அம்பர் (ஊர்)

அம்பர் என்பது ஓர் ஊர்.

அம்பர்கிழான் அருவந்தை தொகு

அம்பர் நகரிலிருந்த சங்ககால வள்ளல் அருவந்தை

அரிசில் ஆறு தொகு

காவிரி ஆற்றின் கிளையாக ஓடியது அரிசிலாறு. அதன் கரையில் இந்த ஊர் இருந்தது.

அம்பர் நகரப் போர் தொகு

அம்பர் என்னும் ஊர் அரிசில் ஆற்றங்கரையில் இருந்தது. இதன் அரசன் கிள்ளி என்னும் சோழ மன்னன். இவன் இசைவெங்கிள்ளி என்று போற்றப்படுகிறான்.இவன் யானைமேல் வந்து போரிட்டான். இந்த ஊரைப் பாண்டில் என்றும் கூறப்படுகின்ற பாண்டிய மன்னன் படையெடுத்து வந்து தாக்கினான். போரில் கிள்ளி வெற்றி பெற்றான். (சல்லியங்குமரனார் நற்றிணை 141)

சேந்தன் தொகு

சங்ககாலத்தில் சேந்தன் என்னும் அரசன் ஒருவன் ஆண்டுவந்தான். அவனது பெயர் கொண்ட மற்றொரு சேந்தன் கி.பி. எட்டடாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்தான். இந்த எட்டாம் நூற்றாண்டுச் சேந்தன் பெயரில் சேந்தன் திவாகரம் என்னும் என்னும் நிகண்டு நூலைத் திவாகர முனிவர் என்பவர் இயற்றியுள்ளார். இந்த நூலில் இவர் பொறை என்னும் சொல்லுக்குப் பொருள் கூறும்போது 'அம்பல் நாட்டை ஆளும் சேந்தன் என்னும் அரசனின் பொறுமை' [1] எனக் குறிப்பிட்டுள்ளார். இங்குக் குறிப்பிடப்பட்டுள்ள அம்பல் என்பது அம்பர் நாட்டைக் குறிக்கும்.

அடிக்குறிப்பு தொகு

  1. அம்பர் சேந்தனோடு உலவிய பொறுமை
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பர்_(ஊர்)&oldid=3696791" இலிருந்து மீள்விக்கப்பட்டது