அலன் டூரிங்
அலன் மாத்திசன் டூரிங் (Alan Mathison Turing - 23 சூன் 1912 – 7 சூன் 1954) என்பவர் ஓர் ஆங்கிலேயக் கணினி விஞ்ஞானி, கணிதவியலாளர், தருக்கவியலாளர், மறைகுறியீட்டு பகுப்பாய்நர், தத்துவ ஆராய்ச்சியாளர் மற்றும் கோட்பாட்டு உயிரியல் வல்லுநர் போன்ற பன்முகத்தன்மை கொண்டவர் ஆவார்.
அலன் டூரிங் Alan Turing | |
---|---|
1927 இல் டூரிங் | |
பிறப்பு | இலண்டன், இங்கிலாந்து | 23 சூன் 1912
இறப்பு | 7 சூன் 1954 வில்ம்சுலோ, செசயர், இங்கிலாந்து | (அகவை 41)
வாழிடம் | ஐக்கிய இராச்சியம் |
தேசியம் | பிரித்தானியர் |
துறை | கணிதவியலாளர், தருக்கவியலாளர், மறைகுறியீடு பகுப்பாய்நர் |
பணியிடங்கள் | மான்செசுடர் பல்கலைக்கழகம் தேசிய இயற்பியல் ஆய்வுகூடம் கேம்பிறிட்சு பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | கேம்பிறிட்சு பல்கலைக்கழகம் பிறின்சுடன் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | அலன்சோ தேவாலயம் |
அறியப்படுவது | நிறுத்தல் பிரச்சினை டூரிங் இயந்திரம் |
விருதுகள் | இராயல் கழக உறுப்பினர் |
செயற்கை நுண்ணறிவு மற்றும் தற்காலக் கோட்பாட்டு கணினி அறிவியலின் தந்தையாகக் கருதப்படும் இவர் [1],டூரிங் இயந்திரத்தின் உதவியுடன் படிமுறை கணக்கிடல் போன்ற கருத்துருக்களை முறைப்படுத்துவதில் பெரும் பங்களிப்புச் செய்தார்.பொதுப் பயன்பாட்டு கணிப்பொறிக்கு ஒரு மாதிரி கருவியாக இவருடைய டூரிங் கருவியைக் கருதலாம் [2][3].
இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலத்தில் பிளெச்லி பார்க்கில் இருந்த ஐக்கிய இராச்சியத்தின் இரகசியக் குறியீடுகளை உடைத்து இரகசியங்களைப் புரிந்துகொள்வதற்கான மீநுண்ணறிவு உற்பத்தி மையத்தில் அலன் டுரிங் பணி புரிந்தார். அப்போது சில காலம், செருமனியின் கடற்படை தொடர்பான இரகசியக் குறியீட்டுப் பகுப்பாய்வுப் பிரிவின் தலைவராகவும் இவர் இருந்தார். இரகசியக் குறியீடுகளை மறைக்கவும் மற்றும் மறைக்கப்பட்டிருக்கும் செய்திகளை விடுவிக்கவும் பயன்பட்ட போருக்கு முந்தைய போலந்து நாட்டு மின்விசையியல் இயந்திரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட செருமன் குறியீடுகளைப் புரிந்து கொள்வதற்கான பல நுட்பங்களை இவர் உருவாக்கியுள்ளார். அட்லாண்டிக் போர் உட்பட பல முக்கியமான போர்களில் நாசீக்களைத் தோற்கடிக்க கூட்டணிக் குழுக்களுக்குத் தேவையான குறியீட்டு செய்திகளை கண்டறிந்து கொடுத்ததில் டூரிங் ஒரு முக்கிய பங்களிப்பைக் கொடுத்துள்ளார். மேலும், இவருடைய பங்களிப்பு போரை வெல்லவும் உதவியது[4]
போருக்குப் பின்னர் இயந்திரங்களை உணர்வு உள்ளவையாகவும், சிந்திக்கக் கூடியவையாகவும் உருவாக்க முடியுமா என்பது குறித்த செயற்கை அறிவுத்திறன் தொடர்பான விவாதத்துக்கு டூரிங் சோதனை மூலம் இவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். தேசிய இயற்பியல் சோதனைக்கூடத்தில் பணிபுரிந்த போது நிரல் சேமிப்புக் கணிப்பொறிகளுக்கான முதல் வடிவமைப்புக்களை செய்தார். ஆனாலும் இவை அவற்றின் முழு வடிவில் அப்போது உருவாக்கப்படவில்லை. 1948 ஆம் ஆண்டில் இவர் மான்செசுடர் பல்கலைக்கழகத்தில் [5] மான்செசுடர் மார்க் I என்னும் உலகின் முதலாவது உண்மையான கணினிகளுள் ஒன்றை உருவாக்கும் பணியில் இணைந்து கொண்டார்.
