அலகாபாத் தூண்

அலகாபாத் தூண் (Allahabad Pillar) கி மு மூன்றாம் நூற்றாண்டின் மௌரியப் பேரரசர் அசோகர் நிறுவியதாகும். அவர் நிறுவிய பல தூண்களில் அலகாபாத் துண் மணற்கல்லால் ஆனது. இத்தூண் உயரம் 35 அடி உயரமும் 35 அங்குலம் சுற்றளவும் கொண்டது. தூணின் உச்சியில் அமர்ந்த நிலையில் சிங்கம் பொறிக்கப்பட்டுள்ளது.

அலகாபாத் தூண்
Ashoka Pillar, Allahabad, 1870.jpg
சிங்க முகத்துடன் கூடிய அசோகரது அலகாபாத் தூண்
ஆள்கூறுகள்25°25′52″N 81°52′30″E / 25.43111°N 81.87500°E / 25.43111; 81.87500
இடம்அலகாபாத், உத்தரப் பிரதேசம், இந்தியா
வகைஸ்தூபி
கட்டுமானப் பொருள்மணற்கல்
அகலம்35 அங்குலங்கள் (0.9 m)[1]
உயரம்35 அடிகள் (10.7 m)[1]
முடிவுற்ற நாள்கி. மு 3-ஆம் நூற்றாண்டு

இத்தூண் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமை வாய்ந்த ஸ்தூபி ஆகும். இத்தூணில் அசோகரின் குறிப்புகள்[1]:3 மற்றும் சமுத்திரகுப்தரின் குறிப்புகள் காணப்படுகிறது. [2]

வரலாறுதொகு

 
சிங்கத் தலையுடன் அலகாபாத் தூண்

அலகாபாத் தூண் என அழக்கப்படும் இத்தூண் முதலில் கோசல நாட்டின் தலைநகரம் கௌசாம்பியில் அசோகரால் கி மு மூன்றாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. பின்னர் இத்தூணை கௌசாம்பிலிருந்து பிரயாகை என்றழைக்கப்பட்ட, அக்பர் 1583-இல் கட்டிய அலகாபாத் கோட்டையில் ஜஹாங்கீரால் 1605-இல் மாற்றி நிறுவப்பட்டது. [3][1]

 
18-ஆம் நூற்றாண்டின் அலகாபாத் தூண்

உருவ வழிபாடு வெறுத்த இசுலாமியர்களால் பலமுறை இந்த தூண் சிதைக்கப்பட்டது.[4]:968 13-ஆம் நூற்றாண்டில் இத்தூண் மறுசீரமைக்கப்பட்டது. [4] இத்தூண் மொகலாய பேரரசன் ஜஹாங்கீர் காலத்தில் 1605-ஆம் ஆண்டில் மறுசீரமைத்து, அதில் தனது முன்னோர்களின் பெயர்களை பொரித்தார் [1] 1838-ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் போது ஆங்கிலேயே பொறியாளர் கேப்டன் எட்வர்டு ஸ்மித் என்பவரால் அலகாபாத்தின் அசோகரது தூண் மீண்டும் மறுசீரமைக்கப்பட்டு, புது சிங்க முகங்கள் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டது.

குறிப்புகள்தொகு

1834-ஆம் ஆண்டில் ஆசியச் சமூக சங்கத்தைச் சார்ந்த ஜேம்ஸ் பிரின்ஸ்சப் என்பவர், அலகாபாத் கோட்டையின் அசோகரது தூணில் இருந்த குறிப்புகள் கடும் வெயிலாலும், மழையாலும், பனியாலும் உருக்குலைந்திருந்ததை குறிப்பெடுத்துள்ளார். [5][6]

இத்தூணில் அசோகர், சமுத்திரகுப்தர் மற்றும் ஜஹாங்கீர் போன்ற மூன்று பேரரசர்களின் குறிப்புகள் காணப்படுகிறது. ஆங்கிலேயே தொல்லியலாளர் அலெக்சாண்டர் கன்னிங்காமனின் கூற்றுப்படி, இத்தூண்கள் சமுத்திரகுப்தர் காலத்தில் கி பி நான்காம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாக அறிய முடிகிறது. இத்தூணில் சமுத்திரகுப்தரின் வெற்றிகள் குறிக்கப்பட்டுள்ளது.

அசோகரது குறிப்புகள்தொகு

 
பிராமி எழுத்தில் அசோகரது குறிப்புகள்
 
இந்தியாவில் அசோகரது தூண்கள் & கல்வெட்டுக் குறிப்புகள் அமைந்த இடங்கள்

அசோகரின் மற்ற ஆறு கல்வெட்டுகளில் உள்ள குறிப்புகள் போன்று அலகாபாத் தூணிலும், பிராமி எழுத்தில் குறிப்புகள் செதுக்கப்பட்டுள்ளது. ஜஹாங்கீர் இத்தூணில் தன் முன்னோர்களின் பெயர்களை செதுக்கியுள்ளார். [1] இத்தூணில் அசோகர், மக்கள் வாழும் நெறிகள் குறித்த அரசாணைகள் செதுக்கியுள்ளார்.

