அரபு எழுத்துமுறை
அரபு எழுத்துகள் அல்லது அரபு அரிச்சுவடி என்பது அப்சத்திய்யா அரபிய்யா என்றழைக்கப்படுகின்றது. இந்த எழுத்துமுறை ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் பல மொழிகளை எழுதப் பயன்படுகின்ற முதன்மையான எழுத்துமுறைகளில் ஒன்று. இலத்தீன் எழுத்துமுறைக்கு அடுத்தபடியாக அரபு எழுத்துமுறை உலகில் இரண்டாவதாக அதிகம் பயன்படுத்தப்படும் எழுத்துமுறையாகும்.[1] முதலாக அரபு மொழியை எழுதுவதற்காக பயன்படுத்தப்பட்டது. இசுலாம் பின் விரிந்து அச்சமயத்தின் தாக்கம் காரணமாக இசுலாமிய உலகில் பல்வேறு மொழிகளைப் பேசுவோர் அரபு எழுத்துமுறையை பின்பற்றுகின்றனர். அரபு மொழியைச் சேர்ந்த செமிட்டிக் மொழிக் குடும்பத்தை சேராத பாரசீகம், உருது, அவுசா, பசுத்தூ, மலாய், பிராகுயி, சிந்தி போன்ற மொழிகளை பேசுவோர் சிறிய மாற்றங்களைச் செய்து இந்த எழுத்துமுறையை தங்களது தாய்மொழிகளை எழுதுவதற்காகப் பயன்படுத்தி வருகின்றனர்.
அரபு எழுத்துமுறை | |
---|---|
எழுத்து முறை வகை | |
காலக்கட்டம் | கிபி 400 முதல் இன்று வரை |
திசை | Right-to-left |
மொழிகள் | அரபு, பாரசீகம், குர்தி, பலூச்சி, உருது, பாஷ்தூ, சிந்தி, மலாய் மொழி (மட்டிட்டது), பல்வேறு |
தொடர்புடைய எழுத்து முறைகள் | |
மூல முறைகள் | |
ஒருங்குறி | |
U+0600 to U+06FF U+0750 to U+077F | |
இந்த எழுத்துமுறை முதலில் அரபு மொழி நூல்களையும், அதுவும் குறிப்பாக திருக் குர்ஆனையும், எழுதப் பயன்படுகிறது. பின்னர் இசுலாம் மதம் பரவிய பின்னர் பல மொழிக்குடும்பங்களில் உள்ள பிற மொழிகளின் வரிவடிவங்களையும் எழுதப் பயன்பட்டது. இம்மொழிகளில் பாரசீக மொழி, உருது, பசுத்து (Pashto), பலோச்சி (Baloch), மலாய், கிசுவாகிலி, பிராகுயி, காசுமீரி, சிந்தி, பால்ட்டி, பாக்கித்தானிய பஞ்சாபி, சீனாவின் சிஞ்சியாங் மாநிலத்தில் பேசப்படுகின்ற உய்குர், கசக், உசுபெக்கு, இலங்கை, தென்னிந்தியா மற்றும் சில நாடுகளிலுள்ள அர்வி, ஆப்பிரிக்காவில் மாண்டிங்கா, ஃவுல்ஃவ்வுல்டி-புலார், ஔசா முதலியவும், குர்திசுத்தான், பெலாரூசியன் தார்த்தார், கிர்கிசுத்தான், உதுமானிய துருக்கியம், போசினியாவில் செர்போ-குரோசியம், இந்தோனேசியாவின் ஆச்சே மாநிலத்தில் உள்ள ஆச்சே மொழி ஆகிய நில-இன மக்கள் பேசும் மொழிகள் உட்பட வேறுபல மொழிகளும் அரபு எழுத்து முறையைப் பயன்படுத்தி எழுதப்படுகின்றன.
அரபு எழுத்துகள் மொத்தம் 28. ஆனால் அவை முதலெழுத்தாகவும், சொல்லின் இடையேயும், கடைசியாகவும் வரும்பொழுது வடிவங்கள் மாறுபடுகின்றன. அரபு எழுத்து முறையைக் கீழே உள்ள அட்டவணை காட்டுகின்றது. அரபு வலமிருந்து இடமாகப் படிக்கும் மொழி. ஆகவே முதல் எழுத்து என்பது வலது கோடியில் உள்ளது. கடைசி எழுத்து என்பது இடது கோடியில் உள்ளது. வேறு மொழிகளில் கூடுதலாக சில எழுத்துகள் உள்ளன. உயிரெழுத்துகளை கட்டாயமாக எழுத வேண்டுமென்பதில்லையாதலால் அரபு எழுத்துமுறை ஒரு அப்சத் வகை எழுத்துமுறையாக பிரிந்திருக்கிறது.
