அரசு ரோசாத் தோட்டம், ஊட்டி

(அரசாங்க ரோஜா தோட்டம், ஊட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அரசு ரோசாத் தோட்டம் (Government Rose Garden) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் அமைந்துள்ள ஒரு ரோசாப்பூ பூங்காவாகும். முன்னதாக இப்பூங்கா செயலலிதா ரோசாத் தோட்டம், சென்டினரி ரோசாப் பூங்கா, நூற்றாண்டு ரோசாப் பூங்கா என்று பல பெயர்களாலும் அறியப்பட்டது [2][3][4]. ஊட்டி நகரின் விசயநகரம் என்ற பகுதியிலுள்ள எல்கு மலைச்சரிவில் கடல் மட்டத்திலிருந்து 2200 மீட்டர் உயரத்தில் இந்த ரோசாப் பூங்கா அமைந்துள்ளது [5].

அரசு ரோசாத் தோட்டம்
Government Rose Garden
அரசு ரோசாத் தோட்டம், ஊட்டி.
வகைதாவரவியல் வகை
அமைவிடம்ஊட்டி, இந்தியா
ஆள்கூறு11°24′22″N 76°42′31″E / 11.406108°N 76.708606°E / 11.406108; 76.708606
பரப்பு4 எக்டேர்கள்
திறக்கப்பட்டது20 மே 1995
Owned byதமிழ்நாடு அரசு
Species20000[1]
Collectionsதேயிலை கலப்பு ரோசாக்கள், குட்டி ரோசாக்கள், பாலியந்தா எனப்படும் பல்லடுக்கு ரோசாக்கள், பாபாகினா ரோசாக்கள், புளோரிபந்தா எனப்படும் பல்லடுக்கு கலப்பு ரோசாக்கள் , மல்டிபுளோரா எனப்படும் பேபி ரோசாக்கள், யாக்கிமோர் ரோசாக்கள்

உதகமண்டலத்தில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் ஊட்டி மலர் கண்காட்சியின் நூறாவது ஆண்டு விழா நினைவாக ஊட்டியின் விசயநகரத்தில் இந்த அரசு ரோசாத் தோட்டம் 1995 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. நான்கு எக்டேர் பரப்பளவு நிலத்தில் ரோசாச் செடிகளை நட்டு இப்பூங்கா உருவாக்கப்பட்ட்து.[6] தமிழ்நாடு தோட்டக்கலை துறை ரோசாத் தோட்ட்த்தைப் பராமரிக்கிறது.[7]

சிறப்பம்சங்கள் தொகு

 
ரோசாத் தோட்டத்தில் தேவதை சிலை
 
தமிழ்நாட்டின் ஊட்டியிலுள்ள ரோசாத் தோட்டத்தின் தோற்றம்
 
புல்வெளியில் தமிழக அரசின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்நாட்டின் ஊட்டியிலுள்ள ரோசாத் தோட்டம்
 
ஊட்டி ரோசாத் தோட்டம் நுழைவாயில்
 
ரோசாக்கள் நடப்பட்ட மேல்தளத்தின் நிலப்பகுதி
 
முன்னாள் முதலமைச்சர் செயலலிதாவின் பெயரிடப்பட்ட ரோசா வகை

ஊட்டிக்கென ஒரு தனிப்பட்ட மலை வெப்பமண்டல காலநிலை உண்டு. எனவே ரோசாத் தோட்டம் வளர்வதற்கேற்ற சிறந்த பருவ நிலை இங்கு நிலவுகிறது. குறைவான வெப்பநிலை மாறுபாடுகளும், ஒரே சீரான மழைப் பொழிவும் ரோசாப் பூக்கள் பூப்பதற்கான சாதகமான சூழ்நிலையை அளிக்கின்றன. எனவே நீண்ட காலத்திற்கு இங்கு பூக்கள் பூத்துக்கொண்டே இருக்கின்றன. ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ரோசாத் தோட்டத்தை பார்வையிட்டு மகிழ்கின்றனர். பூக்கள் பூக்காத குளிர்காலம் என்றாலும் கூட சுற்றுலாப் பயணிகளின் வருகை இங்கு குறைவதில்லை என்பது தனிச்சிறப்பு ஆகும் [1].

ஊட்டியின் இதயப்பகுதியில் அமைந்துள்ள அரசு ரோசாத் தோட்டம் இந்தியாவின் மிகப்பெரிய ரோசாத் தோட்டங்களில் ஒன்றாகும். மேலும் இதுவொரு புகழ்பெற்ற சுற்றுலா இடமாகவும் சிறப்புப் பெற்றுள்ளது. அழகான இத்தோட்டம் 10 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. குட்டி ரோசாக்கள், கலப்பின ரோசாக்கள், தேயிலை கலப்பு ரோசாக்கள் என நாட்டில் பெரும்பான்மையாகக் காணப்படும் பல்வேறு வகையான வண்ண வண்ண ரோசாக்களும் தனித்துவமான ரோசாக்களும் இங்கு அழகாகப் பூக்கின்றன. கண்கள் மற்றும் உணர்வுகளுக்கு ஒரு மகிழ்ச்சி அளிக்கும் இடமாக மட்டுமல்லாமல் தோட்டக்கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கும் இந்த ரோசாத் தோட்டம் பயனுள்ளதாக உள்ளது[1].

