அலுமினியம் புரோமைடு
அலுமினியம் புரோமைடு (Aluminium bromide) என்பது AlBrx என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அலுமினியம் முப்புரோமைடு என்றழைக்கப்படும் அலுமினியம் டிரைபுரோமைடுதான் அலுமினியம் புரோமைடின் பொது வடிவமாகும். நிறமற்ற இச்சேர்மம் பதங்கமாகக்கூடிய நீருறிஞ்சும் திண்மமாகும். எனவே பழைய உப்பு மாதிரிகள் நீரேற்றுகளாக மாறி அலுமினியம் முப்புரோமைடுஅறுநீரேற்றாகக் (AlBr3•6H2O) காணப்படுகின்றன.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
அலுமினியம் புரோமைடு | |
வேறு பெயர்கள்
அலுமினிக் புரோமைடு
அலுமினியம்(III) புரோமைடு | |
இனங்காட்டிகள் | |
7727-15-3 7784-11-4 அறுநீரேற்று | |
ChemSpider | 22818 9040513 எமி(அசிட்டைல் புரோமைடு) 9499890 ஈத்தேன்தயோல் |
EC number | 231-779-7 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24409 11062022 டெர்ட்கிசு(டெட்ராகுளோரோமெத்தேன்) 10865226 எமி(அசிட்டைல் புரோமைடு) 11324936 ஈத்தேன்தயோல் 6093832 டிரிசு(பிரிடின்) |
வே.ந.வி.ப எண் | BD0350000 |
| |
UN number | 1725 |
பண்புகள் | |
AlBr3 Al2Br6 AlBr3•6H2O (அறுநீரேற்று) | |
வாய்ப்பாட்டு எடை | 266.694 கி/மோல் (நீரிலி) 374.785 கி/மோல் (அறுநீரேற்று)[1] |
தோற்றம் | வெண்மையும் வெளிர் மஞ்சளுமான தூள்[1] |
மணம் | காரமணம் |
அடர்த்தி | 3.2 கி/செ.மீ3 (நீரிலி) 2.54 கி/செ.மீ3 (அறுநீரேற்று)[1] |
உருகுநிலை | 97.5 °செ (நீரிலி) 93 °C (அறுநீரேற்று) [1] |
கொதிநிலை | 255 (நீரிலி)[1] |
நன்றாகக் கரையும், பகுதியாக நீராற்பகுப்புக்கு உள்ளாகும். இதற்கு புகையும் கரைசலும் வெண்வீழ்படிவும் அடையாளமாகும். | |
கரைதிறன் | மெத்தனால், டை எத்தில் ஈதர், அசிட்டோன் போன்றவற்றில் சிறிதளவு கரையும். |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு, mP16 (நீரிலி) |
புறவெளித் தொகுதி | P21/c, No. 14 |
Lattice constant | a = 0.7512 நானோமீட்டர், b = 0.7091 நானோமீட்டர் |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-572.5 கிலோ.யூல்/மோல் |
நியம மோலார் எந்திரோப்பி S |
180.2 யூல்/(மோல்•கெல்வின்) |
வெப்பக் கொண்மை, C | 100.6 யூல்/(மோல்•கெல்வின்) |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | பட்டியலில் இல்லை |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
1598 மி.கி/கி.கி (எலி, வாய்வழி) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | அலுமினியம் குளோரைடு அலுமினியம் டிரை அயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | போரான் முப்புரோமைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
திண்மநிலையில், கார்பன் டைசல்பைடு போன்ற கரைப்பான்களில் கரைக்கப்பட்ட கரைசல்களில், உருகிய நிலையில் மற்றும் வாயு நிலை போன்ற நிபந்தனைகளில் அலுமினியம் முப்புரோமைடு (Al2Br6) இருபடி அமைப்பில் காணப்படுகிறது. உயர் வெப்பநிலைகளில் மட்டும் இந்த இருபடிகள் உடைந்து ஒருமங்களாகின்றன.
- Al2Br6 → 2 AlBr3 ΔH°diss = 59 கிலோயூல்/மோல்
அலுமினியம் மோனோபுரோமைடு என்றழைக்கப்படும் அலுமினியம் ஒற்றைபுரோமைடு இனமானது ஐதரசன் புரோமைடுடன் அலுமினியம் உயர் வெப்பநிலையில் வினைபுரிவதால் உருவாகிறது. அறைவெப்பநிலையில் இது விகிதச்சமமாதலின்றி பிரிகையடைகிறது.