எழுத்துகளும் பொதுவான குறியீடுகளும் ஒலிப்புகளும்
தொகுதனித்து வரும்பொழுது | இடச்சூழலில் எழுத்தின் வடிவம் | பெயர் | குறியீடு | ஒலியன் மதிப்பு (அஒநெ (IPA) | ||
---|---|---|---|---|---|---|
கடைசி | நடு | முதல் | ||||
ا | ـا | ـا | ا | ʾalif அலிப் | ʾ / ā | various, including /aː/ |
ب | ـب | ـبـ | بـ | bāʾ பா3 | /b/, also /p/ in some loanwords | |
ت | ـت | ـتـ | تـ | tāʾ த | t | /t/ ட்5 |
ث | ـث | ـثـ | ثـ | ṯāʾ தா1 | ṯ த்1 | /θ/ த்1 |
ج | ـج | ـجـ | جـ | ǧīm, சீம் | ǧ (also j), font color= green>ச்3 , | /dʒ/ஜ |
ح | ـح | ـحـ | حـ | ḥāʾ | ḥ | /ħ/ |
خ | ـخ | ـخـ | خـ | ḫāʾ | ḫ (also kh, x) | /x/ |
د | ـد | ـد | د | dāl | d | /d/ |
ذ | ـذ | ـذ | ذ | ḏāl | ḏ (also dh, ð) | /ð/ |
ر | ـر | ـر | ر | rāʾ | r | /r/ |
ز | ـز | ـز | ز | zāy | z | /z/ |
س | ـس | ـسـ | سـ | sīn | s | /s/ |
ش | ـش | ـشـ | شـ | šīn | š (also sh) | /ʃ/ |
ص | ـص | ـصـ | صـ | ṣād | ṣ | /sˁ/ |
ض | ـض | ـضـ | ضـ | ḍād | ḍ | /dˁ/ |
ط | ـط | ـطـ | طـ | ṭāʾ | ṭ | /tˁ/ |
ظ | ـظ | ـظـ | ظـ | ẓāʾ | ẓ | /ðˁ/ |
ع | ـع | ـعـ | عـ | ʿayn | ʿ | /ʕ/ |
غ | ـغ | ـغـ | غـ | ghain | ġ (also gh) | /ɣ/ (/ɡ/ in many loanwords, <ج> is normally used in எகிப்து) |
ف | ـف | ـفـ | فـ | fāʾ | f | /f/, also /v/ in some loanwords |
ق | ـق | ـقـ | قـ | qāf | q | /q/ |
ك | ـك | ـكـ | كـ | kāf | k | /k/ |
ل | ـل | ـلـ | لـ | lām | l | /l/, (/lˁ/ in அல்லாஹ் only) |
م | ـم | ـمـ | مـ | mīm | m | /m/ |
ن | ـن | ـنـ | نـ | nūn | n | /n/ |
ه | ـه | ـهـ | هـ | hāʾ | h | /h/ |
و | ـو | ـو | و | wāw | w / ū / aw | /w/ / /uː/ / /au/, sometimes /u/, /o/ and /oː/ in loanwords |
ي | ـي | ـيـ | يـ | yāʾ | y / ī / ay | /j/ / /iː/ / /ai/, sometimes /i/, /e/ and /eː/ in loanwords |
ஒருங்குறி குறியீட்டுடன் கூடிய எழுத்துக்கள்
தொகுபொது எழுத்து யூனிகோட் |
வகைகள் | பெயர் | ஒலிபெயர்ப்பு | (ஐபிஏ) ஒலிப்பு | |||
---|---|---|---|---|---|---|---|
தனியாக | சொல் முடிவில் | சொல் நடுவில் | சொல் முதலில் | ||||
0627 ا |
FE8D ﺍ |
