அருண் சிங் (அரசியல்வாதி)

அருண் சிங் (Arun Singh ) (பிறப்பு 1944 ஆகத்து 29 ) இவர், இந்திய அரசாங்கத்தின் முன்னாள் மத்திய பாதுகாப்பு மந்திரி ஆவார். ராஜீவ் காந்தி தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார்.

இவர் கபுர்த்தலாவின் அரச குடும்பத்தில் குடும்பத்தில் சிறீநகரில் பிறந்தார். இவர் கபுர்த்தலாவைச் சேர்ந்த மகாராஜா ஜகத்ஜித் சிங்கின் இரண்டாவது மகன் மகாராஜ்குமார் கரம்ஜித் சிங்கின் (1896-1967) மூத்த மகனாவார். தூன் பள்ளியிலும், தில்லி புனித இசுடீபன் கல்லூரியிலும் படித்த சிங், பின்னர் கேம்பிரிச்சு புனித கேதரின் கல்லூரியில் முதுகலை படித்தார். இங்கு இவர் ராஜீவ் காந்தியின் வகுப்புத் தோழராக இருந்தார். [1] 1971 இல் பட்டம் பெற்றவுடன், அருண் சிங் தி மெட்டல் பாக்ஸ் என்ற நிறுவனத்திலும் பின்னர் ரெக்கிட் மற்றும் கோல்மனிலும் சேர்ந்தார். 1984 ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1988 வரை பணியாற்றினார். [2]

போபர்ஸ் ஊழல் வெளிப்படுவதற்கு முன்பு அரசாங்கத்தை விட்டு வெளியேறியதற்காக சிங் சில எதிர்மறையான கவனத்தை ஈர்த்தார். [3] சிங் விளக்கமின்றி அரசாங்கத்தை விட்டு வெளியேறினார். நிறுவனத்திடமிருந்து தனக்கு பணம் எதுவும் கிடைக்கவில்லை என்று சிங் கூறினார். [4]

கார்கில் போரின் போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாதுகாப்பு மந்திரி ஜஸ்வந்த் சிங் இவரை மீண்டும் தனது ஆலோசகராக நியமித்துக் கொண்டார்.

குறிப்புகள்தொகு