அர்ச்சனா சுசீந்திரன்
இந்தியத் தடகள வீரர்
அர்ச்சனா சுசீந்திரன் (Archana Suseendran) இந்தியாவைச் சேர்ந்த ஓர் ஓட்டப்பந்தய வீரராவார். 1994 ஆம் ஆண்டு சூன் மாதம் 9 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். விரைவோட்ட விளையாட்டுப் போட்டியில் இவர் நிபுணத்துவம் பெற்றவராக இருந்தார்.[1] பெண்கள் 200 மீட்டரில் போட்டியிட்டு 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக தடகள வெற்றியாளர் போட்டியில் இவர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். [2]ஆனால் அரையிறுதியில் போட்டியிட இவர் தகுதிபெறவில்லை.[3]
தனிநபர் தகவல் | |
---|---|
தேசியம் | இந்தியர் |
பிறப்பு | 9 சூன் 1994 தமிழ்நாடு, இந்தியா |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
விளையாட்டு | தடகளம் |
நிகழ்வு(கள்) | விரைவோட்டம் |
36-ஆவது தேசிய விளையாட்டு போட்டி குசராத்து மாநிலத்தில் உள்ள அகமதபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, இராச்கோட், பவநகர் ஆகிய நகரங்களில் நடைபெற்றது. மகளிர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் தங்கம் வென்றார்.[4]
தனியர் சிறப்புகள்
தொகுபோட்டி | நேரம் (வினாடிகள்) | இடம் | நாள் |
---|---|---|---|
100 மீட்டர் | 11.49 | இலக்னோ, இந்தியா | 29 ஆகத்து 2019 |
200 மீட்டர் | 23.18 | பட்டியாலா, இந்தியா | 16 ஆகத்து 2019 |
400 மீட்டர் | 56.90 | கோயம்புத்தூர், இந்தியா | 13 சனவரி 2017 |
4 × 100 மீட்டர் | 43.37 | பட்டியாலா, இந்தியா | 21 சூன் 2021 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Archana Suseendran Athlete Profile". iaaf.org. பார்க்கப்பட்ட நாள் 6 October 2019.
- ↑ "Women's 200 metres". iaaf.org. பார்க்கப்பட்ட நாள் 6 October 2019.
- ↑ "Women's 200 metres – Heats" (PDF). 2019 World Athletics Championships. Archived (PDF) from the original on 30 September 2019. பார்க்கப்பட்ட நாள் 5 August 2020.
- ↑ "தேசிய விளையாட்டுப் போட்டி - 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் தங்கம் வென்றார்". தினத்தந்தி. https://www.dailythanthi.com/Sports/OtherSports/national-games-tamil-nadus-archana-suseendran-wins-gold-in-200m-race-807504?infinitescroll=1. பார்த்த நாள்: 28 December 2023.