FE8E ﺎ |
— | ʾalif | ʾ / ā | various, including /aː/ | |
0628 ب |
FE8F ﺏ |
FE90 ﺐ |
FE92 ﺒ |
FE91 ﺑ |
bāʾ | b | /b/ |
062A ت |
FE95 ﺕ |
FE96 ﺖ |
FE98 ﺘ |
FE97 ﺗ |
tāʾ | t | /t/ |
062B ث |
FE99 ﺙ |
FE9A ﺚ |
FE9C ﺜ |
FE9B ﺛ |
ṯāʾ | ṯ | /θ/ |
062C ج |
FE9D ﺝ |
FE9E ﺞ |
FEA0 ﺠ |
FE9F ﺟ |
ǧīm | ǧ (also j, g) | /ʤ/ |
062D ح |
FEA1 ﺡ |
FEA2 ﺢ |
FEA4 ﺤ |
FEA3 ﺣ |
ḥāʾ | ḥ | /ħ/ |
062E خ |
FEA5 ﺥ |
FEA6 ﺦ |
FEA8 ﺨ |
FEA7 ﺧ |
ḫāʾ | ḫ (also kh, x) | /x/ |
062F د |
FEA9 ﺩ |
FEAA ﺪ |
— | dāl | d | /d/ | |
0630 ذ |
FEAB ﺫ |
FEAC ﺬ |
— | ḏāl | ḏ (also dh, ð) | /ð/ | |
0631 ر |
FEAD ﺭ |
FEAE ﺮ |
— | rāʾ | r | /r/ | |
0632 ز |
FEAF ﺯ |
FEB0 ﺰ |
— | zāī | z | /z/ | |
0633 س |
FEB1 ﺱ |
FEB2 ﺲ |
FEB4 ﺴ |
FEB3 ﺳ |
sīn | s | /s/ |
0634 ش |
FEB5 ﺵ |
FEB6 ﺶ |
FEB8 ﺸ |
FEB7 ﺷ |
šīn | š (also sh) | /ʃ/ |
0635 ص |
FEB9 ﺹ |
FEBA ﺺ |
FEBC ﺼ |
FEBB ﺻ |
ṣād | ṣ | /sˁ/ |
0636 ض |
FEBD ﺽ |
FEBE ﺾ |
FEC0 ﻀ |
FEBF ﺿ |
ḍād | ḍ | /dˁ/ |
0637 ط |
FEC1 ﻁ |
FEC2 ﻂ |
FEC4 ﻄ |
FEC3 ﻃ |
ṭāʾ | ṭ | /tˁ/ |
0638 ظ |
FEC5 ﻅ |
FEC6 ﻆ |
FEC8 ﻈ |
FEC7 ﻇ |
ẓāʾ | ẓ | /ðˁ/ |
0639 ع |
FEC9 ﻉ |
FECA ﻊ |
FECC ﻌ |
FECB ﻋ |
ʿayn | ʿ | /ʕ/ |
063A غ |
FECD ﻍ |
FECE ﻎ |
FED0 ﻐ |
FECF ﻏ |
ġayn | ġ (also gh) | /ɣ/ |
0641 ف |
FED1 ﻑ |
FED2 ﻒ |
FED4 ﻔ |
FED3 ﻓ |
fāʾ | f | /f/ |
0642 ق |
FED5 ﻕ |
FED6 ﻖ |
FED8 ﻘ |
FED7 ﻗ |
qāf | q | /q/ |
0643 ك |
FED9 ﻙ |
FEDA ﻚ |
FEDC ﻜ |
FEDB ﻛ |
kāf | k | /k/ |
0644 ل |
FEDD ﻝ |
FEDE ﻞ |
FEE0 ﻠ |
FEDF ﻟ |
lām | l | /l/, ([lˁ] in அல்லாஹ் only) |
0645 م |
FEE1 ﻡ |
FEE2 ﻢ |
FEE4 ﻤ |
FEE3 ﻣ |
mīm | m | /m/ |
0646 ن |
FEE5 ﻥ |
FEE6 ﻦ |
FEE8 ﻨ |
FEE7 ﻧ |
nūn | n | /n/ |
0647 ه |
FEE9 ﻩ |
FEEA ﻪ |
FEEC ﻬ |
FEEB ﻫ |
hāʾ | h | /h/ |
0648 و |
FEED ﻭ |
FEEE ﻮ |
— | wāw | w / ū | /w/ / /uː/ | |
064A ي |
FEF1 ﻱ |
FEF2 ﻲ |
FEF4 ﻴ |
FEF3 ﻳ |
yāʾ | y / ī | /j/ / /iː/ |
குறிப்புகள்
தொகு- ↑ "Arabic Alphabet". Encyclopaedia Britannica online. பார்க்கப்பட்ட நாள் 2007-11-23.