அரசியல் கருத்துக்கள்-இசுலாம்

இசுலாமிய அரசியல் கருத்துக்கள்

அரசியல் கருத்துக்கள்-இசுலாம் என்பதை நோக்கும் போது, இசுலாம் மார்க்கத்தில் காணப்படும் ஆட்சித் தத்துவத்தில் மக்களின் வாழ்க்கைக் கொள்கை, மதக் கொள்கை என்கிற வேறுபாடு இல்லை. இசுலாமிய மனித வாழ்க்கையில், எல்லாப் பகுதிகளும் ஒரே துறையாகக் கருதப்படுகின்றன. ஆதலால், இசுலாமிய நெறி சமய, அரசியல், சமூக, குடும்ப நிலைகளையெல்லாம், ஒருவழிப் படுத்துவதற்கான விதிகளைக் கூறப் பட்டுள்ளது. இந்நெறிக்கு 'ஷரியத்' என்று பெயர்.[1] அச்சொல் வழிமுறை அல்லது நெறி என்று பொருள்படும். ‘ஷரியத்’ என்னும் சொல் குர் ஆனிலேயே கூறப்பட்டிருக்கிறது.

திருக்குர்ஆன் தொகு

“உங்கள் ஒவ்வொருவருக்கும், நாம் ஒரே தெளிவான வழிகாட்டியுள்ளோம்” என்று திருகுர்ஆன் கூறுகிறது.[2] ஆதலால், ஷரியத் என்பது, உலகத்தில் மனிதன் தன் உரிமைகள் என்ன, கடமைகள் என்ன என்று அறிந்து, அதன்படி ஒழுகுவதால், மறுமைக்கான உணர்வைப் பெறுவதற்கு, உதவும் மார்க்கம் என்று ஆகிறது. ஷரியத்தின் விவரங்கள், குர் ஆனில் கூறப்பட்டுள்ளன. அதன்படி, இறைவனே உண்மையான அதிபதி; மனிதன் இறைவனுடைய பிரதிநிதியாகப், பூவுலகத்தில் இருப்பவன். கடவுள் கூறும் ஒழுக்கங்கள் உலகத்திலுள்ள உயிர்களின் நன்மைகளைக் கருதியவை. அந்த நோக்கங்களை நிறைவேற்றிவைக்கும் தருமகர்த்தாவே மனிதன். ஆகவே, தன் கடமையை நிள்றைவேற்றுவது தான் முக்கிய நோக்கமே ஒழியத் தன் உரிமைகளைக் கொண்டாடுவது முக்கிய நோக்கமன்று. “இறைவனே உங்களைத் தன்னுடைய பிரதிநிதியாகப் பூவுலகில் நியமித்துள்ளான் ; உங்களில் சிலர் உயர்வாகவும், சிலர் தாழ்வாகவும் இருப்பது அவன் உங்களைப் பரிசோதிப்பதற்காகவே. அவன் உங்கள் தகுதியை விரைவாகக் கணக்கிட்டுக் கொண்டே யிருப்பான்”என்னும் குர்ஆன் வசனம் மேற்கூறிய கருத்தைத் தெளிவாக்குகின்றது.

இசுலாமியக் கொள்கை தொகு

இசுலாமிய அரசியற் கொள்கைப்படி, நிருவாகத் தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். அத்தேர்தல் வழியாகத்தான் அவர் தமது அரசுரிமையைப் பெறுகிறார். இவரைக் ' கலிபா' என்பர். சிலர் சமுதாயத்திலுள்ள குறிப்பான ஒருசில முக்கியமானவர்களால் நியமிக்கப்பட்டுப் பிறகு, பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். இசுலாமிய அரசியற் கொள்கைப்படி, ஒவ்வொரு இசுலாமியரும், கலிபா ஆதற்கு உரியர். கலிபா சட்டப்படியும், நீதி தவறாமலும், அரசாளும்வரையில் குடிமக்களின் கீழ்ப்படிதலை எதிர்பார்க்கலாம். ஆயினும், அவர் கொடுங்கோலராய்விட்டால், அவரை நீக்கிவிடும் உரிமை பொதுமக்களுக்கு உண்டு.

இசுலாமியக் கொள்கைப்படி, குர் ஆனில் கூறப்பட்டுள்ள, சரியத் விதிகளுக்கு விரோதமாக நடந்துகொள்ள, நபிகள் நாயகம் உட்படயாருக்கும் அதிகாரமில்லை. நிருவாக முறையில், எழும் சில சிறு விவரங்களுக்கும், பிரச்சினைகளுக்கும், சரியத்தில் விளக்கம் இல்லாமலிருக்கலாம். இவற்றை இசுலாமிய மார்க்க நிபுணர்கள் ஆராய்ந்து முடிவு செய்வர். இசுலாமிய விதிகளுக்குப் பொருள் கூறுவதற்கும், அவற்றை நிருணயிப்பதற்கும் இசுலாமியநெறியில், தேர்ந்த ஒவ்வொரு இசுலாமியற்கும் உரிமை உண்டு.

இசுலாமிய அமைப்பு தொகு

ஆகையால், இசுலாமிய அமைப்பு ஒரு மக்களரசாக ஆயிற்று எனலாம். அதில் சாதி, மதம், இனம், இடம், மொழி முதலிய வேறுபாடுகள் இல்லை. ஆதலால் இசுலாமிய அரசியல் நிலைமை, ஒரு தீர்க்கமான நிலைமையாய் இருப்பதுடன், இதற்கு மாறான விடயங்களுக்கு இடம் கொடுக்காது. இவ்வித சமத்துவ சனநாயகமாய் இருப்பதனால், ஒருவரை ஒருவர் மோசம் செய்வதைத் தடுப்பதோடுகூட நீதியையும், அறநிலையையும், ஒழுக்க நெறியையும் அது கற்பிக்கிறது. இவ்வித அரசியல் நிலை, உலகமெங்கும் பரவ இடம் இருக்கி்றது. ஆனால், அது பலவந்தமாகச் சர்வாதிகார ஆதிக்கத்தைப்போல இருக்க முடியாது. ஏனெனில், மனித வாழ்க்கையில் எல்லாப் பகுதியையும், அது சீர்திருத்தம் செய்ய முயல்கிறது. ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனுக்கும், அவனுடைய உரிமையைப் முழுமையாக அளிக்கும்படி செய்கிறது. கருத்து வேறுபாடுகளையும், தாராளமாகத் தெரிவிக்க இடம் கொடுக்கிறதினால், சர்வாதிகாரத்திற்கு அறவே இடம் கொடுப்பதில்லை. மேலே சொன்ன கருத்துக்களை, முதற் கலிபாவான, அபூபக்கர் நன்கு விளக்குகிறார் :

மேற்கோள்கள் தொகு