அம்மா உணவகம்
அம்மா உணவகம் (ஆங்கில மொழி: Amma Unavagam) என்பது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை,சென்னை மாநகராட்சி மற்றும் தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகள் மூலமாக இயங்கும் மலிவு விலை உணவகத்திற்கு இடப்பட்டுள்ள பெயராகும். இது சென்னையின் அனைத்து பகுதிகளிலும் வாழும் ஏழை எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் பயன்பெறும் வகையில் திறக்கப்பட்டுள்ளது.
வகை | தமிழ்நாடு அரசு உணவகம் |
---|---|
வகை | தென்னிந்திய சைவ உணவு முறைகள் |
நிறுவுகை | பெப்ரவரி 19, 2013 |
நிறுவனர்(கள்) | ஜெ. ஜெயலலிதா |
தலைமையகம் | சென்னை, இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | தமிழ் நாடு |
தொழில்துறை | உணவகச் சேவைகள் |
உற்பத்திகள் | உணவு |
சேவைகள் | மலிவு விலை உணவுகள் |
வருமானம் | இலாப நோக்கற்றது |
உரிமையாளர்கள் | உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, தமிழ்நாடு அரசு |
பணியாளர் | 4,500[1] |
மலிவு விலை உணவகங்கள்
தொகுசென்னை மாநகராட்சியின் திட்டமான மலிவு விலை உணவகம் திட்டம் 2013 மார்ச் 19ஆம் நாள் சென்னை-சாந்தோமில் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பெற்றது. அதே நாளில் 15 இடங்களில் மலிவு விலை உணவங்கள் செயல்பாட்டிற்கு வந்தன. அரசு பொது மருத்துவமனை வளாகங்களில் அம்மா உணவகம் திறக்கப்பட வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில் முதற்கட்டமாக 20.11.2013 அன்று சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்திலும், இரண்டாம் கட்டமாக 21.2.2014 அன்று அரசு ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை வளாகங்களிலும் அம்மா உணவகங்களை ஜெயலலிதா திறந்து வைத்தார்.இந்த உணவகங்களில் இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. [2]
பெயர் மாற்றம்
தொகுமலிவு விலை சிற்றுண்டி உணவகம் என்ற பெயரை 'அம்மா உணவகம்' என்று மாற்றுவதற்கு சென்னை மாநகராட்சியில் தீர்மானம் 2013 மார்ச் 23ம் தேதியில் நிறைவேற்றப்பட்டது. அப்போது மலிவு விலை உணவகங்களின் எண்ணிக்கை எழுபத்தி மூன்றாக (73) இருந்தன. [3]
முன்னோடியாகத் திகழ்ந்த திட்டம்
தொகுஅம்மா உணவகம் என்ற திட்டம் இந்தியாவிலேயே முதன்முதலில் தமிழகத்தில் தான் முதலமைச்சர் புரட்சி தலைவி ஜெ. ஜெயலலிதா அவர்களால் துவங்கப்பட்டது. இந்த திட்டம் தேர்தல் அறிக்கையில் கூட இடம்பெறவில்லை. சொல்லாத திட்டத்தையும் ஏழை எளிய மக்கள் பசியை போக்கும் வகையில் இந்த திட்டம் புரட்சி தலைவி அம்மா அவர்களால் துவங்கப்பட்டது. பின் இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாகவும் திகழ்ந்தது. இந்த திட்டம் தற்போது ஆந்திரப்பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், உத்திரப்பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக திகழ்வது மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களையே சாரும்.
திட்ட விரிவாக்கம்
தொகுசென்னை மாநகராட்சியின் சார்பில் நூற்றி இருபத்தி ஏழு (127) அம்மா உணவகங்களை ஜெயலலிதா திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சி காணொளிக் காட்சி முறையில் நடந்தது. [4] இதன் மூலம் அம்மா உணவங்களின் எண்ணிக்கை இருநூறாக (200) மாறியது. சென்னை மாநகராட்சியை தொடர்ந்து மற்ற மாநகராட்சிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படுமென சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்தார். [5] தமிழகத்தில் அமைந்துள்ளதுபோல் ராஜஸ்தான் மாநிலத்திலும் மலிவு விலையில் உணவகங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டது. [6] தமிழகத்தில் ‘அம்மா உணவகம்’ போன்று, ஆந்திர மாநிலத்தின் 2015-16 ஆண்டுக்கான பட்ஜெட்டில் “அண்ணா அம்ருத ஹஸ்தம்” எனும் திட்டத்துக்காக ரூ. 104 கோடி ஒதுக்கப்பட்டது.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Chennai: Amma canteens set for revamp with new menu". The Times of India. 2022-12-10. https://timesofindia.indiatimes.com/city/chennai/chennai-amma-canteens-set-for-revamp-with-new-menu/articleshow/96122323.cms.
- ↑ புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்திகள்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ அம்மா உணவகம் என பெயர் மாறிய மலிவு விலை உணவகங்கள் - தினமலர் - மார்ச் 24, 2013.
- ↑ April 2, 2013 Honble Chief Minister inaugurated 127 Amma Unavagam of Chennai Corporation through Video Conferencing
- ↑ மற்ற மாநகராட்சிகளுக்கும் மலிவு விலை உணவக திட்டம் விரிவாக்கம்:முதல்வர் ஜெ., அறிவிப்பு - தின மலர்
- ↑ ராஜஸ்தானுக்கு போகிறது அம்மா உணவகங்கள்
- ↑ ஆந்திர மாநிலத்தின் அம்மா உணவகம்