அமராவதி ஆறு

தமிழ்நாட்டில் உள்ள ஒரு ஆறு

அமராவதி ஆறு (Amaravati River) கரூர் மாவட்டம், திருப்பூர் மாவட்டம் இரண்டையும் வளப்படுத்தும் காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாகும். பழனி மலைத்தொடருக்கும் ஆனைமலைத்தொடருக்கும் இடையில் உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகிறது. இதனுடன் பாம்பாறு, சின்னாறு மற்றும் தேவாறு ஆகியவை இணைந்து கொள்கின்றன. இது அமராவதி அணை மூலம் தடுக்கப்பட்டு அமராவதி நீர்த்தேக்கம் தோன்றுகிறது. அங்கிருந்து வடகிழக்காக செல்லுகையில் கொழுமம், அருகில் குதிரை ஆறு இணைந்த பின் கொமரலிங்கம்,தாராபுரம்,சின்னதாராபுரம் பகுதி வழியாக பாய்ந்து கரூர் அருகே காவிரியுடன் கலக்கிறது.[2] உபநதிகள் சண்முகா நதி, குடகனாறு, உப்பாறு ஆகியன. ஆண் பொருநை என்ற பெயரும் அமராவதி ஆறுக்கு உண்டு

அமராவதி ஆறு
ஆன்பொருநை
Map River Amaravathi TA.svg
அமராவதி ஆறு மற்றும் அதன் உபநதிகள்
பெயர்க்காரணம்ஆன்பொருநை = ஆன் + பொருநை (புறநானூறு, 36)
பெயர்Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help)
அமைவு
நாடு இந்தியா
பகுதிகொங்கு நாடு
மாவட்டம்திருப்பூர் மாவட்டம், கரூர் மாவட்டம்
சிறப்புக்கூறுகள்
மூலம்ஆனைமலை குன்றுகள், சின்னாறு, பாம்பாறு at
10°21′2″N 77°14′14″E / 10.35056°N 77.23722°E / 10.35056; 77.23722
 ⁃ ஏற்றம்473 மீட்டர்கள் (1,552 ft)
முகத்துவாரம்கரூர் at
10°57′36″N 78°4′53″E / 10.96000°N 78.08139°E / 10.96000; 78.08139
 ⁃ உயர ஏற்றம்
360 அடிகள் (110 m)
நீளம்282 கிலோமீட்டர்கள் (175 mi)
வடிநில சிறப்புக்கூறுகள்
அடையாளங்கள்இடுக்கி மாவட்டம், கேரளா,
தாராபுரம், கரூர்
நீர்தேக்கங்கள்8,380 சதுர கிலோமீட்டர்கள் (3,240 sq mi)[1]

பழங்காலப் பெயர்தொகு

சங்ககாலத்திற்குப் பின் இந்த ஆற்றுக்கு ஆம்ரபி என பெயர் வழங்கி வந்துள்ளது. கொழுமம், அருகில் இந்த ஆற்றுடன் அசுவநதி குதிரை ஆறு|குதிரையாற்றுடன் இணைந்து வடக்காக செல்கிறது. [3]

சங்ககால தமிழ்ப்பெயர்: ஆன்பொருநை (ஆநிரைகள் நிறைய இவ்வாற்றங்கரைகளில் காணப்பட்டதால் இப்பெயர்)[4]

காட்சியகம்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Integrated Hydrological Data Book" (PDF). India. p. 76. 20 மே 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 25 March 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி)
  2. அமராவதி ஆறு - தமிழ் இணையக் கல்விக் கழகம்
  3. கொழுமம், கொமரலிங்கம்- ஐவர்மலை-முனைவர். தி.மனோன்மணி- தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு-2007-
  4. agarathi.com. "ஆன்பொருநை | அகராதி | Tamil Dictionary". agarathi.com. 2022-10-30 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமராவதி_ஆறு&oldid=3604065" இருந்து மீள்விக்கப்பட்டது