அறுபது தூண் பள்ளிவாசல்

வங்காளதேசத்திலுள்ள பள்ளிவாசல்

அறுபது தூண் பள்ளிவாசல் (Sixty Dome Mosque) என்பது வங்காளதேசத்திலுள்ள உள்ள ஒரு பள்ளிவாசலாகும். இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான பேகர்காட் பள்ளிவாசல் நகரத்தின் ஒரு பகுதியாக திகழ்கிறது. இது சுல்தானக காலத்திலிருந்து (1204-1576) வங்காளதேசத்தின் மிகப்பெரிய பள்ளிவாசலாகவும் இருந்தது. இது வங்காள சுல்தானகத்தின் போது சுந்தரவனக் காடுகளின் ஆளுநரான உலுக் கான் ஜஹான் என்பவரால் கட்டப்பட்டது. இது "இந்திய துணைக் கண்டம் முழுவதிலும் ஈர்க்கக்கூடிய முஸ்லிம் நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும்" என்று விவரிக்கப்பட்டுள்ளது.

அறுபது தூண் பள்ளிவாசல்
அமைவிடம்பேகர்காட், வங்காளதேசம்
ஆள்கூற்றுகள்22°40′28″N 89°44′31″E / 22.67444°N 89.74194°E / 22.67444; 89.74194
பரப்பளவு1,605 m2 (17,280 sq ft)
கட்டப்பட்டது15ஆம் நூற்றாண்டு
கட்டிடக்கலைஞர்கான் ஜஹான் அலி
கட்டிட முறைதுக்ளக் வம்சம்
வகைகலாச்சாரம்
வரன்முறைiv
தெரியப்பட்டது1985 ( உலக பாரம்பரியக் குழுவின் 9ஆம் அமர்வு)
உசாவு எண்321
மாநில கட்சிவங்காளதேசம்
பிராந்தியம்ஆசியா- பசிபிக்
அறுபது தூண் பள்ளிவாசல் is located in வங்காளதேசம்
அறுபது தூண் பள்ளிவாசல்
வங்காளதேசம் இல் அறுபது தூண் பள்ளிவாசல் அமைவிடம்

வரலாறு

தொகு

15 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், பேகர்காட் மாவட்டத்தின் கடற்கரைக்கு அருகிலுள்ள சுந்தரவனக்காடுகளின் சதுப்புநிலத்தில் கான் ஜஹான் அலி என்பவரால் ஒரு முஸ்லிம் காலனியாக இந்த பள்ளிவாசல் நிறுவப்பட்டது. அப்போது 'கலீபதாபாத்' என்று அழைக்கப்பட்ட சுல்தான் நசிருதீன் மகமூத் ஷா ஆட்சியின் போது ஜஹான் அலி நகரத்தில் இசுலாத்தை பிரசங்கம் செய்தார்.[1] கான் ஜஹான் இந்த நகரத்த்தில் பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களை கட்டினார். தற்போது கூட அவற்றின் இடிபாடுகள் வங்காளதேசத்தில் 'சைத்-கும்பாட் மஸ்ஜித்' என அழைக்கப்படும் மிகப் பெரிய பல குவிமாடங்களை கொண்ட பள்ளிவாசலாக இருக்கிறது. இதன் கட்டுமானம் 1442 இல் ஆரம்பிக்கப்பட்டு 1459 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இதனை கட்டி முடிக்க 17 ஆண்டுகள் ஆனது. இந்த பள்ளிவாசல் முஸ்லிம்களுக்கும், மதரசாவாகவும், கூட்ட மண்டபமாகவும், ஒரு பிரார்த்தனைக்கான இடமாகவும் பயன்படுத்தப்பட்டது.[2]

 
பள்ளிவாசலின் உள்ளே

அமைவிடம்

தொகு

இது தெற்கு வங்காளதேசத்தின் பேகர்காட் மாவட்டத்தில் குல்னா கோட்டத்தில் அமைந்துள்ளது. இது பிரதான நகரமான பேகர்காட்டிலிருந்து 5 கிலோமீட்டர் (3 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. [3] பேகர்காட் மாவட்டம், வங்கதேசத் தலைநகரான டாக்காவிலிருந்து சுமார் 320 கி.மீ (200 மைல்) தொலைவில் உள்ளது. [2]

கட்டிட பாணி

தொகு

அறுபது குவிமாடம் பள்ளிவாசல் துக்ளக் பாணி வடிவமைப்பில் தடிமனான சுவர்களால் கட்டப்பட்டுள்ள. மேலும், இதன் கூரை ஒரு குடிசையின் கூரை போன்றுள்ளது. இது இந்த கூரை பிற்காலத்தில் மீண்டும் கட்டப்பட்டது என்பதைக் காட்டுகிறது. இந்த பள்ளிவாசல் 160 அடி முதல் 108 அடி நீளமும், அகலமும் கொண்டது. தலா பதினொரு குவிமாடங்களின் ஏழு வரிசைகளிலும், பள்ளிவாசலின் ஒவ்வொரு மூலையிலும் நான்கு குவிமாடங்களிலும் 77 குவிமாங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மூலையிலும் நான்கு மினாரெட்டுகள் உள்ளன. பிரார்த்தனைக்கான அழைப்பை பாங்கு வழங்க முன் மினாரெட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. உட்புறமாக மசூதி வளைவுகளின் உதவியுடன் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த வளைவுகள் பள்ளிவாசலின் கூரையை ஆதரிக்கும் வகையில் செய்யப்ட்டுள்ளன.

பெரிய பிரார்த்தனை மண்டபத்தில் கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கில் வளைவுகள் ஒளிபரப்பப்படுவதற்கும் ஒளி வீசுவதற்கும் ஏற்றவாறு காணப்படுகின்றன.

அறுபது குவிமாடங்கள் அல்லது அறுபது நெடுவரிசைகள்

தொகு

இது உள்நாட்டில் 'சைத் கோம்புஜ் மஸ்ஜித்' என்று அழைக்கப்படுகிறது. இது பங்களாவில் அறுபது குவிமாடம் பள்ளிவசல் என்று பொருள். இருப்பினும், பிரதான மண்டபத்தின் மீது 77 குவிமாடங்களும் சரியாக 60 கல் தூண்களும் உள்ளன. [3]

இந்த மசூதி முதலில் அறுபது தூண் மசூதி என்று குறிப்பிடப்பட்டிருக்கலாம். அங்கு அமுத் (عمؤد) அரபு / பாரசீக மொழியில் நெடுவரிசை என்று பொருள், பின்னர் பங்களாவில் உள்ள கோம்புஜ் (গম্বুজ) க்கு சிதைந்தது, அதாவது குவிமாடங்கள் என்ற பொருள்.

புகைப்படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Shat Gombuj Mosque – Bangladesh". Banglaview24.com. 2012-04-24. பார்க்கப்பட்ட நாள் 2013-08-28.
  2. 2.0 2.1 "The Shat Gambuj Masjid (The Sixty Domes Mosque)". Rafiul alam. பார்க்கப்பட்ட நாள் 2012-04-14.
  3. 3.0 3.1 "Shat Gambuj Mosque: world Heritage site as a historical beautiful mosque". Travel-bangladesh.net. பார்க்கப்பட்ட நாள் 2013-08-28.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sixty Dome Mosque
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறுபது_தூண்_பள்ளிவாசல்&oldid=3846972" இலிருந்து மீள்விக்கப்பட்டது