அரபு மொழிபெயர்ப்பு இயக்கம்
அரபு மொழிபெயர்ப்பு இயக்கம் (கிபி: 800 - 1000) என்பது இசுலாமியப் பொற்காலத்தின் போது, பக்தாத்தின் அறிவு அவையினை (House of Wisdom) மையமாகக் கொண்டு, பெரும் வீச்சுடன் செயற்பட்ட ஒரு மொழிபெயர்பு இயக்கம் ஆகும். இந்த இயக்கத்தினால் இலத்தீன், கிரேக்கம், சமசுகிருதம் உட்பட்ட பல உலக மொழிகளில் இருந்த ஆக்கங்கள் அரபு மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டன. இசுலாமிய ஆட்சிப் புலங்களின் பல்துறை அறிவுத்துறைகளின் வளர்ச்சிக்கும்[1], கிரேக்க அறிவு பாதுகாக்கப்படுவதற்கும், இந்திய அறிவின் பகிர்வுக்கும் இந்த மொழிபெயர்ப்பு இயக்கம் முக்கிய பங்காற்றியது.
மேற்கோள்கள்
தொகு