அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்
(அரியக்குடி இராமானுசன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் (1890- ஜனவரி 23 1967)[1]), காரைக்குடி அருகிலுள்ள அரியக்குடி என்ற சிற்றூரில் பிறந்த ஒரு கருநாடக இசை மேதை. அரியக்குடி என்றே இசையுலகில் அறிமுகமான இவர் தமக்கென்று ஒரு தனி பாணியை வகுத்துக்கொண்டார். 1918ஆம் வருடத்தில் தியாகராஜ ஆராதனையில் தம் முதல் கச்சேரியை நிகழ்த்தினார். ஒரு புகழ்பெற்ற சங்கீத பரம்பரையை உருவாக்கிய பெருமை இவரைச் சேரும்.
எழுத்தாளராகதொகு
கல்கி இரா. கிருஷ்ணமூர்த்தி ஆனந்த விகடனில் ஆசிரியராக இருந்தபோது பல புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்தார். 1938 ஆம் ஆண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலரில் அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் "ஸங்கீதத்தின் பெருமை" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார்.[2]
விருதுகள்தொகு
- சங்கீத ரத்னாகர விருது, 1936 வேலூர் சங்கீத சபா[3]
- சங்கீத கலாநிதி விருது 1938. வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை.[4]
- சங்கீத கலாசிகாமணி விருது, 1938 & 1951. வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி (தலைமை டி. எல். வெங்கட்ராம ஐயர்)
- சங்கீத நாடக அகாதமி விருது 1952[5]
- பத்ம பூசன் 1958 en:Padma Bhushan Awards (1954–1959)
- இசைப்பேரறிஞர் விருது, 1960. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[6]
மேற்கோள்கள்தொகு
- ↑ சங்கீத சங்கதிகள் 28
- ↑ சங்கீத சங்கதிகள் - 6
- ↑ ராமபத்ரன் செவ்வி (ஆங்கிலம்)
- ↑ "AWARDS - SANGITA KALANIDHI". மியூசிக் அகாதெமி (23 டிசம்பர் 2018). பார்த்த நாள் 23 டிசம்பர் 2018.
- ↑ "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018. http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.
- ↑ "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம் (23 டிசம்பர் 2018). பார்த்த நாள் 23 டிசம்பர் 2018.
வெளி இணைப்புகள்தொகு
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் |