அப்துல் கனி பராதர்
அப்துல் கனி பராதர் அகுந்து (Abdul Ghani Baradar Akhund; பஷ்தூ மொழி: عبدالغنی برادراخوند; பிறப்பு: 1968)[2][3] ஆப்கானியப் போராளியும், ஆப்கானியத் தாலிபான் இயக்க நிறுவனர்களில் ஒருவரும்,[4] அவ்வியக்கத்தின் தலைவர் முகம்மது உமரின் உதவியாளரும் ஆவார். இவர் சிறப்பாக முல்லா எனவும், உமரினால் 'பராதர்' (சகோதரர்) எனவும் அழைக்கப்படுகிறார்.[5] 2010 பெப்ரவரியில், பராதர் சேவைகளிடை உளவுத்துறை, நடுவண் ஒற்று முகமை (சி.ஐ.ஏ) குழுவினரால் பாக்கித்தானில் வைத்துக் கைது செய்யப்பட்டு,[6] 2018 அக்டோபர் 24 அன்று[7] அமெரிக்காவின் வேண்டுதலுக்கேற்ப விடுவிக்கப்பட்டார்.[8] விடுதலைக்குப் பின்னர், இவர் ஆப்கானியத் தாலிபான் இயக்கத்தில் பெரும் செல்வாக்கு செலுத்தினார்.
அப்துல் கனி பராதர் Abdul Ghani Baradar | |
---|---|
துணை பிரதமர், 2021 ஆப்கானித்தான் இடைக்கால அரசு [1] | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 செப்டம்பர் 2021 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1968 (அகவை 55–56) வீத்மாக், ஒரூஸ்கான் மாகாணம், ஆப்கானித்தான் |
Military service | |
பற்றிணைப்பு | தாலிபான் |
போர்கள்/யுத்தங்கள் | ஆப்கான் சோவியத் போர் ஆப்கான் உள்நாட்டுப் போர் (1996–2001) ஆப்கானித்தான் போர் (2001–இன்று)]] |
ஆப்கானித்தானிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட நோட்டோ துருப்புகள் அமைதியாக வெளியேற தாலிபான்கள் உதவ வேண்டும் என்ற தோகா ஒப்பந்தத்தில் தாலிபான்கள் சார்பில் கையொப்பமிட்டவர் அப்துல் கனி பராதர் ஆவர்.
டைம் இதழின் செல்வாக்கு மிகுந்த நூறுபேர் பட்டியலில் தாலிபன் மூத்த தலைவரும், ஆப்கானிஸ்தானின் துணைப் பிரதமருமான அப்துல் கனி பராதர் பெயரும் இடம் பெற்றுள்ளது. தோகாவில் அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் தாலிபன்கள் சார்பில் பங்கேற்றவரும், நோட்டோ படைகள் வெளியேற்ற உடன்பாட்டில் கையெழுத்திட்டவரும் இவரே. இவர் தாலிபன்களின் அரசியல் முகமாக அவர் பார்க்கப்படுகிறார். அண்மையில் அறிவிக்கப்பட்ட தாலிபன்களின் அரசில் இவருக்கு துணைப் பிரதமர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்தப் பட்டியலில் "ஆப்கானிஸ்தானின் வருங்காலத்தின் அச்சு" அவர் என்றும் அவரைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது.[9]
வாழ்க்கைக் குறிப்பு
தொகுமுல்லா பராதர் 1968-இல், ஆப்கானித்தான் நாட்டின் உருஸ்கான் மாகாணத்தில் உள்ள டேராவுட் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் பிறந்தார் என்று இன்டர்போல் கூறுகிறது. இவர் துரானி வகுப்பைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது. முன்னாள் ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாயும் இதே வகுப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1994இல் தாலிபான் அமைப்பை உருவாக்கிய நான்கு பேரில் முல்லா அப்துல் கனி பராதரும் ஒருவர்.[5] 2001இல், அமெரிக்க தலைமையிலான படைகள் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து தாலிபன்களை ஆட்சியில் இருந்து அகற்றியபோது, அவர் நேட்டோ படைகளுக்கு எதிரான கிளர்ச்சியின் முக்கியத் தலைவராக இருந்தார். தாலிபன்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டபோது அவர் தாலிபனின் துணை பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். முல்லா உமர் உயிருடன் இருந்தபோது, தாலிபன்களுக்கான நிதி திரட்டல் மற்றும் அன்றாட நடவடிக்கைகளின் பொறுப்பாளராக அவர் இருந்தார்.
