அபிமன்யு சமந்தசின்காரா

அபிமன்யு சமந்தசின்காரா (Abhimanyu Samantasinhara 23 பிப்ரவரி 1760 [1] - 15 ஜூன் 1806) [2] ஓர் ஒடியக் கவிஞர் ஆவார். இவர் ஜாஜ்பூரில் உள்ள பலியாவில் பிறந்தார். பாகா கீதை ( புலி பாடல்), சதே கீதை ( பறவை பாடல்) போன்ற பல ஒடியா நாட்டுப்புறப் பாடல்களை எழுதியுள்ளார். ராதைக்கும் கிருட்டிணருக்கும் இடையிலான காதல் குறித்து பல கவிதைகளை எழுதியுள்ளார். பிடக்த சிந்தாமணி இவரது சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது.

பிதக்தா கபி
அபிமன்யு சமந்தசின்காரா
சமந்தசின்காராவின் ஓவியம்
பிறப்பு(1760-02-23)23 பெப்ரவரி 1760 (7th day of Magha)
Balia, ஜாஜ்பூர் மாவட்டம்
20°43′32″N 86°16′22″E / 20.72556°N 86.27278°E / 20.72556; 86.27278
இறப்பு15 சூன் 1806(1806-06-15) (அகவை 46) (Raja Sankranti)
தேசியம்இந்தியன்
பணிகவிஞர்
பெற்றோர்இந்திர ஜீதா சமந்தசின்காரா
துளசி தேவி
வாழ்க்கைத்
துணை
பிமலா தேவி

வாழ்க்கை

தொகு

இவர் பிப்ரவரி 23, 1760 அன்று ஜாஜ்பூரின் பாலியா கிராமத்தில் பிறந்தார்.[3] பாலியா கிராமம் ஜாக்பூரின் புகழ்பெற்ற பௌத்த இடமான ரத்னகிரி மகாவிகாராவுக்கு அருகில் அமைந்துள்ளது. இவரது தந்தை இந்திரஜீதா சமந்தசிங்கருக்கு குழந்தை இல்லை. ஆனால் அபிமன்யு ஒரு பிராமண சதானந்தா கபிசுர்ய பிரம்மாவின் வழிபாட்டின் காரணமாக பிறந்ததாகக் கூறப்படுகிறது.[4] அவர் அபிமன்யுவின் ஆசிரியராக இருந்தார். அவர் தனது முதல் கவிதையை 9 வயதில் எழுதியிருந்தார்.

இலக்கியப் படைப்புகள்

தொகு
  • பிடக்த சிந்தமணி
  • பிரேமா கலா
  • ரசபதி
  • சுலக்கியானா
  • பிரேமா தரங்கிணி
  • பாகா கீதை
  • சாதே கீதை
  • போல் ஹன்
  • பிரேமா (ப்ரீத்தி) சிந்தமணி

இவரது இலக்கியப் படைப்பு பிடக்த சிந்தமணி ஒடியா இலக்கியத்தின் மதிப்புமிக்க நூலாகக் கருதப்படுகிறது. சில பிரபலமான ஓடிய கவிதை வெளிப்பாடுகள் (சாந்தா- ଛାନ୍ଦ) இங்கே காணப்படுகின்றன, எ.கா. கதமலியா, பூலதோலா போன்றவை. இந்த பெயர்களை கவிஞரின் புனைபெயர் என்று அழைக்கலாம். இவரைப் பற்றிய கூடுதல் தகவல்களை இந்த புத்தகத்திலிருந்து பெறலாம்.

அவரது தந்தை இந்திரஜீதா சமந்தசிங்கரா பற்றிய தகவல்களும் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன. அவர் அந்த இடத்தின் ராஜா என்று எழுதப்பட்டுள்ளது, மேலும் அவர் , இவரை எழுத ஊக்குவித்தாகவும் கூறப்பட்டுள்ளது.

குறிப்புகள்

தொகு
  1. "ABHIMNYU SAMANTA SINGHARA". orissadiary. Archived from the original on 4 October 2016. பார்க்கப்பட்ட நாள் 23 September 2016.
  2. "ଯାଜପୁର ସଂସ୍କୃତି ବିକାଶ ପରିଷଦ". Archived from the original on 3 May 2014. பார்க்கப்பட்ட நாள் 3 May 2014.
  3. "EMINENT LITERARY LUMINARIES OF ORISSA". Orissa Reference Annual - 2004: ୨୯୧. 2004. http://orissa.gov.in/e-magazine/orissaannualreference/ORA-2004/pdf/eminent_literacy_luminaries_of_orissa.pdf. பார்த்த நாள்: 6 February 2014. 
  4. Encyclopaedia Of Indian Literature (Volume One (A To Devo), Volume 1

வெளியிணைப்புகள்

தொகு
  • ஹிஸ்ட்ரி ஆஃப் ஒடிய லிட்டரேசர், மாயதர் மனசிங், வெளியீட்டாளர்: கிரந்தா மந்திரா
  • பிரச்சினா ஒடியா கபிதா சம்பாரா, ஆசிரியர்: ஜதிந்திர மோகன் மொஹந்தி, வெளியீட்டாளர்: சுபர்நரேகா, புவனேஸ்வர்
  • உத்கல லட்சுமி, கங்காதர் கிரந்தபாலி (ஒடியா), தாஸ் பிரதர்ஸ், கட்டாக்-பெர்ஹாம்பூர்- சம்பல்பூர், 3 வது மறுபதிப்பு, 1961
  • ஃபகிர்மோகன் சேனாபதிங்கா ஆமாச்சரிதா (ஒடியா), தேபேந்திர குமார் டாஷ், தேசிய புத்தக அறக்கட்டளை, புது தில்லி, மறுபதிப்பு, 2015, பக் -58
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிமன்யு_சமந்தசின்காரா&oldid=3448430" இலிருந்து மீள்விக்கப்பட்டது