அலிகார் முற்றுகை

இரண்டாவது ஆங்கிலோ-மராத்தா போரின் போது (1803-1805) இந்தியாவில் அலிகாரில், மராத்தா கூட்டமைப்பு மற்றும

அலிகார் முற்றுகை (Siege of Aligarh) பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திற்கும் மராத்தா கூட்டமைப்புக்கும் இடையே இரண்டாம் ஆங்கிலோ-மராத்தா போரின் போது (1803-1805) இந்தியாவின் அலிகார் நகரில் நடந்த போரைக் குறிக்கிறது. அலிகார் போர் என்றும் இம்முற்றுகையைக் குறிப்பிடுவர்.[1]

அலிகார் முற்றுகை
Siege of Aligarh
இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர் பகுதி
Attack on Perron's camp and storming of Allyghur, Aug - Sep 1803.jpg
பெரோன் முகாம் மீதான தாக்குதல் மற்றும் அல்லிகுர் தாக்குதல், ஆகத்து - செப்டம்பர் 1803
நாள் 1–4 செப்டம்பர் 1803
இடம் அலிகர், இந்தியா
பிரித்தானியர் வெற்றி
பிரிவினர்
Flag of the British East India Company (1801).svg பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் Flag of the Maratha Empire.svg மராட்டியப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
செனரல் லேக்கு பியர் கியுலியர்-பெரோன்
இழப்புகள்
900 300

இந்தியாவின் வலிமையான கோட்டைகளில் ஒன்றான அலிகார் கோட்டை, பிரெஞ்சு கூலிப்படை அதிகாரியான பியர் பெரோனால் பலப்படுத்தப்பட்டு அவரது கட்டுப்பாட்டில் இருந்தது. 1803 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி, தளபதி லார்ட்டு கெரார்டு லேக்கு தலைமையில் அலிகார் கோட்டை முற்றுகையிடப்பட்டது. இப்போது யார்க்சயர் படைப்பிரிவு என்று அழைக்கப்படும் பிரித்தானிய 76 ஆவது படைப்பிரிவு இம்முற்றுகையில் கெரார்டு லேக்குக்கு உதவியது. 1803 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று மராட்டியர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து அலிகார் கோட்டை கைப்பற்றப்பட்டது.[2] தாக்குதலின் போது, பிரெஞ்சு வீரர்களால் கோட்டையைச் சுற்றி பதினான்கு அகழிகள் வாள் கத்திகள் மற்றும் நச்சு ஆயுதங்கள் என வரிசையாக அமைக்கப்பட்டன. சுவர்கள் பிரெஞ்சு பீரங்கிகளால் பலப்படுத்தப்பட்டன. புலிகள் மற்றும் சிந்தியாவின் சிங்கங்கள் போன்ற விலங்குகள் கூட பிரெஞ்சுக்காரர்களால் பயன்படுத்தப்பட்டன.[2] போரின் போது ஆங்கிலேயர்கள் 900 படை வீரர்களை இழந்தனர்.[2] அப்போதைய வெலிங்டன் பிரபு இந்த வெற்றியை "வட இந்தியாவை ஆங்கிலேயர் கைப்பற்றியது மிகவும் அசாதாரணமான சாதனைகளில் ஒன்று" என்று அறிவித்தார்.[3]

மேற்கோள்கள்தொகு

  1. Naravane, M.S. (2014). Battles of the Honorourable East India Company. A.P.H. Publishing Corporation. பக். 75. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131300343. 
  2. 2.0 2.1 2.2 Thackeray, William Makepeace (2013). "The Tremendous Adventures of Major Gahagan Chapter 2". CreateSpace. ISBN 978-1490979120. Archived from the original on 2007-06-23.CS1 maint: BOT: original-url status unknown (link)
  3. Butalia, Ramesh C. (1998). The Evolution of the Artillery in India. Allied. பக். 239. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788170238720. http://www.google.com.sg/books?id=CtP1ImudK88C&pg=PA239. பார்த்த நாள்: 10 October 2018. 

புற இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலிகார்_முற்றுகை&oldid=3412300" இருந்து மீள்விக்கப்பட்டது