அமிர்தம்

(அமுதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


இந்து தொன்மவியலின் அடிப்படையில் அமிர்தம் (ஒலிப்பு) (சமஸ்கிருதம்:अमृत;அமிர்தா) என்பது அமரத்துவத்தை தருகின்ற உணவாகும். இதற்கு அமுதம், அமிழ்தம், தேவாமிர்தம், தேவருணவு என்றும் பெயருண்டு.

தேவ உலகத்தில் வாழுகின்ற தேவர்களும், கடவுள்களும் அமிர்தத்தினை உணவாக அருந்துவதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.

அமரத்துவத்தினை விரும்பிய தேவர்களும், அரக்கர்களும் பாற்கடலை கடைந்து அமுதத்தினைப் பெற்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிர்தம்&oldid=3538983" இலிருந்து மீள்விக்கப்பட்டது