அரசு மேல்நிலைப்பள்ளி, ஜி. உடையாப்பட்டி

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்தில் அமைந்துள்ளது.

அரசு மேல்நிலைப்பள்ளி,ஜிஉடையாப்பட்டி

அமைவிடம்தொகு

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்தில் அமைந்துள்ளது. இது குளித்தலையிலிருந்து சுமார் 20 கி.மீ.தொலைவில் உள்ளது.மணப்பாறை செல்லும் வழியில் தேசியமங்கலம் என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி செல்ல வேண்டும்.

தோற்றம்தொகு

ஜி.உடையாபட்டி,அரசு உயர்நிலைப்பள்ளி 25.06.1962ல் தொடங்கப்பட்டது.பின்னர் இது 21.06.2012ல் அரசு மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.

மாணவர் எண்ணிக்கைதொகு

இங்கு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை சுமார் 650 மாணவ மாணவிகள் படிக்கின்றனர்.

வசதிகள்தொகு

மாணவர்கள் பயில்வதற்குப் போதுமான வகுப்பறைகள் உள்ளன. ஏழு கட்டிடங்கள் பயன்பாட்டில் உள்ளது.குடிநீர் வசதி,சமையல் கூடம், கழிப்பறைகள் ஆகியன உள்ளன. மாணவர்கள் விளையாட்டுப் பயிற்சிக் களம் சிறிய அளவிலேயே காணப்டுகிறது.

ஆசிரியர்கள்தொகு

6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கற்பிக்க போதுமான ஆசிரியர்கள் உள்ளனர். முதுகலை வரலாறு ஆசிரியர் பாடத்திற்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலமாக தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தேர்ச்சி சதவீதம்தொகு

கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் பொதுத் தேர்வில் 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.