அப்சரித்து வம்சம்

அப்சரித்து வம்சம் (Afsharid dynasty (பாரசீக மொழி: افشاریان‎) இவ்வம்சத்தினர் பாரசீகத்தின் வடகிழக்கில் வாழ்ந்த துருக்கிய பழங்குடி அப்சரித்து இன மக்கள் ஆவார். இராணுவ வலிமை படைத்த அப்சரித்து வம்சத்தினர் பாரசீகத்தில், பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், கிபி 1736ல் நாதிர் ஷா என்ற படைத்தலைவர் தலைமையில், சபாவித்து வம்சத்தின் இறுதி மன்னரை வென்று, தன்னை ஈரானின் மன்னராக அறிவித்துக் கொண்டார்.[5] அப்சரித்து வம்சத்தினர் ஈரானை கிபி 1736 முதல் 1796 முடிய அறுபது ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அப்சரித்து வம்சத்தினருக்குப் பின் குவாஜர் வம்சத்தினர் ஈரானை ஆண்டனர்.

அப்சரித்து வம்சம்
افشاریان
Afshâryan
1736–1796
கொடி of பாரசீகம்
கொடி
அரச சின்னம் of பாரசீகம்
அரச சின்னம்
நாதிர் ஷாவின் ஆட்சிக் காலத்தில் 1741 - 1743ல் அப்சரித்து பேரரசின் வரைபடம்
நாதிர் ஷாவின் ஆட்சிக் காலத்தில் 1741 - 1743ல் அப்சரித்து பேரரசின் வரைபடம்
நிலைபேரரசு
தலைநகரம்மசுகது
பேசப்படும் மொழிகள்
அரசாங்கம்முடியாட்சி
ஷா 
• 1736–1747
நாதிர் ஷா
• 1747–1748
அடில் ஷா
• 1748
இப்ராகிம் அப்சர்
• 1748–1796
சாரூக் அப்சர்
வரலாறு 
• தொடக்கம்
22 சனவரி 1736
• முடிவு
1796
நாணயம்ஈரானிய தோமன் [4]
முந்தையது
பின்னையது
சபாவித்து வம்சம்
ஹோடகி வம்சம்
துராணிப் பேரரசு
கர்டிலி-கேகேத்தி இராச்சியம்
சந்த் வம்சம்
குவாஜர் வம்சம்

பாரசீக அப்சரித்து வம்சத்தின் மன்னர் நாதிர் ஷாவின் ஆட்சிப் பரப்பில் தற்கால ஈரான் உள்ளிட்ட ஆர்மீனியா, ஜார்ஜியா, அசர்பைஜான், உஸ்பெகிஸ்தான், துருக்மெனிஸ்தான் வடக்கு காக்கேசியாப் பகுதிகள், பகுரைன், ஓமன், ஈராக்கின் பகுதிகள், ஆப்கானித்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இருந்தது.

அப்சரித்து வம்சத்தின் நாதிர் ஷாவின் மறைவிற்குப் பின்னர் அவரது பேரரசு சந்த் இராச்சியம், துராணி இராச்சியம், கர்டிலி-காகேத்தி எனும் ஜார்ஜியா மற்றும் காக்கேசியா கானகங்கள் எனப் பலவாகச் சிதறுண்டது. அதனால் அப்சரித்து வம்சத்தினர் தங்கள் இறுதிக் காலத்தில் பாரசீகத்தின் வடகிழக்கில் அமைந்த குராசான் என்று குறுகிய பகுதியை மட்டும் ஆட்சி செய்தனர்.

இறுதியாக குவாஜர் வம்சத்தின் முகமது கான் குவாஜர் என்பவர் 1796ல் அப்சரித்து வம்சத்தின் ஆட்சியை முற்றிலுமாக ஈரானிலிருந்து அகற்றி பாரசீகப் பேரரசை நிறுவினார்.

அப்சரித்து வம்சத்தின் தோற்றம்

தொகு

அப்சரித்து வம்சத்தின் நிறுவனரான நாதிர் ஷா தற்கால ஈரானின் வடகிழக்கில் உள்ள குராசான் பகுதியில் துருக்கிய அப்சரித்து நாடோடிப் பழங்குடி இனத்தில் பிறந்தவர்.[6] நாதிர் ஷா அப்பகுதியில் பழங்குடியினத் தலைவராக உயர்ந்தார்.[7]

நாதிர் ஷா சபாவித்து பேரரசின் பாரசீகப் படையில் சேர்ந்து, 1729ல் பாரசீகத் தலைநகரைக் கைப்பற்ற வந்த ஆப்கானியப் படைகளின் தலைவர் அஷ்ரப் கானை விரட்டியடித்தார்.