ஆரம்ப காலத்தில் தோட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது இங்கு 1,919 வகையான ரோசாப் பூக்கள் பூக்கின்ற 17,256 ரோசாச் செடிகள் நடப்பட்டன [5]. தற்போது 2,800 வகையான ரோசாப் பூக்கள் பூக்கின்ற 20,000 ரோசா செடி வகைகள் காணப்படுகின்றன. இந்தியாவில் உள்ள மிகப்பெரியா ரோசாப் பூக்கள் கொண்ட தோட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.[1]

மிகச் சிறிய குட்டி ரோசாக்கள், தேயிலைக் கலப்பு ரோசாக்கள், யாக்கிமௌர் ரோசாக்கள், பாலியாந்தசு ரோசாக்கள், பாபாகினா, புளோரிபண்டா வகை ரோசாக்கள் மற்றும் வழக்கத்திற்கு மாறான வண்ணங்களான வித்தியாசமான கருப்பு மற்றும் பச்சை வண்ணம் கொண்ட ரோசா பூக்கள் உள்ளிட்ட பூக்கள் இங்குப் பூக்கின்றன. இத்தோட்டத்தில் வளர்க்கப்படும் வகை வகையான ரோசாச் செடிகள் உலகின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டவையாகும்.

இத்தோட்டத்தில் ரோசாக்கள் குகை போன்ற பாதைகளிலும், கொழுகொம்பு அமைப்புகளிலும், பந்தல்களிலும் ரோசாக் கொடிகள் படரவிடப்பட்டுள்ளன. இங்குள்ள சரிவு பகுதிகளில் பார்வையாளர்கள் நின்று பார்த்து ரசிக்கும் வகையில் நிலா மாடம் எனப்படும் சிறப்பு நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலா மாட்த்தில் நின்ற வண்ணம் பார்வையாளர்கள் மொத்த ரோசாப் பூங்காவையும் கண்டு இரசிக்க முடியும் [5][8]. இங்குள்ள ரோசாப் பூக்களுக்கு மத்தியில் பூவோடு பூவாக ஒரு தேவதையின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.

அங்கீகாரமும் விருதுகளும் தொகு

சப்பானின் ஒசாக்கா நகரிலுள்ள ரோசா சமூகங்களின் உலகக் கூட்டமைப்பு வழங்கும் தெற்காசியாவிலேயே சிறந்த ரோசாத் தோட்டம் எனத் தேர்வு செய்யப்பட்டு [9] அவ்விருதை 2006 ஆம் ஆண்டு மே மாதம் ஊட்டியிலுள்ள அரசு ரோசாத் தோட்டம் வென்றது .[10]. உலக அளவில் இவ்விருதைப் பெற்றுள்ள 35 ரோசாத் தோட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "World Federation of Rose Societies". Archived from the original on 2011-10-02. பார்க்கப்பட்ட நாள் 2011-01-21.
  2. "Rose Park to be renamed". தி இந்து (India). 23 May 2009. http://www.hindu.com/2009/05/23/stories/2009052351540300.htm. 
  3. "A rose garden by another name causes confusion". தி இந்து (India). 17 May 2008. http://www.hindu.com/2008/05/17/stories/2008051751130300.htm. 
  4. "Tourism - Ooty". Archived from the original on 2010-01-02. பார்க்கப்பட்ட நாள் 2011-01-22.
  5. 5.0 5.1 5.2 "TAMIL NADU-Rose Garden". Archived from the original on 2010-01-02. பார்க்கப்பட்ட நாள் 2011-01-22.
  6. "Arrangement of Roses in Five Platforms". பார்க்கப்பட்ட நாள் 2011-01-12.
  7. "Tamil Nadu Horticulture Department". Archived from the original on 2011-01-23. பார்க்கப்பட்ட நாள் 2011-01-12.
  8. "Nila Maadam". Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2011-01-12.
  9. "List of award winners". Worldrose.org. Archived from the original on 27 சூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 21 சனவரி 2011.
  10. "Ooty Centenary Rose Park wins Garden of Excellence award", தி இந்து, India, 19 Jan 2007, archived from the original on 11 ஜூன் 2007, பார்க்கப்பட்ட நாள் 11 மே 2019 {{citation}}: Check date values in: |archive-date= (help)

புற இணைப்புகள் தொகு