ஆப்கானிஸ்தானில் நடந்த அனைத்துப் போர்களிலும் அவர் தாலிபன்களின் தரப்பில் தொடர்ந்து முக்கிய பங்கு வகித்தார், குறிப்பாக ஹெராத் மற்றும் காபூல் பகுதிகளில் தீவிரமாக செயல்பட்டார். இவர் தாலிபான்களின் ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகத்தின் இணை நிறுவனர் ஆவார்.[10] இவர் முல்லா முகம்மது உமருக்கு பக்கபலமாக இருந்தவர். இவர் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவின் இரகசிய புலனாய்வு அமைப்புகளான சேவைகளிடை உளவுத்துறை மற்றும் நடுவண் ஒற்று முகமைகளால் பிப்ரவரி 2010-ஆம் ஆண்டில் சிறை பிடிக்கப்பட்டு[6] 24 அக்டோபர் 2018-இல் அமெரிக்காவின் கோரிக்கையின் படி விடுவிக்கப்பட்டார்.[11][8]இவர் அஷ்ரப் கனி அரசை வீழ்த்தி ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகத்தின் தலைவராக வர வாய்ப்புள்ளவர் ஆவார். [12]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Hardliners get key posts in new Taliban government
- ↑ "Beradar, Abdul Ghani". பன்னாட்டுக் காவலகம். Archived from the original on 2012-04-18. பார்க்கப்பட்ட நாள் 2010-02-16.
- ↑ "Why Does Pakistan's Release of a Key Taliban Leader Matter?". thediplomat.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-16.
- ↑ "Profile: Mullah Abdul Ghani Beradar". பிபிசி. 2010-02-17 இம் மூலத்தில் இருந்து 2010-02-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100218050421/http://news.bbc.co.uk/2/hi/south_asia/8517693.stm.
- ↑ 5.0 5.1 Green, Matthew (20 February 2010). "Man in the News: Mullah Abdul Ghani Baradar". பைனான்சியல் டைம்ஸ். https://www.ft.com/content/4b922166-1d8d-11df-a893-00144feab49a.
- ↑ 6.0 6.1 "Taliban commander Mullah Beradar 'seized in Pakistan'". BBC News. 2010-02-16 இம் மூலத்தில் இருந்து 18 February 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100218044645/http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8517375.stm.
- ↑ Mashal, Mujib; Shah, Taimoor (October 25, 2018). "Taliban Deputy Is Released Amid Push for Afghan Peace Talks". த நியூயார்க் டைம்ஸ். Archived from the original on October 28, 2018. பார்க்கப்பட்ட நாள் October 28, 2018.
- ↑ 8.0 8.1 "Pakistan frees Taliban co-founder at US request; will play constructive role in Afghan peace initiative". National Herald. 9 February 2019.
- ↑ நரேந்திர மோதி, பைடன் ஆகியோருடன் தாலிபன் தலைவர் பெயரும் உலகின் செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் இடம் பெற்றது
- ↑ "Profile: Mullah Abdul Ghani Beradar". பிபிசி. 2010-02-17 இம் மூலத்தில் இருந்து 2010-02-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100218050421/http://news.bbc.co.uk/2/hi/south_asia/8517693.stm.
- ↑ Mashal, Mujib; Shah, Taimoor (October 25, 2018). "Taliban Deputy Is Released Amid Push for Afghan Peace Talks". த நியூயார்க் டைம்ஸ். Archived from the original on October 28, 2018. பார்க்கப்பட்ட நாள் October 28, 2018.
- ↑ தாலிபன் வசமான ஆப்கானிஸ்தானை ஆளப் போகும் தலைவர் யார்?
வெளி இணைப்புகள்
தொகு- 2009 Statement on official Taliban website
- Interview with the Afghan Islamic Press
- Interview with நியூஸ்வீக்