அப்ரமாஞ்சி
அப்ரமாஞ்சி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Dipsacales
|
குடும்பம்: | Valerianaceae
|
பேரினம்: | Valeriana
|
இனம்: | V. wallichii
|
அப்ரமாஞ்சி (Valeriana wallichii) என்றழைக்கப்படும் இந்த மூலிகைத் தாவரம் இந்தியாவை தாயகமாகக் கொண்டது. இத்தாவரத்தை மருந்திற்காக, மத்திய, மற்றும் கிழக்கு ஐரோப்பாவிலும், இந்தியாவின் மேற்கு இமாலயம், மற்றும் காசுமீரிலும் பயிரிடப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 2400–2700 மீட்டர் உயரத்தில் இம்மூலிகைத் தாவரங்கள் வளருகின்றன. விதைகள் மூலம் வசந்த காலத்தில் பயிரிடப்படும் இத்தாவரத்தின் தரையடித்தண்டு 2 ஆண்டுகளுக்குப் பின்னர் இலையுதிர் காலத்தில் சேகரிக்கப்படுகிறது.[1]
வேதிப்பொருட்கள்
தொகுஅப்ரமாஞ்சி தாவரத்தில் எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் உள்ளன. போர்னைல் அசிடேட் (Phenyl acetate), பீட்டர் கேரிபில்லின், இரிடாய்டுகள் (iridoid) , வெலிபோட்டிரியேட்கள், வால்டிரேட், ஐசோவால்டிரேட் மற்றும் ஆல்கலாய்டுகள் (alkaloid) (நைதரசன் கொண்ட வளைய மூலக்கூற்று தாவர வேதிப்பொருள்), ஆகியவை உள்ளன. இவை மருத்துவ குணங்களின் அடிப்படையாகும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "அப்ரமாஞ்சி". tamil.boldsky.com (தமிழ்). September 15, 2011. பார்க்கப்பட்ட நாள் 2016-09-20.