அம்பாசமுத்திரம் அகத்தீசுவரர் கோயில்

அம்பாசமுத்திரம் அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில் என்பது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அமைந்துள்ளது.[1] இச்சிவாலயத்தின் மூலவர் அகத்தீசுவரர் என்றும், அம்பிகை லோபமுத்திரை அம்பாள் என்றும் அழைக்கப்படுகிறார்.

திருவிழாக்கள்

தொகு
  • பங்குனி பிரம்மோற்சவம்
  • ஆனி வருசாபிசேகம்
  • நவராத்திரி
  • திருக்கார்த்திகை
  • திருவாதிரை
  • சிவராத்திரி

தலவரலாறு

தொகு

கைலாயத்தில் சிவபெருமான் பார்வதி திருமணம் நடைபெற இருந்தது. அதற்காக அனைவரும் வடதிசைக்கு வந்தார்கள். வடதிசை உயர்ந்தமையால், சிவபெருமான் அகத்தியரை அழைத்து தென்திசைக்கு செல்லுமாறு கூறினார். அகத்தியர் சிவபெருமானின் திருமணத்தினை காண இயலாமல் போகுமென வருந்தினார். ஆனால் சிவபெருமான் அகத்தியருக்கு தென்னகத்திலேயே திருமணக் கோலத்தில் காட்சிதருவேன் என்று கூறினார். காசிபநாதரை தரிசித்துவிட்டு பொதிகை மலைக்கு செல்லும் வழியில் இந்த ஊரை அடைந்தார். அகத்தியரை தரிசிக்க வந்த பக்தரிடம் தனக்கு உணவுதருமாறு வேண்டினார். சிவபக்தரும் உணவு எடுத்துவர சென்றார். அவர் வருகை தாமதமாகவே அகத்தியர் பொதிகை மலைக்கு சென்றுவி்ட்டார்.

சிவபக்தர் அகத்தியருக்காக அன்னமும், அரைக்கீரையும் சமைத்து எடுத்துவந்தார். அகத்தியரைக் காணமல் அவருக்காக தவம் செய்தார். அதனால் சிவபக்தருக்காக அகத்தியர் காட்சி தந்தார்.இக்கோவில் அம்பாசமுத்திரம் செங்குந்தர் மரபினரால் நிர்வகிக்கப்படுகிறது.

ஆதாரங்கள்

தொகு
  1. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்