அப்பல்லோ 17 திட்டமானது அமெரிக்க அப்பல்லோ திட்டத்தின் மனிதர் பயனித்த பதினோராவது மற்றும் கடைசி திட்டமாகும். இது திசம்பர் 7, 1972 அன்று 12 : 33 a.m. EST-ல் ஏவப்பட்டது. மூவர் அடங்கிய பயணக்குழுவின் ஆணையாளர் யூகன் செர்னான், கட்டளைக் கல விமானி ரொனால்டு எவான்சு மற்றும் நிலவுக் கல விமானி காரிசன் சுமிட் ஆவர். மிக அண்மையில் நிலவில் இறங்கிய, கடைசியாக நிலவில் இறங்கிய பயணம் அப்பல்லோ 17 ஆகும். மேலும் தாழ்நிலை புவி சுற்றுப்பாதை தாண்டிய மிக அண்மைய பயணமும் இதுவேயாகும்.

அப்பல்லோ 17
திட்டச் சின்னம்
திட்ட விபரம்[1]
திட்டப்பெயர்: அப்பல்லோ 17
விண்கலப் பெயர்:கசேக: அமெரிக்கா
நிக: சேலஞ்சர்
கட்டளைக் கலம்:CM-114
mass 12,874 pounds (5,840 kg)
சேவைக் கலம்:SM-114
mass 54,044 pounds (24,514 kg)
நிலவுக் கலம்:LM-12
mass 36,724 pounds (16,658 kg)
உந்துகலன்:சாடர்ன் V SA-512
அழைப்புக்குறி:Command module:
America
Lunar module:
Challenger
ஏவுதளம்:LC 39A
கென்னடி விண்வெளி மையம்
புளோரிடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
ஏவுதல்: {{{launch}}}
சந்திரனில் இறக்கம்:திசம்பர் 11, 1972
19:54:57 UTC
Taurus-Littrow
20°11′27″N 30°46′18″E / 20.19080°N 30.77168°E / 20.19080; 30.77168 (Apollo 17 landing)
(based on the IAU
Mean Earth Polar Axis ஆள்கூற்று முறைமை)
சந்திரனில் இருந்த நேரம்:3 d 02 h 59 m 40s
நிலவு மாதிரி நிறை:110.52 kg (243.7 lb)
இறக்கம்: திசம்பர் 19, 1972
19:24:59 UTC
South Pacific Ocean
17°53′S 166°07′W / 17.88°S 166.11°W / -17.88; -166.11 (Apollo 17 splashdown)
கால அளவு: {{{duration}}}
சந்திரனைச் சுற்றிய நேரம்:6 d 03 h 43 m 37 s
பயணக்குழுப் படம்
இடமிருந்து வலம்: சுமிட், செர்னான் (அமர்ந்திருப்பவர்), எவான்சு
இடமிருந்து வலம்: சுமிட், செர்னான் (அமர்ந்திருப்பவர்), எவான்சு

அப்பல்லோ 17- ஆனது நிலவில் மனிதர் இறங்கிய ஆறாவது பயணத்திட்டமாகும். இதுவே முதன்முறையாக இரவில் ஏவப்பட்ட மனிதர் பயணித்த அமெரிக்க பயணத்திட்டமாகும். மேலும், இதுவே சாடர்ன் V ஏவூர்தியின் கடைசி மனிதர் சென்ற பயணமாகும். இது ஒரு ஜெ-திட்ட பயணமாகும். அதாவது, மூன்று நாட்கள் நிலவில் தங்கி ஆய்வு செய்தல், மேம்படுத்தப்பட்ட அறிவியல் செயல்திறன்கள், மற்றும் மூன்றாவது நிலவு உலவு வாகனம் பயன்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. எவான்சு நிலவு சுற்றுப்பாதையில் கட்டளை-சேவைக் கலனில் தங்கி நிலவைச் சுற்றி வந்தபோது, செர்னான் மற்றும் சுமிட் மூன்று நாட்களுக்கும் மேலாக நிலவின் டாரசு-லிட்ரோ பள்ளத்தாக்கில் தங்கி ஆய்வுகள் மேற்கொண்டனர். மூன்று முறை ஈவிஏ எனப்படும் நிலவு நடையை மேற்கொண்டனர். அத்தகைய நிலவு நடையின்போது நிலவு கற்களை சேகரித்ததோடு பல ஆய்வுக்கருவிகளையும் நிலவில் நிறுவிவிட்டு வந்தனர். 12 நாட்கள் நிலவுப் பயணத்துக்குப் பின்னர் திசம்பர் 19 அன்று செர்னான், எவான்சு மற்றும் சுமிட் ஆகியோர் பூமிக்குத் திரும்பினர்.

அப்பல்லோ 17 ஏற்கனவே செய்யப்பட்டிருந்த பல சாதனைகளைத் தகர்த்தது, மனிதர் சென்ற மிக நீண்ட நிலவுப் பயணம், நிலவின் தரையில் மிக நீண்ட கலனுக்கு வெளியேயான ஆய்வு (ஈவிஏ), மிக அதிகமான நிலவு மாதிரிகளைக் கொண்டுவந்தது.

உசாத்துணைகள் தொகு

  1. Richard W. Orloff. "Apollo by the Numbers: A Statistical Reference (SP-4029)". NASA. Archived from the original on 2011-03-16. பார்க்கப்பட்ட நாள் 2012-05-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பல்லோ_17&oldid=3671462" இலிருந்து மீள்விக்கப்பட்டது