அம்பிகாபதி (1937 திரைப்படம்)

அம்பிகாபதி 1937 ஆம் ஆண்டு வெளிவந்த 52 வாரங்கள் ஓடிய வரலாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும். சேலம் சங்கர் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் எம். எஸ். தொட்டண்ணா செட்டியார் தயாரித்து, எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், பி. வி. ரெங்காச்சாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2] இப்படத்துக்கு இளங்கோவன் எழுதிய உரையாடல் அனைவரையும் கவரும்வகையில் அழகுத் தமிழில் இருந்தது. இது தமிழ் சினிமா உரைநடையில் பெருமளவு மாற்றத்தைக் கொண்டுவந்தது. இப்படம் வருவதற்கு முன்பு மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டுவந்த தமிழ் சினிமாவின் உரையாடல் நல்ல தமிழுக்கு மாறத் துவங்கியது.

அம்பிகாபதி
இயக்கம்எல்லிஸ் ஆர். டங்கன்
தயாரிப்புஎம். எஸ். தொட்டண்ணா செட்டியார்
சேலம் சங்கர் பிலிம்ஸ்
கதைதிரைக்கதை : டி. ஆர். எஸ். மணி
உரையாடல் : இளங்கோவன்
இசைபாபநாசம் சிவன்
நடிப்புஎம். கே. தியாகராஜ பாகவதர்
பி. வி. ரெங்காச்சாரி
செருக்களத்தூர் சாமா
என். எஸ். கிருஷ்ணன்
டி. எஸ். பாலையா
எம். ஆர். சந்தானலட்சுமி
கொன்னப்ப பாகவதர்
டி. ஏ. மதுரம்
எஸ். எஸ். ராஜமணி
பி. ஆர். மங்களம்
பி. ஜி. வெங்கடேசன்
படத்தொகுப்புஎல்லிஸ் ஆர். டங்கன்
வெளியீடுதிசம்பர் 11, 1937
நீளம்19000 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்
அம்பிகாபதி திரைப்படத்தை இயக்குகிறார் டங்கன்

ராஜா மகளை புலவரின் மகன் காதலிப்பதே கதை. இதை ரோமியோ ஜூலியட் வடிவில் படமாக்கினார் எல்லிஸ் டங்கன். இப்படம் கவித்துவமாக எடுக்கப்பட்டதால் பலத்த வரவேற்பு பெற்றது. தியாகராஜ பாகவதர், கொன்னப்ப பாகவதர், எம்.ஆர். சந்தானலட்சுமி நடித்தனர். இதில் சிறுகளத்தூர் சாமா, ரங்காச்சாரி தவிர கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் முக்கியமானவர். இப்படம் ஒரு ஆண்டு காலம் ஓடியது. ஆங்கிலப் படங்களுக்கு இணையான முத்தக் காட்சியும் இப்படத்தில் இடம்பெற்றிருந்தது. தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்ற முதல் முத்தக் காட்சி இதுவாகும்.

துணுக்குகள்தொகு

சான்றாதாரங்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).
  2. "Encyclopedia of Indian Cinema". 29 அக்டோபர் 2016 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு