அப்பியாசம்

அப்பியாசம் (Abhyāsa) என்பது இந்து சமயத்தில் பின்பற்றப்படும் மனக்கட்டுப்பாட்டு பயிற்சியாகும். நீண்ட காலமாக இப்பயிற்சி ஓர் ஆன்மீகப் பயிற்சியாக வழக்கமாக தொடர்ச்சியாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. தன்னுடைய யோக சூத்திரங்களில் பதஞ்சலி மகரிசி யோகாவைப் பற்றி முறையாக கூறியுள்ளார். இவர் இயற்றிய பதஞ்சலி யோக சூத்திரம்[1] எனும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது.

வைராக்கியத்துடன் மனதை அடக்குவதற்கும் யோகா மிக அவசியமானதென்று பகவத்கீதையில் கடவுளாகக் கருதப்படும் கிருட்டிணரும் இதன் முக்கியத்துவத்தை விளக்கியுள்ளார் [2]. பயிற்சி (அப்பியாசம்) மற்றும் வைராக்கியம் என்ற இரண்டு நடைமுறைகளும் உணர்வுகளைக் கட்டுப்படுத்த தேவையானவை என்று யோக சூத்திரம்1:12 கூறுகிறது [3] நீடித்த அமைதி நிலைக்கு பயிற்சியே உரிய வழிமுறையாகும் என பதஞ்சலியின் யோக சூத்திரத்தை சிப் ஆட்ரான்பிட் மொழிபெயர்த்துள்ளார்[3]

மேற்கோள்கள்தொகு

  1. The Yoga Sutras of Patanjali
  2. "Abhyasa". Experience Festival. 28 May 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 February 2013 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |deadurl= (உதவி)
  3. 3.0 3.1 "Abhyasa". Blurbwire. 2014-10-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 February 2013 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி)

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பியாசம்&oldid=2616470" இருந்து மீள்விக்கப்பட்டது