அராபைமா கிகாஸ் மீன்
அராபைமா கிகாஸ் (Arapaima gigas), தென் அமெரிக்காவின் பொலிவியா நாட்டில் பாயும் அமேசான் ஆற்றில் காணப்படும் அரிய வகை உண்ணக்கூடிய நன்னீர் மீன் ஆகும். இம்மீன் 4 மீட்டர் நீளம் (13 அடி) மற்றும் 200 கிலோ கிராகிமுக்கும் அதிகமான எடை வரை வளரக்கூடியது.[1] எனவே இம்மீனீன் பசியால், மற்ற மீன்களுக்கு கடுமையான அச்சுறுத்தல் உள்ளது. இவ்வகை மீன்கள் பிறந்த முதல் ஆண்டிற்கு 10 கிலோ கிராம் என்ற விகிதத்தில் எடை அதிகரிக்கும். இதற்கு கூர்மையான பற்கள் இல்லை எனினும், பிற மீன்கள், தாவரங்கள், நத்தைகள் மற்றும் பெரிய பறவைகள் போன்றவற்றை விழுங்கி விடுகிறது. இந்த மீனுக்கு நுரையீரல் போன்ற அமைப்பு உள்ளதால், இது பெரும்பாலும் புதிய காற்றுக்காக நீரின் மேற்பரப்பிற்கு வரும். இது அமைதியான இவைகள் நன்னீர் ஏரிகள் மற்றும் குளங்களில் வாழ விரும்புகிறது.[2]சிவப்பு & ஆரஞ்சு நிற சதைப்பற்றுள்ள இம்மீனை மக்கள் அதிகம் விரும்பு உண்கிறார்கள்[3]நீரில் வாழும் பாம்பினமாக கருதப்பட்ட இதை 1822ம் ஆண்டில் மீன் இனமாக அறிவிக்கப்பட்டது.
பாதுகாப்பு அமைப்பு
தொகுஅராபைமா மீன்களின் மேற்பரப்பில், கனிமமயமான கவசம் போன்ற கடினமான செதில்கள் கொண்டுள்ளதால் பிரானா மீன்களின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கிறது.[4]
பரவல்
தொகுதென் அமெரிக்கா உள்ள பொலிவியா, பிரேசில், கயானா மற்றும் பெரு நாடுகளில் பாயும் அமேசான் ஆறு மற்றும் நன்னீர் ஏரிகளிலும் இவ்வகை மீன்கள் வளர்கிறது.[1][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Froese, Rainer and Pauly, Daniel, eds. (2017). "Arapaima gigas" in FishBase. 5 2017 version.
- ↑ அராபைமா கிகாஸ்
- ↑ "Arapaima (Arapaima gigas)". Arkive.org. Archived from the original on 2012-11-03. பார்க்கப்பட்ட நாள் 2017-05-29.
- ↑ Dunham, Will (2019-10-16). "Amazon fish wears nature's 'bullet-proof vest' to thwart piranhas". Reuters இம் மூலத்தில் இருந்து 2020-11-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201120232144/https://www.reuters.com/article/us-science-fish/amazon-fish-wears-natures-bullet-proof-vest-to-thwart-piranhas-idUSKBN1WV2JS.
- ↑ La aventura del Paiche en la Amazonía de Bolivia பரணிடப்பட்டது 2023-07-31 at the வந்தவழி இயந்திரம், Laregion.bo. Retrieved 2020-02-27.