அறிவியல் தகவல் தொடர்பு விருது

அறிவியல் தகவல் தொடர்பு விருது (Science Communication Prize) என்பது ஐரோப்பிய ஆணையத்தால் வழங்கப்படும் அறிவியல் படைப்புக்காக ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும் ஒரு விருதாகும்.

2004 ஆம் ஆண்டு அறிவியலுக்காக டெசுகார்ட்டெசு பரிசு என்ற பெயரில் இவ்விருது தொடங்கப்பட்டது. ஆனால் 2007 ஆம் ஆண்டு முதல் அறிவியல் எழுத்தாளருக்கான பரிசுக்கு பிரிக்கப்பட்டது. [1]

இது "பரிசு பெற்றவர்களுக்கான ஒரு பரிசு" ஆகும். விருதுக்கு முந்தைய ஆண்டிலிருந்து பிற விருது திட்டங்களை வென்றவர்களில் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து இவ்விருது வழங்கப்படுகிறது. அறிவியல் பொது ஈடுபாடு, செய்தித்தாள் கட்டுரைகள் மற்றும் பிரபலமான அறிவியல் புத்தகங்கள் வெளியீடு , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் வலைத்தளங்கள் உள்ளிட்ட ஒலி காட்சி ஊடகங்கள் மற்றும் "புதுமையான அறிவியல் நடவடிக்கை" உள்ளிட்டவை அறிவியல் தகவல் தொடர்புடன் தொடர்பு கொண்டுள்ளவையில் அடங்கும். [2]

பெறப்பட்ட முன்மொழிவுகள் அல்லது அறிவியல் ஆக்கங்கள் சோதிக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்டவர்களின் ஒரு குறுகிய பட்டியல் அறிவிக்கப்படுகிறது. அதில் இருந்து ஐந்து இறுதிப் போட்டியாளர்கள் மற்றும் ஐந்து வெற்றியாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் பரிசு விழாவில் அறிவிக்கப்படுகிறார்கள்.

மேற்கோள்கள் தொகு

  1. Research - EU Prize for excellence in science communication
  2. European Science Awards, The 2007 Science Communication Prize (English) பரணிடப்பட்டது 2006-06-30 at the வந்தவழி இயந்திரம்

 

புற இணைப்புகள் தொகு