அப்புச்சி கிராமம்

அப்புச்சி கிராமம் ( ஆங்கிலம்:Appuchi Graamam ) 2014 இல் வெளிவந்த அறிவியல் புனைகதை தமிழ் திரைப்படம் வி ஆனந்த் என்பவர் இதை இயக்கியுள்ளார்.[1][2] இதில் புதுமுகங்கள் பிரவீண் குமார் மற்றும் அனுஷா நாயக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சுஜா வருணே, சுவஸ்திகா மற்றும் நாசர் ஆகியோரும் உடன் நடித்திருந்தனர். ஐ கேட்ச் மல்டி மீடியாவின் கீழ் விஷ்ணு முரளி மற்றும் செந்தில் குமார் ஆகியோர் தயாரித்தனர். இந்தப் படத்தின் இசையமைப்பை விஷால் சந்திரசேகர் மேற்கொண்டுள்ளார். மற்றும் ஜி. கே. பிரசாத் ஒளிப்பதிவு செய்தார். இந்த படத்தின் செயற்கைக்கோள் உரிமைகள் பாலிமர் தொலைக்காட்சிக்கு விற்கப்பட்டன

நடிகர்கள் தொகு

தீரனாக (தீரா) பிரவீண் குமர்
விக்னேசு குமாராக விக்னேஸ்வரன் பழனிசாமி
பழனி என்கிற மரண மணியாக கணேசன்
சங்கமித்ராவாக அனுஷா நாயக்
சுஜா வருணே
செல்வியாக சுவஸ்திகா
முதலமைச்சராக நாசர்
இஸ்ரோ விஞ்ஞானியாக கிட்டி
நல்லமுத்துவாக ஜி. எம். குமார்
சின்னுசாமியாக ஜோ மல்லூரி
கஞ்சா கறுப்பு
ஜியார் மரியான்
சிங்கம்புலி
மீரா கிருஷ்ணன்
கும்கி ஜோசப்
பிரகாஷ்
விஷ்ணு முரளி
கே. தவசி
கௌதம்
சீனி அம்மாள்

தயாரிப்பு தொகு

அக்டோபர் 2013 இல், இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸின் முன்னாள் கூட்டாளியான வி ஆனந்த், அப்புச்சி கிராமம் என்ற அறிவியல் புனைகதைத் திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார் என்று முதலில் ஊடகங்களில் செய்தி வெளியானது.[3] ஆனந்த் தனது குழந்தை பருவத்தில் படித்த ஈரோட்டுக்கு அருகிலுள்ள ஒரு சிறிய கிராமத்தைப் பற்றி செய்தித்தாள் கட்டுரையால் ஈர்க்கப்பட்டார். 2008 இல் இதன் கதையை எழுதினார். இருப்பினும், இது ஒரு அறிவியல் புனைகதைத் திரைப்படம் என்பதால் தயாரிப்பாளர்கள் இந்த திட்டத்திற்கு நிதியளிக்க தயாராக இல்லை, மேலும் இது மிகவும் பொருட்செலவு பிடிக்கும், என்றும் மக்கள் இதன் கருத்தை புரிந்து கொள்ள மாட்டார்கள் என்றும் அவர்கள் நம்பினர்.[4] கனடா தமிழ் தயாரிப்பாளர் விஷ்ணு முரளி தனது சென்னையைச் சேர்ந்த கூட்டாளர் செந்தில்குமருடன் சேர்ந்து இந்த திட்டத்திற்கு நிதியளிக்க முன்வந்தார்.[5]

இந்த படம் ஒரு குறைந்த பொருட்செலவில் என்பதை "பெரும்பாலானவர்கள் அறிந்தால் ஆச்சரியப்படுவார்கள்" என்று ஆனந்த் கூறினார்.[4] முராலி இந்த படத்தை "அறிவியல் மற்றும் நகைச்சுவை கலந்த புனைகதை " என்று கூறும்போது,[5] இது உண்மையில் அறிவியல் புனைகதை கூறுகளைக் கொண்ட ஒரு கிராமத்தில் நடக்கும் கதையாகும் என்று ஆனந்த் குறிப்பிட்டார். ஆர். கே. நாராயணனின்' மால்குடி எனும் கற்பனைக் கிராமத்தைத் தழுவி எழுதப்பட்ட வழியில் படமாக்கப்பட்ட படம் என்று அவர் மேலும் கூறினார்.[4] தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் இருவரும் இது முழு நீள அறிவியல் புனைகதை அல்ல, வணிக ரீதியான படம் என்று மேலும் தெரிவித்தனர்.[4][5]

ஏ. ஆர். ரகுமானின் இசைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் விஷால் சந்திரசேகர் இசை அமைப்பாளராக ஒப்பந்தாமானார். அதே நேரத்தில் "ஸ்லம்டாக் மில்லியனர்" மற்றும் "தி பெஸ்ட் எக்ஸோடிக் மேரிகோல்ட் ஹோட்டல்" உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் உதவி ஒளிப்பதிவாளாராக பணியாற்றிய ஜி. கே. பிரசாத் ஒளிப்பதிவாளராக நியமிக்கப்பட்டார். .[5][6] கன்னட நடிகையும் இசைக்கலைஞருமான அனுஷா நாயக் பெண் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானதன் மூலம் அவரது தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.[7] இப்படம் பெரும்பாலும் பொள்ளாச்சி மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டது.[5]

ஒலிப்பதிவு தொகு

இப்டத்தின் ஒலிப்பதிவு இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் மேற்கொண்டுளார். இந்தப் படத்தின் இசைத் தொகுப்பு 2014 மே 4 அன்று சத்யம் சினிமாஸில் வெளியிடப்பட்டது.[8] தி டைம்ஸ் ஆஃப் இந்தியா அதன் மதிப்பாய்வில் இசைக்கு 3 நட்சத்திரங்களைக் கொடுத்து, "ஆல்பம் உற்சாகமானது, ஆம், ஆனால் முன்னேற்றத்திற்கு இன்னும் சில இடங்கள் உள்ளன என்ற உணர்விலிருந்து நீங்கள் தப்ப முடியாது" என்று எழுதியது.[9]

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்புச்சி_கிராமம்&oldid=3671977" இருந்து மீள்விக்கப்பட்டது