அர்நாத் சிங் யாதவ்

இந்திய அரசியல்வாதி

அர்நாத் சிங் யாதவ் (Harnath Singh Yadav)(பிறப்பு 1 ஏப்ரல் 1941) என்பவர் உத்தரப்பிரதேசத்தினை சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவையில் உத்தரப்பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினராக 2018ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் மைன்புரி மாவட்டத்தில் உள்ள கோபால்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.

அர்நாத் சிங் யாதவ்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
3 ஏப்ரல் 2018
தொகுதிஉத்தரப்பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 ஏப்ரல் 1941 (1941-04-01) (அகவை 83)
மைன்புரி, ஐக்கிய மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
(இன்று உத்தரப்பிரதேசம், இந்தியா)
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)153 வடக்கு பகுதி, புது தில்லி
மூலம்: [1]

அர்நாத் சிங் யாதவ் ஒரு முன்னாள் சட்டமேலவை உறுப்பினர் ஆவார். இவர் மைன்புரியிலிருந்து இட்டாவிற்கு குடிபெயர்ந்தார். ஆர். எஸ். எஸ். சேவகராகப் பணியாற்றிய பின்னர் பாஜக மாநில பொதுச் செயலாளராக ஆனார். இவர் முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்குக்கு நெருக்கமானவர். இவர் 1996-ல் சுயேச்சையாகச் சட்ட மேலவை உறுப்பினராகவும், பின்னர் 2002-ல் ஆக்ரா பட்டதாரி தொகுதியிலிருந்து சமாஜ்வாதி கட்சியின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த இவர், பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். 2017 உத்தரப்பிரதேச தேர்தலில், யாதவர்கள் நிறைந்த மாவட்டமான மைன்புரியின் பொறுப்பாளராக பாஜக இவரை நியமித்தது.

மேற்கோள்கள் தொகு

  1. "BJP bags 11 Rajya Sabha seats, crushes SP-BSP bonhomie in UP". தி எகனாமிக் டைம்ஸ். 24 March 2018. பார்க்கப்பட்ட நாள் 24 March 2018.
  2. "In Rajya Sabha race, newcomers & state leaders". Indian Express. 13 March 2018. பார்க்கப்பட்ட நாள் 24 March 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்நாத்_சிங்_யாதவ்&oldid=3742748" இலிருந்து மீள்விக்கப்பட்டது