1952 இல் ஓரினச்சேர்க்கை செயல்களுக்காக அலன் டூரிங் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. இத்தகைய பாலுறவுச் செயல்பாடுகள் இங்கிலாந்தில் பெருங்குற்றங்களாகக் கருதப்பட்டன. சிறை தண்டனைக்கு மாற்றாக டையெத்தில்சிடில்பெசுட்ரால் என்ற இரசாயன வேதியியல் சிகிச்சையை டூரிங் ஏற்றுக்கொண்டார். தனது 42 வது பிறந்த நாளுக்கு முன்பாகவே சயனைடு நச்சு காரணமாக 1954 ஆம் ஆண்டில் இறந்தார். இவரது இறப்பு ஒரு தற்கொலை எனத் தீர்மானிக்கப்பட்டது, ஆனால் அறியப்பட்ட ஆதாரங்கள் தற்செயலாக ஏற்பட்ட நச்சுத்தன்மையுடன் ஒத்துப்போகின்றன என்பது குறிப்பிடத்தக்கது [6]. 2009 இல் இணையத்தில் நிகழ்ந்த ஒரு பிரச்சார இயக்கத்தைத் தொடர்ந்து பிரிட்டிசு பிரதம மந்திரி கோர்டன் பிரௌன் டூரிங்ஙை நடத்திய பயங்கர வழிக்காக அரசாங்கத்தின் சார்பில் ஒரு பொது மன்னிப்புக் கோரினார் ராணி இரண்டாம் எலிசபெத் அலன் டூரிங்குக்கு 2013 ஆம் ஆண்டில் மரணத்திற்குப் பின்னர் பொது மன்னிப்பு வழங்கினார் [7][8]. அலன் டூரிங் சட்டம் என்பது இப்போது ஐக்கிய இராச்சியத்தில் 2017 சட்டத்திற்கான முறைசாரா சொற்பிரயோகமாக இருக்கிறது. ஓரினச்சேர்க்கையாளர்களை சென்றகால செயற்பாடுகள் போல எச்சரிப்பது அல்லது தண்டிப்பது போன்ற சட்டவிரோத செயற்பாடுகள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன.[9].
இளமைக்காலம்
தொகுமேற்கு இலண்டனிலுள்ள மைடா வாலே (Maida Vale) என்னும் இடத்தில் 1912 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் நாள் அலன் டூரிங் பிறந்தார் பிறந்தார்[10][11], இவரது தந்தை யூலியசு மாத்திசன் டூரிங் (1873-1947), பிரிட்டிசு இந்தியாவில் சத்ரபூர், பீகார் மற்றும் ஒரிசா மாகாணத்தின் இந்திய ஆட்சிப் பணி பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார் [12][13]. அலன் டூரிங்கின் தாயார் சாரா, மதராசு தொடர்வண்டி நிலையப் பகுதியில் தலைமைப் பொறியாளராக இருந்த எட்வார்ட் வாலர் சிடோனி என்பவரின் மகள் ஆவார். யூலியனும், சாராவும் தமது பிள்ளையை இங்கிலாந்திலேயே வளர்க்க விரும்பியதால் அவர்கள் இந்தியாவிலிருந்து இலண்டனுக்குத் திரும்பினர்[14].
அலன் டூரிங்குக்கு ஓர் அண்ணன் இருந்தார். இவர்கள் சிறுவர்களாக இருந்தபோது, இவரது தந்தையார் இந்திய குடிசார் சேவையில் இருந்து முற்றாக விலகிக் கொள்ளாத காரணத்தால் ஜூலியனும் சாராவும் இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் அடிக்கடி பயணம் மேற்கொண்டிருந்தனர். அக்காலத்தில் அலனும், அவரது அண்ணனும் பெற்றோரின் நண்பர்களின் பாதுகாப்பில் இருந்துவந்தனர்.
வாழ்க்கையின் தொடக்கக் காலத்திலேயே டூரிங்ஙின் அறிவுக்கூர்மை அறிகுறிகள் தென்பட்டன. நாளடைவில் அவற்றை டுரிங் வெளிப்படையாக காட்டினார்[15]. இவருடைய பெற்றோர்கள் 1927 ஆம் ஆண்டில் கில்ட்ஃபோர்டில் ஒரு வீடு வாங்கினர். பள்ளி விடுமுறை நாட்களில் மட்டும் டூரிங் அங்கு வாழ்ந்தார்.
