அரிதாள் எரிப்பு
அரிதாள் எரிப்பு (Stubble burning) என்பது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் மற்றும் வட இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப் அரியானாவில் விளைந்த நெற்ப் பயிர்களை அறுவடை செய்த பிறகு வயலை சுத்தப்படுத்தி கோதுமை விதைப்பதற்காக, வயலில் எஞ்சி நிற்கும் நெல் கட்டைப் பயிர் எச்சங்களை அக்டோபர் முதல் திசம்பர் நடுப்பகுதி வரை எரித்து விடுவது வழக்கம்.[1] இந்நிகழ்வு ஒரு வாரம் அல்லது தொடர்ந்து நடைபெறும் செயலாகும்[1] அதேசமயம் கோதுமைக் கட்டைப் பயிர்களை எரிப்பதில் மேற்கு உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் அறுவடையான பிறகு எஞ்சியுள்ள கட்டைப்பயிர்களை சட்டவிரோதமான செயலாகும்.[1]
தில்லியைச் சுற்றிய மாநிலங்களின் அறுவடையான பின் எஞ்சி நிற்கும் கட்டைப் பயிர்களை எரிப்பதால், தில்லி வானத்தில் குளிர்காலத்தில் அளவிற்கு அதிகமாக காற்று மாசுபாடு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் சுவாசிக்கும் காற்றின் மூலம் நுரையீரல் பாதிகக்ப்படுவதால் சுவாச நோய்கள் ஏற்படக் காரணமாகிறது.
கட்டைப் பயிர்களை எரிக்க காரணம்
தொகுநெல் அறுவடைக்கும், கோதுமை விதைப்பதற்கும் இடையே உள்ள குறுகிய கால அவகாசமே இருப்பதால்,.வயலை சுத்தப்படுத்த நெற்பயிரை அறுவடை செய்தவுடன், வயலில் எஞ்சி நிற்கும் கட்டைப் பயிர்களை தீ வைத்து எரித்து விடுவது வழக்கம்.
தாக்கம்
தொகுவயலில் அறுவடையான பிறகு எஞ்சியுள்ள் கட்டைப் பயிர்களை எரிப்பதால் கார்பனோராக்சைடு (CO), மீத்தேன் (CH4), புற்றுநோயை உண்டாக்கும் பாலிசைக்ளிக் ஹைட்ரோகார்பன்கள், ஆவியாகும் கரிம சேர்மங்கள் (VOC) போன்ற தீங்கு விளைவிக்கும் வாயுக்களால் வளிமண்டலத்தில் அனுமதிக்கப்பட்ட காற்றுத் தரச் சுட்டெண்ணை விட காற்றில் மாசு ஏற்படுகிறது. இந்த மாசுக்கள் சுற்றுப்புறங்களில் பரவி, இறுதியில் காற்றின் தரம் மற்றும் மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
வாகன உமிழ்வுகளுடன், கட்டைப் பயிர் எரிப்பால் தில்லியின் [[காற்றுத் தரச் சுட்டெண்|] கடுமையாக பாதிக்கிறது. வட இந்தியாவில் அரியானா, மேற்கு உத்திரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் விவசாயிகளால் புல் எரிக்கப்படுவது டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காற்று மாசுபாட்டிற்கு ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
கட்டைப் பயிர்களை எரிப்பதா மண்ணில் வெப்பம் ஊடுருவி மண்னில் உள்ள நுண்ணுயிரிகள் மற்றும் ஈரப்பதம் இழப்பு ஏற்படுகிறது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Meer Baloch, Shah; Ellis-Petersen, Hannah (1 November 2024). "'More toxic than ever': Lahore and Delhi choked by smog as 'pollution season' begins". The Guardian. https://www.theguardian.com/world/2024/nov/01/lahore-delhi-choked-smog-pollution-season-india-pakistan.