அருள் சுப்பிரமணியம்
அருள் சுப்பிரமணியம் ஈழத்தின் நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் திருகோணமலையைச் சேர்ந்தவர். அக்கரைகள் பச்சையில்லை (வீரகேசரி பிரசுரம்), அவர்களுக்கு வயது வந்துவிட்டது போன்ற நாவல்களை எழுதியவர். ஆனந்த விகடன் இதழில் சூரசம்ஹாரம் என்ற தொடர்கதையை எழுதினார்.