கல்வி
தொகுஇங்கிலாந்தின் செயின்ட் லியோனார்டில் உள்ள சென் மைக்கேல் பள்ளியில் பெற்றோர்கள் அலன் டூரிங்ஙை பள்ளியில் சேர்த்தனர். அப்போது அலனுக்கு வயது ஆறு ஆகும். பள்ளியின் தலைமை ஆசிரியை விரைவிலேயே அலனின் திறமைகளை நன்கறிந்து அங்கீகரித்தார். தொடர்ந்து பல ஆசிரியர்களும் அலனின் திறமைகளை உணர்ந்தனர்.
சனவரி 1922 மற்றும் 1926 க்கு இடைப்பட்ட காலத்தில் சசெக்சில் உள்ள பிரத்தியேகமான ஆசெலர்சுட்டு தயாரிப்புப் பள்ளியில் கல்வி கற்றார் [16]. 13 வயதானபோது இவர் டோர்செட் என்னும் இடத்தில் இருந்த மிகவும் புகழ் பெற்ற சேர்போன் நகரிலுள்ள பள்ளியில் சேர்ந்தார். இவர் அப்பள்ளியில் சேரவேண்டிய முதல் நாள் இங்கிலாந்தில் ஒரு பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது. முதல் நாள் எப்படியாவது பள்ளிக்குப் போய்விட வேண்டும் என்பதில் குறியாக இருந்த டூரிங், தனது மிதிவண்டியில் முதல் நாளே புறப்பட்டு சவுதாம்ப்டனில் இருந்து 60 மைல் தொலைவிலிருந்த பள்ளிக்கு எவருடைய துணையும் இன்றிச் சென்றார் [17]. கணிதம், அறிவியல் போன்ற பாடங்களில் டூரிங்குக்கு இருந்த இயற்கை ஆர்வம் சேர்போனில் பணியாற்றிய சில ஆசிரியர்களால் அங்கீகரிக்கப்படவில்லை. கல்வி என்பது மொழி, இலக்கியம், வரலாறு, கலை போன்ற பாரம்பரிய பாடங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அவர்கள் எண்ணினர். இரண்டு வகையான பள்ளிகளுக்கு இடையே ஒருவனால் கற்கமுடியாது. பொதுப் பள்ளியில் இருக்கவேண்டுமானால் இவன் ஒரு படிப்பாளியாக வருவதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டும். அறிவியல் வல்லுனனாக வருவதே இவனது நோக்கமானால் இவன் பொதுப் பள்ளியில் தனது நேரத்தை வீணாக்குவதாகத் தெரிகிறது என அலனின் தலைமை ஆசிரியர் அவரது பெற்றோருக்கு எழுதினார் [18].
இத்தகைய சூழ்நிலையிலும் டூரிங் தான் விரும்பிய பாடங்களில் மிகுந்த திறமையைக் காண்பித்து வந்தார். 1927 ஆம் ஆண்டில் அடிப்படை நுண்கணிதத்தைக் கற்றுக்கொள்ளாமலேயே சிக்கலான கணக்குகளுக்குத் தீர்வு கண்டார். 1928 இல் 16 வயதாக இருந்தபோது அல்பர்ட் ஐன்ஸ்டீனின் ஆக்கங்களைப் பார்க்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அவற்றையும் டூரிங் புரிந்துகொண்டார்.
கிறித்தோபர் மார்கம்
தொகுஅதே பள்ளியில் படித்தவரும், சற்று மூத்தவருமான கிறித்தோபர் மார்கம் என்பவருடன் கொண்ட நட்பினால் டூரிங்கின் நம்பிக்கைகளும், எதிர்பார்ப்புக்களும் உயர்ந்தன. ஆனால், பள்ளியின் கடைசிப் பருவத்தின் போது நோயின் காரணமாக மார்க்கம் திடீரென இறந்து விட்டான். இதனால் டூங்ஙின் சமய நம்பிக்கைகள் தகர்ந்து ஒரு நாத்திகராக மாறினார். மனித மூளையின் செயற்பாடு உள்ளிட்ட எல்லாத் தோற்றப்பாடுகளுமே பொருண்மை சார்ந்தனவே என்னும் நம்பிக்கையை வளர்த்துக்கொண்டார்.
பல்கலைக்கழகக் கல்வி
தொகுசேர்போனுக்குப் பிறகு 1931 முதல் 1934 வரை கேம்பிரிட்சில் உள்ள கிங் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார். 1935 ஆம் ஆண்டில், 22 வயதில் கணிதப்பாடத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற டுரிங், மத்திய எல்லை கோட்பாட்டை நிரூபித்ததன் மூலம் கிங்ஙின் ஒர் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்[19],
மேற்கோள்கள்
தொகு- ↑ Beavers 2013, ப. 481
- ↑ Max Newman (1955). "Alan Mathison Turing. 1912–1954". Biographical Memoirs of Fellows of the Royal Society 1: 253–263. doi:10.1098/rsbm.1955.0019.
