அமோனியம் எக்சாபுளோரோபாசுபேட்டு
வேதிச் சேர்மம்
அமோனியம் எக்சாபுளோரோபாசுபேட்டு (Ammonium hexafluorophosphate) என்பது NH4PF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் நீரில் கரையக்கூடிய திண்மமாக இச்சேர்மம் உள்ளது. அமோனியம் நேர்மின் அயனியும் எக்சாபுளோரோபாசுபேட்டு எதிர்மின் அயனியும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. வலிமை குறைந்த ஒருங்கிணைப்பு எதிர்மின் அயனியான எக்சாபுளோரோபாசுபேட்டு அயனியைத் தருகின்ற ஒரு மூலமாக அமோனியம் எக்சாபுளோரோபாசுபேட்டு பயன்படுத்தப்படுகிறது. தூய்மையான புளோரைடுடன் பாசுபரசு பெண்டாகுளோரைடைச் சேர்த்து வினையில் ஈடுபடச் செய்தால் அமோனியம் எக்சாபுளோரோபாசுபேட்டு உருவாகிறது. பாசுபோநைட்ரிலிக் குளோரைடிலிருந்தும் இதைப் பெறலாம் :[1]
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
அமோனியம் எக்சாபுளோரோபாசுபேட்டு
| |||
இனங்காட்டிகள் | |||
16941-11-0 | |||
ChemSpider | 7969679 | ||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
பப்கெம் | 9793912 | ||
| |||
பண்புகள் | |||
(NH4)[PF6] | |||
வாய்ப்பாட்டு எடை | 163.00264 | ||
தோற்றம் | வெண் திண்மம் | ||
அடர்த்தி | 2.180 கி/செ.மீ3 | ||
74.8 கி/100 மி,லி (20 °செல்சியசு) | |||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | Oxford MSDS | ||
ஈயூ வகைப்பாடு | தீங்கானது (Xn); அரிக்கும் (C) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
- PCl5 + 6 NH4F → NH4PF6 + 5 NH4Cl
- PNCl2 + 6 HF → NH4PF6 + 2 HCl.
மேற்கோள்கள்
தொகு- ↑ W. Kwasnik (1963). "Ammonium Hexafluorophosphate (V)". In G. Brauer (ed.). Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Vol. 1. NY, NY: Academic Press. pp. 195–196.