப்பு | அன்னா 4 மே 1905 திருவனந்தபுரம், திருவாங்கூர் |
இறப்பு | 20 சூலை 1996 கேரளா, இந்தியா | (அகவை 91)
தேசியம் | இந்தியன் |
பணி | நீதிபதி |
பணியகம் | கேரள உயர்நீதிமன்றம் |
அறியப்படுவது | இந்தியாவின் முதல் பெண் நீதிபதி |
பதவிக்காலம் | 9 பிப்ரவரி 1959 - 5 ஏப்ரல் 1967 |
சமயம் | புனித தோமைய கிறித்தவர் |
இளமைப் பருவம்
தொகுஅன்னா சாண்டி 1905 இல் திருவனந்தபுரத்தில் பிறந்தார். அவர் ஒரு கிறித்தவ குடும்பத்தைச் சார்ந்தவர். 1926 ஆம் ஆண்டில் முதுகலைப் பட்டம் பெற்ற பின்னர், கேரள மாநிலத்தில் சட்டத்தில் பட்டம் பெற்ற முதல் பெண் ஆனார். 1929 ஆம் ஆண்டில் வழக்கறிஞராகப் பதிவு செய்து பணியாற்றித் துவங்கினார். அதே நேரத்தில் ஸ்ரீமதி என்ற இதழைத் தொடங்கி பெண்கள் உரிமைகளுக்காக பாடுபட்டார்.[1]
முதல் தலைமுறை பெண்ணியவாதி
தொகுஇவர் "முதல் தலைமுறை பெண்ணியவாதி" என்று விவரிக்கப்பட்டார்.[1][2] அன்னா சாண்டி 1931 ஆம் ஆண்டில் ஸ்ரீமுலாம் மக்கள் கூட்டமைப்பிற்கான தேர்தலுக்கு பிரச்சாரம் செய்தார். அவர் போட்டியிலும் செய்தித்தாள்கள் மூலமும் விரோதத்தை சந்தித்தார்.[3] ஆனால் 1932 -34 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நீதியரசர் பதவி
தொகு1937 ஆம் ஆண்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் திவானாக பதவி வகித்த சர். சி. பி. ராமசாமி ஐயரால் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இது இந்தியாவில் முதல் பெண் நீதியரசராகவும், 1948 ஆம் ஆண்டில் செசன்ஸ் நீதியரசராகவும் பதவி உயர்வு பெற்றார்.[1][4] 1959, பெப்ரவரி 9, அன்று அவர் கேரள உயர்நீதி மன்றத்தில் நீதியரசராக நியமிக்கப்பட்டபோது இந்திய உயர் நீதிமன்றத்தில் முதல் பெண் நீதியரசர் என்ற பெருமையைப் பெற்றார். அந்தப் பதவியில் 1967, ஏப்ரல் 5 வரை அவர் இருந்தார்.[5]
இறுதி வாழ்க்கை
தொகுதனது பணி ஓய்வுக்குப் பின், அன்னா சாண்டி இந்திய சட்ட ஆணையத்தில் பணியாற்றினார். ஆத்மகதா (1973) என்ற தலைப்பில் சுயசரிதையை எழுதினார். 1996 இல் அவர் இறந்தார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Devika J. (2005). Herself. Popular Prakashan. p. xxiv.
- ↑ Raman, K. Ravi, ed. (2010). Development, Democracy and the State: Critiquing the Kerala Model of Development. Routledge. p. 179. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781135150068.
- ↑ Mukhopadhyay, Swapna, ed. (2007). The Enigma of the Kerala Woman: A Failed Promise of Literacy. Berghahn Books. p. 113. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788187358268.
- ↑ "First to appoint a lady advocate – Mrs. Anna Chandy — as District Judge". Archived from the original on 5 July 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-05-27.
- ↑ "Former Judges of High Court of Kerala". பார்க்கப்பட்ட நாள் 2008-05-27.