அன்பற்றவர் : இருண்ட வலை

அன்பற்றவர் : இருண்ட வலை (Unfriended : Dark Web) என்பது 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெளிவந்த திகில் திரைப்படமாகும். இது அறிமுக இயக்குனர் ஸ்டீஃபன் சுஸ்கோ என்பவரால் இயக்கப்பட்டது. கோலின் உட்வெல், ரெபேக்கா ரிட்டனவுஸ், பெட்டி கேப்ரியல், கானர் டெல் ரியோ, ஆண்ட்ரியு லீஸ், ஸ்டெபனி நுகுராஸ், சவிரா விந்யானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படமானது 2014 ஆம் ஆண்டு வெளிவந்த அன்பற்றவர் (Unfriended) திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். இதில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மடிக்கணினியில் இருண்ட வலையை அணுக அதனை அதன் உரிமையாளர்கள் எவ்வாறு கண்காணிக்கிறார்கள் என்பதை விளக்குவதாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.

அன்பற்றவர் : இருண்ட வலை
200px
Theatrical release poster
இயக்கம்ஸ்டீஃபன் சுஸ்கோ
தயாரிப்பு
 • தைமூர் பெக்மம்பெடோவ்
 • ஜேசன் ப்ளூம்
கதைஸ்டீஃபன் சுஸ்கோ
நடிப்பு
 • கோலின் உட்வெல்
 • ரெபேக்கா ரிட்டனவுஸ்
 • பெட்டி கேப்ரியல்
 • ஆண்ட்ரியு லீஸ்
 • கானர் டெல் ரியோ
 • ஸ்டெபனி நுகுராஸ்
 • சவிரா விந்யானி
ஒளிப்பதிவுகெவின் ஸ்டீவர்ட்
படத்தொகுப்புஆன்ரியூவ் வெஸ்மான்
விநியோகம்
 • ஓ டி எல் வெளியீடு
 • BH Tilt
வெளியீடு2018
ஓட்டம்92 நிமிடங்கள்
நாடுஐக்கிய நாடுகள்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$1 மில்லியன்
மொத்த வருவாய்$16.4 மில்லியன்