அருள்மிகு சாலிவரதேஸ்வரர் சிவன் கோவில்

சாலிவரதேஸ்வரர் கோயில் என்பது ஒரு சிவன் கோயிலாகும். இக்கோவில் தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தில், வடசேரி என்ற ஊரில் நெசவாளர்கள் அதிகம் வாழும் பகுதியில் உள்ளது. இக்கோவில் அமைந்துள்ள தெருவின் பெயர் பெரியராசிங்கன் தெரு ஆகும். இக்கோவிலை இப்பகுதியில் உள்ள நெசவாளர்களே கட்டினார்கள். இக்கோவிலில் ஒரு சிவனடியாரின் சமாதியும் உள்ளது. இக்கோவில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. பிரதோஷ தினத்தன்று இக்கோவிலில் சிவபெருமானுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இங்கு அம்மாள் சந்நதி, வினாயகர் சந்நதி, முருகன் , சண்டிகேஸ்வரர், ஆஞ்சனேயர், தட்சிணாமூர்த்தி, நவக்கிரக சந்நதிகள் உள்ளன.

அருள்மிகு சாலிவரதேஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கன்னியாகுமரி
கோயில் தகவல்கள்
மூலவர்:சிவன்