- ↑ Sipser 2006, ப. 137
- ↑ A number of sources state that Winston Churchill said that Turing made the single biggest contribution to Allied victory in the war against Nazi Germany. However both The Churchill Centre and Turing's biographer Andrew Hodges have said they know of no documentary evidence to support this claim nor of the date or context in which Churchill supposedly said it, and the Churchill Centre lists it among their Churchill 'Myths', see Schilling, Jonathan. "Churchill Said Turing Made the Single Biggest Contribution to Allied Victory". The Churchill Centre: Myths. Archived from the original on 17 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 9 January 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) and Hodges, Andrew. "Part 4: The Relay Race". Update to Alan Turing: The Enigma. பார்க்கப்பட்ட நாள் 9 January 2015.{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) A BBC News profile piece that repeated the Churchill claim has subsequently been amended to say there is no evidence for it. See Spencer, Clare (11 September 2009). "Profile: Alan Turing". BBC News. http://news.bbc.co.uk/2/hi/uk_news/8250592.stm. "Update 13 February 2015" - ↑ Leavitt 2007, ப. 231–233
- ↑ Pease, Roland (26 June 2012). "Alan Turing: Inquest's suicide verdict 'not supportable'". BBC News. http://www.bbc.co.uk/news/science-environment-18561092. பார்த்த நாள்: 25 December 2013.
- ↑ Swinford, Steven (23 December 2013). "Alan Turing granted Royal pardon by the Queen". The Daily Telegraph. Archived from the original on 24 நவம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 2 செப்டம்பர் 2017.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ Wright, Oliver (23 December 2013). "Alan Turing gets his royal pardon for 'gross indecency' – 61 years after he poisoned himself". The Independent (London). https://www.independent.co.uk/news/uk/home-news/alan-turing-gets-his-royal-pardon-for-gross-indecency--61-years-after-he-poisoned-himself-9023116.html.
- ↑ "'Alan Turing law': Thousands of gay men to be pardoned". BBC News. 20 October 2016. http://www.bbc.com/news/uk-37711518. பார்த்த நாள்: 20 October 2016.
- ↑ The Scientific Tourist In London: #17 Alan Turing's Birth Place, Nature. London Blog
- ↑ வார்ப்புரு:Openplaque
- ↑ Hodges 1983, ப. 5
- ↑ "The Alan Turing Internet Scrapbook". Alan Turing: The Enigma. பார்க்கப்பட்ட நாள் 2 January 2012.
- ↑ "London Blue Plaques". English Heritage. Archived from the original on 13 September 2009. பார்க்கப்பட்ட நாள் 10 February 2007.
- ↑ Jones, G. James (11 திசம்பர் 2001). "Alan Turing – Towards a Digital Mind: Part 1". System Toolbox. Archived from the original on 3 ஆகத்து 2007. பார்க்கப்பட்ட நாள் 27 சூலை 2007.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ Alan Mathison (April 2016). "ALAN TURING ARCHIVE – SHERBORNE SCHOOL (ARCHON CODE: GB1949)" (PDF). Sherborne School, Dorset. பார்க்கப்பட்ட நாள் 5 February 2017.
- ↑ Hofstadter, Douglas R. (1985). Metamagical Themas: Questing for the Essence of Mind and Pattern. Basic Books. p. 484. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-465-04566-9. இணையக் கணினி நூலக மைய எண் 230812136.
- ↑ Hodges 1983, ப. 26
- ↑ See Section 3 of John Aldrich, "England and Continental Probability in the Inter-War Years", Journal Electronique d'Histoire des Probabilités et de la Statistique, vol. 5/2 Decembre 2009 Journal Electronique d'Histoire des Probabilités et de la Statistique
புற இணைப்புகள்
தொகு- How Alan Turing Cracked The Enigma Code Imperial War Museums
- Alan Turing பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம் RKBExplorer
- Alan Turing Year
- CiE 2012: Turing Centenary Conference
- Alan Turing site maintained by Andrew Hodges including a short biography
- AlanTuring.net – Turing Archive for the History of Computing by Jack Copeland
- The Turing Archive[தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு] – contains scans of some unpublished documents and material from the King's College, Cambridge archive
- Jones, G. James (11 December 2001). "Alan Turing – Towards a Digital Mind: Part 1". System Toolbox (The Binary Freedom Project) இம் மூலத்தில் இருந்து 3 August 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070803163318/http://www.systemtoolbox.com/article.php?history_id=3.
- Happy 100th Birthday, Alan Turing by Stephen Wolfram.
- Sherborne School Archives – holds papers relating to Alan Turing's time at Sherborne School
- Alan Turing plaques recorded on openplaques.org