அருள்மிகு சத்தியசாயிபாபா உயர்சிறப்பு மருத்துவமனை

அருள்மிகு சத்திய சாயி உயர்சிறப்பு மருத்துவமனை (Sri Sathya Sai Super Speciality Hospital) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு உயர்தர மருத்துவமனை[1]. இது ஆந்திரப் பிரதேசத்தில் புட்டபர்த்தி நகரில் அமைந்துள்ளது. இதுபோன்ற மற்றும் ஒரு மருத்துவ மனை, கர்நாடக மாநிலத்தில் பெங்களூருக்கு அருகில் உள்ள ஒயிட்ஃபீல்டு எனும் இடத்தில் உள்ளது. இது பின்நாளில் கட்டப்பட்டது. இம்மருத்துவமனைகள் சத்திய சாயி பாபா அறக்கட்டளையினால் நிருவகிக்கப்படுகின்றன. இங்கு அளிக்கப்படும் அனைத்து மருத்துவ வசதிகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

கர்நாடகாவில் வைட்ஃபீல்ட் நகரில் அமைந்துள்ள அருள்மிகு சத்தியசாயி உயர்சிறப்பு மருத்துவமனை வளாகம்


இந்த உயர்சிறப்பு மருத்துவமனையின் சிறப்பு, `இதயநோய்க்கு` -இதயமாற்று அறுவை சிகிச்சைக்கு-முன்னுரிமை அளித்தல் ஆகும். இதயமாற்று அறுவை சிகிச்சைகள் இங்கு இலவசமாகச் செய்யப்படுகின்றன.

இந்த மருத்துவத் தொண்டானது, சாதி, மத, இன, நிற, பால், நாடு வேறுபாடுகள் கருதாது அனைவருக்கும் அளிக்கப்படுகின்றது; மனிதர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர் எந்தநாட்டவராயினும், எந்த மதத்தைச் சார்ந்தவராயினும் சரி, அவர் எந்தச் சாதியாக இருந்தாலும் சரி, அவருடைய இதய நோய்க்கு இலவசமாக மருத்துவம் இங்கு மருத்துவம் அளிக்கப்படுகின்றது.

ஏழை எளிய மக்களை மனதிற்கொண்டே பாபா அவர்கள், இத்தகு மருத்துவமனைகளை உருவாக்கியுள்ளார். இந்தத்திட்டத்தினை 1990 ஆம் ஆண்டு, நவம்பர் 23 ஆம் நாள் வெளியிட்டபோது அவர் குறிப்பிட்டார்:

"பலர் இந்த மருத்துவமனையினை ஒரு நகர்ப் பகுதியில்தான் ஏற்படுத்த வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். பல நகரங்களில், எத்தனையோ மருத்துவ நிறுவனங்கள் வணிக நோக்கில் இயங்கிவருகின்றன. எந்த ஓர் இடத்திலாவது ஒரு கல்விக்கூடமோ, மருத்துவமனையோ ஆரம்பிக்கப்படுகின்றது என்றால், அதன் முற்ற முழுமையான ஒரே நோக்கம் பணம் சம்பாதிப்பது என்பதாகத்தான் உள்ளது! என்றாலும் ஏழைகளுக்கு இலவச உதவி செய்வதற்காக, இத்தகைய நிறுவனங்களைத் தொடங்க ஒருசிலர் தயாராக இருக்கத்தான் செய்கின்றனர் என்பதையும் இங்கே சொல்லிஆக வேண்டும். எனவே, பிரசாந்தி நிலையத்தின் அருகிலேயே, நூறு கோடி ரூபாய் செலவில் ஒரு மருத்துவமனையினைத் தொடங்க ஆரம்பத்திலேயே முடிவுசெய்தோம். உயர்கல்வி இங்கே இலவசமாக அளிக்கப்படுவதைப்போலவே, உயர் மருத்துவவசதியும் இங்கே இலவசமாக அளிக்கப்படும்.”

மேற்கோள்கள் தொகு

  • அருள்மிகு சத்தியசாயி உயர்சிறப்பு மருத்துவமனை திருச்சி: கண்ணகிக்கோட்ட வெளியீடு, 1995.