அலி கோப்பி எக்கர்மன்

அலி கோப்பி எக்கர்மன் ( Ali Cobby Eckermann 1963) என்பவர் ஆத்திரேலியப்  பெண் கவிஞர் ஆவார். இவர் ஆத்திரேலியத் தொல்குடியைச் சேர்ந்தவர். தெற்கு ஆத்திரேலியாவில் கவுரனாவில் பிறந்தார். கவிதைகள், புதினங்கள், நினைவுக் குறிப்புகள் எனப் பல இலக்கியப் படைப்புகளை ஆக்கியுள்ளார். யேல் பல்கலைக்கழகத்தின் பன்னாட்டு விந்தாம் கேம்ப் பெல் என்ற 165000 டாலர்கள் கொண்ட இலக்கியப் பரிசை 2017 ஆம் ஆண்டில் வென்றுள்ளார். [1]

வாழ்க்கைக் குறிப்புகள் தொகு

யான்குனிசட்சர அல்லது கோகதா குடும்ப மரபைச் சேர்ந்த எக்கர்மன்  தம் தாய் மற்றும் பாட்டி இவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டார். லுத்தரன் இணையர்கள் இவரை வளர்த்தார்கள். [2] பண்ணையில் வளர்ந்த எக்கர்மன் தமது பள்ளிப் படிப்பை தெற்கு ஆத்திரேலியாவில் முடித்தார். [3] வளர்ப்புப் பெற்றோர்களின் அன்பிலும் ஆதரவிலும் வளர்ந்தார். இன ஒதுக்கல் வேறுபாடுகளால் அவர் மிகுந்த அல்லலுக்கு உள்ளானார்  17 ஆம் அகவையில்  வீட்டை விட்டு வெளியேறி ஒருவனுடன் இரண்டு ஆண்டுகள் வாழ்க்கை நடத்தி, கரு உற்று, ஒரு மகனைப் பெற்றார். அந்த மகனும் பிரிக்கப் பட்டு எங்கேயோ வளர்க்கப்பட்டான்.   எக்கர்மனுக்கு 34 அகவை ஆகும்போது அவருடைய தாயை மீண்டும் சந்தித்தார். [4][2]நாலாண்டுகள் கழித்து மகனையும் மீட்டெடுத்தார்.

இலக்கியப் பணிகள் தொகு

இவருடைய இலக்கியப் படைப்புத் திறன் 2009 ஆம் ஆண்டில் வெளி உலகுக்குத் தெரியத்  தொடங்கியது. குடியேற்றக் காலம் முதல் காட்டுவாசிகள் பட்ட  துன்பங்களையும் அவலங்களையும் எக்கர்மன் தம் கவிதைகளில் விவரித்தார். இவரது ரூபி மூன்லைட்  என்ற வசனக் கவிதைப்  புதினத்திற்கு  சிறந்த நூல் என்ற விருதும் கென்னத் சிலீசர் பரிசும்  கிடைத்தது. இவரது மற்றொரு கவிதைப் புதினம் 'அவனுடைய தந்தையின் கண்கள்' என்பது ஆகும். கூலுங்கா என்ற ஊரில்  தொல்குடி எழுத்தாளர்கள் கூடல் ஒன்றை நடத்தினார். [3] 2014 இல் அயோவா பல்கலைக் கழகத்தில் பன்னாட்டு எழுத்தாளர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் [5]

மேற்கோள் தொகு

  1. "Windham-Campbell Prizes: Recipients". Windham-Campbell Prizes. பார்க்கப்பட்ட நாள் 6 March 2017.
  2. 2.0 2.1 Eckermann, Ali Cobby. "My life as a stolen child". news.com.au. பார்க்கப்பட்ட நாள் 6 March 2017.
  3. 3.0 3.1 "Ali Eckermann". PoemHunter.com. பார்க்கப்பட்ட நாள் 6 March 2017.
  4. "Ali Cobby Eckermann". The Conversation. பார்க்கப்பட்ட நாள் 6 March 2017.
  5. "2014 Resident Participants | The International Writing Program". iwp.uiowa.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-04-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலி_கோப்பி_எக்கர்மன்&oldid=2693406" இலிருந்து மீள்விக்கப்பட்டது