உதுமானியப் பேரரசு மற்றும் உருசியப் பேரரசுகளிடம் இழந்த பாரசீகத்தின் நடு ஆசியாவின் பகுதிகளை நாதிர் ஷா மீட்டெடுத்தார்.[8]

உதுமானியப் பேரரசுடன் போர் மற்றும் காக்கேசியப் பகுதிகளை மீண்டும் வெல்லுதல்

தொகு
 
நாதிர் ஷாவின் ஓவியம்


1735ல் நாதிர் ஷா உதுமானியப் பேரரசின் பகுதிகளான தற்கால ஆர்மீனியா மற்றும் ஜார்ஜியாவை வென்றார். உருசியப் பேரரசிடம் இருந்த ஈரானியப் பகுதிகளான தெற்கு காக்கேசியப் பகுதிகளை மீண்டும் பாரசீகப் பேரரசில் இணைத்தார்.

நாதிர் ஷா மன்னராதல்

தொகு

8 மார்ச் 1736ல் பாரசீகத்தின் மன்னராக 8 மார்ச் 1736ல் உதுமானியப் பேரரசு|உதுமானியப் பேரரசின்]] தூதுவர் முன்னிலையில் நாதிர் ஷாவிற்கு முடிசூட்டப்பட்டது.[9]

மொகலாயப் பேரரசின் மீது படையெடுத்தல்

தொகு
 
கைபர் கணவாய் போர்
 
கர்ணால் போரில், நாதிர் ஷா படைகள், முகலாயப் படைகளை வீழ்த்துதல்

வடக்கு பாரசீகத்தின் துருக்கிய அஃப்ஷர் வம்சத்தின் நாதிர் ஷா[10]1738 ஆம் ஆண்டு கந்தகாரை கைப்பற்றி, கஜினி, காபூல், பெசாவர், சிந்து மற்றும் லாகூர் பகுதிகளைக் கைப்பற்றி, பின்னர் சிந்து ஆற்றை கடந்து, முகலாயப் பேரரசின் பகுதியில் புகுந்தார். அப்போது தில்லி முகலாய மன்னர் முகம்மது ஷாவின் படைகளுக்கும், நாதிர் ஷாவின் படைகளுக்கும், 1739 ல் அரியானாவின் கர்ணல் பகுதியில் போர் நடைபெற்றது. இப்போரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொகலாய வீரர்களை, நாதிர் ஷாவின் படைகள் கொன்று குவித்தது. தோல்வியடைந்த முகமது ஷா, நாதிர் ஷாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் விளைவாக கோஹினூர் வைரமும், விலை மதிப்பு மிக்க மயிலாசனமும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும் நாதிர் ஷாவுக்கு கொடுக்கப்பட்டன. முகமது ஷாவின் மகளை, நாதிர் ஷா தன் மகனுக்கு திருமணம் செய்வித்தார்.[11]

நடு ஆசியா பகுதிகளை கைப்பற்றல்

தொகு

இந்தியப் படையெடுப்பிற்குபின் நாதிர் ஷா தன் மகன் ரேசா குவாலி மிர்சாவை பெரும் படைகளுடன் அனுப்பி நடு ஆசியாவின் திரான்சாக்சியானா பகுதிகளை கைப்பற்றினார்.

அப்சரித்து வம்சத்தின் வீழ்ச்சி

தொகு
 
அப்சரித்து வம்ச இராச்சியத்தின் இறுதி காலத்தில் கொரசான் மாகாணம் அளவில் சுருங்குதல்.[12]

1747ல் நாதிர் ஷா இறப்பிற்கு பின் அவரது அண்ணன் மகன் அடில் ஷா, தன்னை பாரசீகப் பேரரசின் மன்னராக அறிவித்துக் கொண்டார். அதே நேரத்தில், முன்னாள் கருவூலத்துறை அமைச்சராக இருந்த அகமது ஷா துரானி தன்னை துராணிப் பேரரசராக அறிவித்துக் கொண்டார். பாரசீகத்தின் கிழக்கு பகுதிகள் மற்றும் ஆப்கானித்தான் ஆகியவை துராணிப் பேரரசின் பகுதிகளானது. பாரசீகத்தின் நடு ஆசியாப் பகுதியின் கர்டிலி-காக்கேத்தி இராச்சியம் ஜார்ஜியர்களின் ஆட்சியின் கீழ் சென்றது.[13]

