அயிலூர்

கேரள சிற்றூர்

ஆயிலூர் (Ayiloor) அல்லது அயலூர் என்று அழைக்கப்படுவது, இந்தியாவின், கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சித்தூர் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.[1] அயிலூலூர் மாவட்ட தலைநகரான பாலக்காடு நகரிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிலும், திருச்சூரிலிருந்து 48 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

அயிலூர் (அயலூர்)
Ayaloor / Ayilur
Ayilur, Ayalur
சிற்றூர்
பகவதி கோயில், முடப்பள்ளூர்
பகவதி கோயில், முடப்பள்ளூர்
ஆள்கூறுகள்: 10°34′08″N 76°33′47″E / 10.569020°N 76.563050°E / 10.569020; 76.563050
Country இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பாலக்காடு
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்8,999
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
678510
வாகனப் பதிவுKL-70

நிருவாகம்

தொகு

அயிலூர் இதே பெயரிலான கிராம ஊராட்சிக்கு உட்பட்டதாக உள்ளது.[2] இந்த ஊராட்சி தற்போது இடது ஜனநாயக முன்னணியால் (எல். டி. எஃப்) ஆளப்படுகிறது. தற்போதைய ஊராட்சித் தலைவர் எஸ். விக்னேஷ் ஆவார். இவர் திருவழியாட் வார்டிலிருந்து தேர்ந்தெடுக்கபட்டார்.[3]

கல்வி

தொகு

அரசு மேல்நிலைப்பள்ளி (GUPS), எஸ்.எம் உயர்நிலைப் பள்ளி (SMHS), ஐ.எச்.ஆர்.டி. இன் பயன்பாட்டு அறிவியல் கல்லூரி ஆகியவை அயிலூரில் அமைந்துள்ள முக்கிய கல்வி நிறுவனங்கள் ஆகும்.[4] அரசு மேல்நிலைப் பள்ளி 1890 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதில் முன் துவக்கபள்ளி முதல் 7 ஆம் வகுப்பு மாணவர்கள் வரை கல்வி வழங்கப்படுகிறது. 1948 இல் நிறுவப்பட்ட எஸ். எம் உயர்நிலைப் பள்ளியில் 5 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ளது. 2012 சூலையில் நிறுவப்பட்ட பயன்பாட்டு அறிவியல் கல்லூரி கணினி அறிவியல், மின்னணுவியல் மற்றும் வர்த்தகத்தில் இளங்கலைப் படிப்புகளை வழங்குகிறது.[5]

நெம்மறையில் உள்ள என். எஸ். எஸ் கல்லூரி, [6] அயிலூரிலிருந்து 2.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

நலவாழ்வு

தொகு

200 படுக்கைகள் கொண்ட அவிடிஸ் மருத்துவ அறிவியல் நிறுவனம் என்னும் பல்நோக்கு நிறப்பு மருத்துவமனையானது, அயிலூரிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.[7]

பொருளாதாரம்

தொகு

வேளாண் சார்ந்த பணிகளே இப்பகுதியின் முதன்மை வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக இருந்தது. இருப்பினும், அண்மைய தசாப்தங்களில் சேவை சார்ந்த தொழில்களை மையமாக கொண்ட பொருளாதார மாற்றமும் ஏற்பட்டுள்ளது.

மக்கள்வகைப்பாடு

தொகு

2011 ஆம் ஆண்டய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அயிலூரின் மொத்த மக்கள் தொகை 8999 ஆகும். இதில் 4394 பேர் ஆண்கள், 4605 பேர் பெண்களாவர்.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. "Reports of National Panchayat Directory". Ministry of Panchayati Raj. Archived from the original on 30 December 2013. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013.
  2. "Reports of National Panchayat Directory". Ministry of Panchayati Raj. Archived from the original on 30 December 2013. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013.
  3. "Local Self Government Department | Local Self Government Department". lsgkerala.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-21.
  4. "SMHS AYALUR - Ayalur, District Palakkad (Kerala)". schools.org.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-21.
  5. "Welcome to College of Applied Science Ayalur". casayalur.ihrd.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-21.
  6. "NSS College Nemmara". nss.org.in. பார்க்கப்பட்ட நாள் 2022-05-24.
  7. "Avitis". www.avitishospital.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-21.
  8. "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 8 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயிலூர்&oldid=4151185" இலிருந்து மீள்விக்கப்பட்டது