அரசினர் கலைக் கல்லூரி, சேலம்

சேலம் மாநகரில் உள்ள அரசுக் கல்லூரி

அரசினர் கலைக் கல்லூரி, சேலம் (Government Arts College, Salem) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் தன்னாட்சி தகுதியுடன் செயற்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் தரச் சான்றுடன் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட தன்னாட்சி கல்லூரியாக இயங்கிவருகிறது.[2]

அரசினர் கலைக் கல்லூரி, சேலம்
குறிக்கோளுரைஅறிவு ஆற்றல் இனிமை
வகைஅரசினர் கலைக்கல்லூரி
உருவாக்கம்1857 (ஆங்கிலேய மேல்நிலைப்பள்ளியாக)
சார்புபெரியார் பல்கலைக்கழகம்
முதல்வர்எஸ். கலைச்செல்வன்
அமைவிடம், ,
இணையதளம்http://www.gacsalem7.co.in/

வரலாறு தொகு

அரசினர் கலைக் கல்லூரி, சேலம் (தன்னாட்சி) தமிழ்நாட்டில் உள்ள மிகப் பழமையான கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். இது 1857ஆம் ஆண்டில் ஆங்கிலேய மேல்நிலைப் பள்ளியாக அலெக்ஸாண்டர் ஜான் அர்பத்னாட் தொடங்கப்பட்டது. அதே ஆண்டில் மாவட்ட பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 1879-ல் சென்னைப் பல்கலைக்கழகம் உடன் இணைந்த இரண்டாம் நிலைக் கல்லூரியாக மாற்றப்பட்டது. இதன்பிறகு படிப்படியாக வளர்ச்சி பெற்று 1944-ல் முதல் நிலைக் கல்லூரியாக மாறியது. 2000-ல் இக்கல்லூரி தேசிய மதிப்பீடு மற்றும் தர நிர்ணயச் சான்று அவை வழங்கும் குழுவினரால் மூன்று நட்சத்திரத் தொகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 2006-ல் மறு மதிப்பீடு செய்யப்பட்டு அதே தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை வழங்கும் குழுவினரால் 'பி++' தகுதி பெற்றது. 2007-ல் தன்னாட்சி தகுதிப் பெற்று இக்கல்லூரி சிறப்பாக இயங்கி வருகிறது.

அமைவிடம் தொகு

இக்கல்லூரி சேலம் மாவட்டத்தின் மையப் பகுதியில் செர்ரி சாலையில் அமைந்துள்ளது.

சுழற்சி வகுப்பு முறை தொகு

2007-2008ஆம் கல்வி ஆண்டிலிருந்து இக்கல்லூரியில் பட்டப் படிப்பு பாடங்களுக்கு சுழற்சி முறையில் இருசுழற்சிகளாக (சுழற்சி 1 -காலை, சுழற்சி 2-பிற்பகல்) வகுப்புகள் நடைபெறுகின்றன.

இளநிலைப் படிப்புகள் தொகு

முதுநிலைப் படிப்புகள் தொகு

மேலும் பல்வேறு துறைகளில் பட்டப் படிப்புகள், பட்ட மேற்படிப்புகள் மற்றும் முனைவர் பட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

அதிகாரப்பூர்வ இணையதளம்