அருண் நரங்
அருண் நரங் (Arun Narang) பஞ்சாபை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி ஆவார். இவர் 2017 ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில் அபோஹர் தொகுதியில் இருந்து பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]
முக்த்சரில் தாக்குதல்
தொகு2021 மார்ச் 27 அன்று, அருண் நரங் பஞ்சாபில் உள்ள முக்த்சர் மாவட்டத்தில் உள்ள மாலூட் என்ற இடத்திற்கு செய்தியாளர் சந்திப்புக்காகச் சென்றிருந்தார்.[5] இவர் வந்ததும், பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் அருகே காத்திருந்த BKU [6] இன் ஏக்தா சித்துபூர், லகோவால் மற்றும் காடியன் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், அவர் மீது கருப்பு மை வீசினர். காவல் துறை அதிகாரி அவர்களை உள்ளூர் கடைக்கு அழைத்துச் சென்றார், ஆனால் அதிலிருந்து திரும்பியதும், எதிர்ப்பாளர்கள் அவர்களைத் தாக்கியதாகவும், நரங்கை நிர்வாணமாக்கியதாகவும் கூறப்படுகிறது.[7]
சட்டமன்ற உறுப்பினர் தாக்கப்பட்டதற்கு பாரதிய ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது. போராட்டக்காரர்கள் அனைவரும் அமைதியாக இருக்குமாறு சம்யுக்தா கிசான் மோர்ச்சா வேண்டுகோள் விடுத்துள்ளது.
250-300 அறியப்படாத போராட்டக்காரர்கள் மீது முதல் தகவல் அறிக்க பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ My Neta
- ↑ Abohar sanitation workers call off strike
- ↑ Disqualify 7 Cong MLAs: SAD-BJP
- ↑ SAD-BJP demands disqualification of 7 Cong MLAs
- ↑ "Protesting farmers thrash BJP MLA, tear his clothes in Punjab's Muktsar; Congress, SAD condemn attack". இந்தியா டுடே Website. Archived from the original on 27 March 2021. பார்க்கப்பட்ட நாள் 28 March 2021.
- ↑ "BJP MLA beaten up, stripped by Punjab 'farm protesters'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா Website. Archived from the original on 27 March 2021. பார்க்கப்பட்ட நாள் 28 March 2021.
- ↑ "BJP MLA thrashed, clothes torn by protesting farmers in Punjab's Muktsar". இந்தியன் எக்சுபிரசு Website. Archived from the original on 27 March 2021. பார்க்கப்பட்ட நாள் 28 March 2021.