அருள்மிகு ஜயந்தீசுரர் திருக்கோயில்

தாழைக்குடி, தோவாளை வட்டம் கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியிலிருந்து தெற்கே 4 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. அம்மன் அழகம்மை. தாழைகள் நிறைந்த காட்டைச் சீராக்கி மக்களை குடியேற்றியதால் தாழைக்குடி என்று பெயர் பெற்றது. தேவேந்திரன் மகன் ஜயந்தன் இத்தலத்திற்கு வந்து தங்கிச் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவர் ஜயந்தீசுவரமுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயிலை வீரகேரளவர்மன் கட்டியதாக கல்வெட்டில் குறிக்கப்படுகிறது. நாள்தோறும் இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. பங்குனி மாதத்தில் உற்சவம் நடைபெறுகிறது.

அருள்மிகு ஜயந்தீசுரர் திருக்கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கன்னியாகுமரி
அமைவு:சிவன்மலை
கோயில் தகவல்கள்
மூலவர்:ஜயந்தீசுரர்
தாயார்:வள்ளி
தீர்த்தம்:காசித் தீர்த்தம்