அருள்மிகு எயிலிநாதர் திருக்கோயில், பரமத்திவேலூர் நன்செய் இடையாறு

அருள்மிகு எயிலிநாதர் திருக்கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இது பழைய பிரதான சுயம்பாக தோன்றிய கோயில் ஆகும்.

அருள்மிகு எயிலிநாதர் திருக்கோயில், பரமத்திவேலூர் நன்செய் இடையாறு
பெயர்
பெயர்:அருள்மிகு எயிலிநாதர் திருக்கோயில், பரமத்திவேலூர் நன்செய் இடையாறு
அமைவிடம்
மாவட்டம்:சேலம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:எயிலிநாதர், திருவேலிநாதர்
தாயார்:சுந்தரவல்லி

அமைவிடம்தொகு

காவிரி ஆறுக்கும், திருமணிமுத்தாறுக்கும் இடையே அமைந்த செழிப்பான ஊர் என்பதால் "நன்செய் இடையாறு' என்ற காரணப் பெயர் இந்த தலத்திற்கு ஏற்பட்டது. கோயில்கள் நிறைந்த புண்ணிய பூமி இது. ஊரைச்சுற்றி பெருந்தெய்வ, சிறுதெய்வ கோயில்கள் உள்ளன. இந்த கோயிலின் சுற்று மதிலுக்குள்ளேயே சீனிவாச பெருமாள் கோயிலும் உள்ளது.

கட்டியவர்கள்தொகு

இக்கோயிலை முதலாம் ராஜராஜசோழனும், அவரது மகன் ராஜேந்திரசோழனும் கட்டினர் என்பதற்கு கல் வெட்டு சான்று உள்ளது. பழம்பெருமை வாய்ந்த இந்த கோயில் கி.பி.10ம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டதாக தகவல் உள்ளது.

தல வரலாறுதொகு

பஞ்ச பாண்டவர்களில் பலசாலியான பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் நன்செய் இடையாறில் உள்ளது. பீமன் மிகவும் பலம் மிக்கவன் என கருதிக்கொண்டிருந்தான். தன்னைவிட இந்த உலகில் வலியவர் யாருமில்லை என சொல்லித்திரிந்தான். அவன் நல்லவன் ஆயினும் இந்த ஆணவம் அவனது புகழை குறைத்தது. அவனுக்கு புத்தி புகட்ட திருமால் செய்த ஏற்பாட்டின்படி சிவபெருமான் புருஷாமிருகம் என்ற ஒன்றை ஏவினார். இது மனித உடலும், மிருக தலையும் கொண்டது. அந்த மிருகத்தின் சக்தியின் முன் பீமனால் நிற்க முடியவில்லை. தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, "கோவிந்தா, கோபாலா' என கதறிக்கொண்டே ஓடினான்.

பஞ்ச தலங்கள்தொகு

சிவபெருமானின் அருளால் அந்த மிருகத்திடமிருந்து தப்பினான். சேர்வராயன்மலையில் உற்பத்தியாகி பாயும் திருமணி முத்தாற்றின்கரையோரத்தில் உள்ள ஐந்து இடங்களில் சிவ பூஜை செய்தான். அங்கே சிவபெருமான் எழுந்தருளினார். சேலம் சுகவனேசுவர் கோயில், உத்தமசோழபுரம் கரபுரநாதசுவாமி கோயில், பில்லூர் வீரட்டேஸ்வரர், பரமத்திபீமேஸ்வரர், நன்செய் இடையாறு திருஎயிலிநாதர் கோயில்களே அவை.

வலைத்தளம்தொகு