அம்மு அபிராமி

நடிகை

அபிராமி ஐயங்கார் என்கிற இயற்பெயர் கொண்ட அம்மு அபிராமி (Ammu Abhirami) ஒரு இந்திய நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்குத் திரைப்ப படங்களில் தோன்றி வருகிறார். விஜய், கீர்த்தி சுரேஷ் ஆகியோருடன் மருத்துவ மாணவராக 2017ல், வெளிவந்தத் தமிழ் திரைப்படமான பைரவா மூலம் நடிப்பில் அறிமுகமானார்.[1] ராட்சசன் (2018), அசுரன் (2019) ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

அம்மு அபிராமி
அசுரன் பட அறிமுக நேர்காணலில் அபிராமி, 2019
தேசியம் இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2016–தற்போது வரை
அறியப்படுவதுராட்சசன்
அசுரன்

தொழில் தொகு

அம்மு அபிராமியின் முதல் வெளியீடுகள் என் ஆளோட செருப்பக் காணோம் (2017), தீரன் அதிகாரம் ஒன்று (2017), ஆகிய படங்களில் துணை வேடங்களில் நடித்தார்.[2] இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கிய "யார் இவர்கள்" படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் தோன்றினார்.[3] பின்னர் இவர் ராட்சசனில் சிக்கலை எதிர்கொள்ளும் ஒரு பள்ளி மாணவியை சித்தரித்தார். பின்னர் படத்தின் தெலுங்கு மொழியின் மறு ஆக்கமான ராக்சசுடு (2019) படத்திலும் அதே பாத்திரத்தை செய்தார். இதில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், அனுபமா பரமேசுவரன் ஆகியோர் நடித்திருந்தனர்.[4] கொலை செய்யப்படும் ஒரு அப்பாவி பெண்ணாக துப்பாக்கி முனை (2018) என்ற படத்தில் தோன்றினார்.[5][6][7]

2019ஆம் ஆண்டில், இவர் வெற்றிமாறன் இயகத்தில் அசுரன் படத்தில் தனுஷுக்கு இணையாக ஒரு முக்கிய பத்திரத்தில் தோன்றினார். தயாரிப்பாளர் எஸ். தாணு பரிந்துரைத்த பின்னர் அம்மு தேர்வு செய்யப்பட்டார். இவர் முன்பு அவருடைய துப்பாக்கி முனை படத்தில் பணிபுரிந்தார். 1960களில் கிராமப்புற தமிழ்நாட்டில் பள்ளி மாணவி மாரி என்ற பாத்திரத்தை இவர் சித்தரித்தார்.[8][9][10] இயக்குநர் ஜீது ஜோசப் இயக்கத்தில் கார்த்திக், ஜோதிகா நடித்த "தம்பி" படத்தில் நடித்திருந்தார்.[11][12]

மேற்கோள்கள் தொகு

  1. Upadhyaya, Prakash (4 January 2017). "Ilayathalapathy Vijay's Bairavaa censored; to be released on January 12". www.ibtimes.co.in.
  2. "ராட்சசனோட வெற்றிக்கு அதுதான் காரணம்..! - 'அம்மு' அபிராமி". Vikatan.
  3. Suganth, M (7 June 2018). "Balaji Sakthivel is back with Yaar Ivargal". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/balaji-sakthivel-is-back-with-yaar-ivargal/articleshow/64478207.cms. 
  4. "Ammu Abhirami To Reprise Her Original Role From Ratsasan In The Telugu Remake". 24 March 2019.
  5. "Thuppakki Munai Movie Review {3/5}: Critic Review of Thuppakki Munai by Times of India" – via timesofindia.indiatimes.com.
  6. "Review : Thuppakki Munai review-A watchable action thriller (2018)". www.sify.com. Archived from the original on 2018-12-13. பார்க்கப்பட்ட நாள் 2021-07-26.
  7. "Thuppakki Munai movie review: Vikram Prabhu shines as a no-nonsense cop in this largely watchable film- Entertainment News, Firstpost". Firstpost. 14 December 2018.
  8. "Ammu Abhirrami has an update on Dhanush's Asuran - Times of India". The Times of India.
  9. "Ammu Abhirami about Dhanush and Vetrimaran's Asuran". Behindwoods. 23 September 2019.
  10. "Ammu Abhirami's next after Rakshasudu is Dhanush's Asuran!". in.com. Archived from the original on 2019-09-28. பார்க்கப்பட்ட நாள் 2021-07-26. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  11. "Ammu Abhirami joins Karthi once again - Times of India". The Times of India.
  12. "Ratsasan fame Ammu Abhirami joins Jeetu Joseph's film, starring Jyotika and Karthi". The New Indian Express.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மு_அபிராமி&oldid=3841460" இலிருந்து மீள்விக்கப்பட்டது