அப்பாஸ் அலி

இந்திய விடுதலைப் போராட்ட வீரர், ஆசாத்து இந்து

கேப்டன் அப்பாஸ் அலி நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய சுதந்திர போராட்ட வீரர். கேப்டன் அப்பாஸ் அலி பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுக்கும், ஆங்கிலேய ராணுவத்திற்கும் எதிராக கலகம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஆங்கிலேய அரசு சிறையில் அடைத்து 1945ல் மரண தணடனை வழங்கியது. பின்னர் 1947ல் இந்திய விடுதலைக்கு பிறகு இந்திய அரசால் விடுதலை செய்யப்பட்டார்.

அப்பாஸ் அலி
பிறப்பு(1920-01-03)3 சனவரி 1920
Bulandshahr, உத்தரப் பிரதேசம், இந்தியா
இறப்பு11 அக்டோபர் 2014(2014-10-11) (அகவை 94)
அலிகார், இந்தியா
சார்புஆசாத் இந்த்
சேவை/கிளைஇந்தியத் தேசிய இராணுவம்
சேவைக்காலம்1939–1947
தரம்கேப்டன்

இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை பிரகடனத்தை எதிர்த்து லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணனுடன் தேச நலனுக்காக மீண்டும் போராடிக் கைது செய்யப்பட்டு, 1977ல் விடுதலை செய்யப்பட்டார். கேப்டன் அப்பாஸ் அலி 11-10-2014 ல் அலிகாரில் 94வது வயதில் காலமானார்.[1].[2].

மேற்கோள்கள் தொகு

  1. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய சுதந்திர போராட்ட வீரர் மறைவு
  2. http://articles.economictimes.indiatimes.com/2014-10-11/news/54899722_1_aligarh-muslim-university-freedom-fighter-captain-abbas-ali
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பாஸ்_அலி&oldid=2227777" இலிருந்து மீள்விக்கப்பட்டது