அசோகரின் மனைவி கருவாகியின் (Karuvaki) தருமச் செயல்கள் குறித்து இத்தூணில் செதுக்கப்பட்டுள்ளது.[7][8]

ஆசியச் சமூக சங்கத்தைச் சார்ந்த ஜேம்ஸ் பிரின்ஸ்சப் என்பவரின் அலகாபாத் தூண் குறித்த ஆய்வுகளால் மௌரியப் பேரரசு குறித்த முழு உண்மைகள் வெளி உலகத்திற்கு தெரியலாயிற்று.[4][9][10]

சமுத்திரகுப்தரின் குறிப்புகள்தொகு

அசோகர் நிறுவிய இத்தூணில் உள்ள குறிப்புகளின் கீழ், கி பி நான்காம் நூற்றாண்டில் குப்தப் பேரரசர் சமுத்திரகுப்தர் தனது அரசியல் மற்றும் தென்னிந்திய வெற்றிக் குறிப்புகளை சமஸ்கிருதம் மொழியில் செதுக்கியுள்ளார். [2][2] [11][2][12] இத்தூணில் உள்ள சமுத்திரகுப்தரின் குறிப்புகளின் மூலம் குப்தப் பேரரசு, அதன் அண்டை நாடுகள் மற்றும் புவியியலை அறிய முடிகிறது.[2][11]

இத்தூணில் உள்ள சமுத்திரகுப்தரின் குறிப்புகளை வரலாற்று ஆய்வாளர் டி. ஆர். பண்டார்கர் மொழி பெயர்த்துள்ளார்.[2][13][14]

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Alexander Cunningham (1879). Corpus Inscriptionum Indicarum: Inscriptions of Ashoka. Office of the Superintendent of Government Printing. பக். 37–38. https://books.google.com/books?id=msUUAAAAYAAJ. பார்த்த நாள்: 30 September 2014. 
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Kulke, Hermann; Rothermund, Dietmar (2010). "A History of India: Samudragupta: "a God whose residence is this world?"". Routledge. 4 அக்டோபர் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 October 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 3. Krishnaswamy, C.S.; Amalananda Ghosh (October 1935). "A Note on the Allahabad Pillar of Aśoka". The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland 4: 697–706. http://www.jstor.org/stable/25201233. பார்த்த நாள்: 1 October 2014. 
 4. 4.0 4.1 4.2 Prinsep, James (1832). "Journal of the Asiatic Society of Bengal". Open Library. pp. 566–609, 953–980. 2 October 2014 அன்று பார்க்கப்பட்டது.
 5. Charles Allen (writer) (2012). Ashoka: The Search for India's Lost Emperor. Hachette UK. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1408703882. https://books.google.com/books?id=K4vHjbUtf_4C. 
 6. James Prinsep (March 1834). "Note on Inscription on the Allahabad Column". Journal of the Asiatic Society of Bengal 3: 114–123. https://books.google.com/books?id=qzwzAQAAMAAJ. 
 7. D. R. Bhandarkar (1925). Ashoka. Asian Educational Services. பக். 336. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8120613333. https://books.google.com/books?id=hhlfSZLDjRsC. பார்த்த நாள்: 6 October 2014. 
 8. Vincent Arthur Smith (1920). Ashoka, the Buddhist Emperor of India. Asian Educational Services. பக். 215–219. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8120613031. https://books.google.com/books?id=4o_URem5WMcC. 
 9. Kang, Kanwarjit Singh (March 28, 2010). "He deciphered India’s past". The Tribune. http://www.tribuneindia.com/2010/20100328/spectrum/main2.htm. பார்த்த நாள்: 2 October 2014. 
 10. Charry, V Shankar (September 14, 2003). "Re-discovering an Emperor". Deccan Herald. Archived from the original on 9 அக்டோபர் 2014. https://web.archive.org/web/20141009051447/http://archive.deccanherald.com/deccanherald/sep14/at4.asp. பார்த்த நாள்: 2 October 2014. 
 11. 11.0 11.1 Ramesh Chandra Majumdar; Anant Sadashiv Altekar (1967). Vakataka - Gupta Age Circa 200-550 A.D.. Motilal Banarsidass Publ.. பக். 136–155. https://books.google.com/books?id=OswUZtL1_CUC. 
 12. Upinder Singh (2008). A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century. Pearson Education India. பக். 477–478. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:813171120X. https://books.google.com/books?id=H3lUIIYxWkEC. பார்த்த நாள்: 6 October 2014. 
 13. Devadatta Ramakrishna Bhandarkar; Chhabra, B. C. (1981). Gai, G. S.. ed. Corpus Inscriptionum Indicarum: Inscriptions of the early Gupta Kings. Archaeological Survey of India. https://books.google.com/books/about/Corpus_Inscriptionum_Indicarum.html?id=ADvRMgEACAAJ. 
 14. Ganguly, Dilip Kumar (1987). The Imperial Guptas and Their Times. Abhinav Publications. பக். 63–64. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8170172225. https://books.google.com/books?id=Hud2_Ie3T94C. 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலகாபாத்_தூண்&oldid=3444499" இருந்து மீள்விக்கப்பட்டது