நடு ஆசியாவின் அசர்பைஜான், ஆர்மீனியா போன்ற பகுதிகள் தன்னாட்சி நாடுகளாக அறிவித்துக் கொண்டது.[14] அப்சரித்து வம்சத்தின் இறுதி காலத்தின் அதன் ஆட்சிப் பரப்பு, கிழக்கு பாரசீகத்தின் கொரசான் மாகாணம் அளவில் சுருங்கியது

1796ல் குவாஜர் வம்சத்தின் முகமது கான் குவாஜர், கிழக்கு பாரசீகத்தின் மசுகது நகரத்தைக் கைப்பற்றி, அப்சரித்து வம்சத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

அப்சரித்து வம்ச பாரசீக ஆட்சியாளர்கள்

தொகு
  • நாதிர் ஷா - (1736–1747)
  • அடில் ஷா - (1747–1748)
  • இப்ராகிம் அப்சர் - (1748)
  • சாரூக் அப்சர் - (1748–1796)

குடும்ப மரம்

தொகு
 
 
 
 
 
 
இமாம் குவாலி
(d. 1704)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
இப்ராகிம் கான்
(d. 1738)
 
 
 
நாதிர் ஷா
(r. 1736–1747)1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
அடில் ஷா
(r. 1747–1748)2
 
இப்ராகிம் அப்சர்
(r. 1748)3
 
ரேசா குவாலி மிர்சா அப்சர்
(b. 1719 – d.1747)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
சாரூக் அப்சர்
(r. 1748–1796)4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நாதிர் அப்சர் மிர்சா
(d. 1803)
 

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Katouzian, Homa (2003). Iranian History and Politics. Routledge. p. 128. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-29754-0. Indeed, since the formation of the Ghaznavids state in the tenth century until the fall of Qajars at the beginning of the twentieth century, most parts of the Iranian cultural regions were ruled by Turkic-speaking dynasties most of the time. At the same time, the official language was Persian, the court literature was in Persian, and most of the chancellors, ministers, and mandarins were Persian speakers of the highest learning and ability.
  2. "HISTORIOGRAPHY vii. AFSHARID AND ZAND PERIODS – Encyclopaedia Iranica". Afsharid and Zand court histories largely followed Safavid models in their structure and language, but departed from long-established historiographical conventions in small but meaningful ways.
  3. Axworthy, Michael (2006). The Sword of Persia. I.B. Tauris. pp. 157, 279. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84511-982-7.
  4. Aliasghar Shamim, Iran during the Qajar Reign, Tehran: Scientific Publications, 1992, p. 287
  5. Sword of Persia: Nader Shah, from Tribal Warrior to Conquering Tyrant : "NADER SHAH, ruler of Persia from 1736 to 1747, embodied ruthless ambition, energy, military billiance, cynicism and cruelty"
  6. Encyclopedia Iranica : "Born in November 1688 into a humble pastoral family, then at its winter camp in Darra Gaz in the mountains north of Mashad, Nāder belonged to a group of the Qirqlu branch of the Afšār Turkmen."
  7. "Encyclopedia Iranica". Archived from the original on 2021-02-05. பார்க்கப்பட்ட நாள் 2018-11-14.
  8. Michael Axworthy Iran: Empire of the Mind (Penguin, 2008) pp.153–156
  9. Fisher et al. 1991, ப. 34-36.
  10. Ernest Tucker (March 29, 2006). "Nāder Shāh 1736-47". Encyclopædia Iranica.  
  11. "வரலாற்றுப் பக்கங்கள் மார்ச் 22: நாதிர் ஷா டெல்லியை கைப்பற்றிய தினம்". Archived from the original on 2015-08-08. பார்க்கப்பட்ட நாள் 2018-11-14.
  12. Perry, Jonothan R. Karim Khan Zand. N.p.: Oneworld, 2006. Ebook, retrieved July 6, 2016. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1851684352
  13. Yar-Shater, Ehsan. Encyclopaedia Iranica, Vol. 8, parts 4-6 Routledge & Kegan Paul (original from the University of Michigan) p 541
  14. Encyclopedia of Soviet law By Ferdinand Joseph Maria Feldbrugge, Gerard Pieter van den Berg, William B. Simons, Page 457

ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Afsharid dynasty
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்சரித்து_வம்சம்&oldid=3671440" இலிருந்து மீள்விக்கப்பட்டது