- 6/n "[AlBr]n" → Al2Br6 + 4 Al
இந்த வினை 1000 ° செல்சியசுக்கும் அதிகமான வெப்பநிலையைத் தாண்டும்போது மீண்டும் தலைகீழாக மாற்றியமைக்கப்படுகிறது. அலுமினியம் ஒற்றைபுரோமைடு சேர்மமானது படிகவியல் கோட்பாடுகளின்படி நாற்படி கூட்டுவிளைபொருள் Al4Br4(NEt3)4 (Et = C2H5). என்ற வடிவத்தில் அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த இனங்கள் சைக்ளோபியூட்டேனுடன் மின்னணு முறையில் தொடர்புடையவையாகும். ஈரணு அலுமினிய ஒற்றைபுரோமைடு ஓர் இருபடியாக ஒடுக்கமடைந்து பின்னர் நான்முக Al4Br4 தொகுதியாக போரான் சேர்ம வரிசையொத்ததாக மாற்றமடைகிறதென கோட்பாடுகள் தெரிவிக்கின்றன [3].
Al2Br6 சேர்மத்தில் இரண்டு AlBr4 நான்முகங்கள் ஒரு பொது விளிம்பை பகிர்ந்து கொள்கின்றன. D2h என்ற மூலக்கூற்று சீரொழுங்கு இங்கு காணப்படுகிறது.
AlBr3 என்ற ஒற்றைப்படி ஆவி நிலையில் மட்டும் தோன்றுகிறது. இதை முக்கோண சமதளம் மற்றும் D3h இடக் குழு அமைப்பு என்று விவரிக்கமுடியும். அலுமினியத்தின் இனக்கலப்பு பெரும்பாலும் sp2. இனக்கலப்பு என்று விவரிக்கப்படுகிறது. Br-Al-Br பிணைப்புகளுக்கு இடையிலான பிணைப்புக் கோணம் 120 பாகைகளாகும்.
தயாரிப்பு
தொகுஅலுமினியம் புரோமைடு வகைகளில் Al2Br6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட அலுமினியம் டிரைபுரோமைடு சேர்மமே பொதுவாக நடைமுறையில் பயன்படுத்தப்படும் சேர்மமாகும். ஒரு நீருறிஞ்சியாக நிறமற்ற திண்மமாக இது சாதாரன நிலைகளில் அறியப்படுகிறது. இரும்பை அசுத்தமாகக் கொண்ட அலுமினியம் புரோமைடு உப்புகள் மஞ்சள் நிறத்தில் அல்லது செம்பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன, அலுமினியத்துடன் ஐதரசன் புரோமைடு வினைபுரிவதால் அலுமினியம் புரோமைடு உருவாகிறது.
- 2 Al + 6 HBr → Al2Br6 + 3 H2
மாறாக நேரடியான புரோமினேற்ற வினையின் மூலமாகவும் இதைத் தயாரிக்கிறார்கள்.
- 2 Al + 3 Br2 → Al2Br6
வினைகள்
தொகுAl2Br6 எளிமையாக பிரிகையடைந்து வலிமையான AlBr3 என்ற இலூயிசு அமிலமாக மாறுகிறது. இது இருபடியாக்கலுக்கு உட்படும் தன்மை பொதுவாக மிகுகன முதன்மைக்குழு ஆலைடுகளில் பொதுவாக காணப்படுகிறது. அனுபவ வாய்ப்பாடு உணர்த்தும் உட்கிடையான போக்கைக் காட்டிலும் அதிக மொத்தமாக இத்தன்மை உணரப்படுகிறது. போரான் டிரைபுரோமைடு போன்ற இலேசான முதன்மைக்குழு ஆலைடுகள் இப்பண்பை வெளிப்படுத்துவதில்லை. மைய அணுவின் சிறிய உருவ அளவு இதற்கு காரணமாக இருக்கலாம்.
இதன் இலூயிசு அமில பண்பிற்கு இணங்க, நீரானது அலுமினியம் டிரைபுரோமைடை நீராற்பகுப்பு செய்து HBr வாயுவை வெளிவிடுகிறது. மற்றும் Al-OH-BR சேர்ம இனங்களையும் உருவாக்குகிறது. இதேபோல், ஆல்ககால் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்களுடன் இது விரைவாக வினைபுரிகிறது. இருப்பினும் நீருடனான வினையைக்காட்டிலும் வினையின் தீவிரம் குறைவாகும். எளிய இலூயிசு காரங்களுடனான வினை AlBr3L போன்ற கூட்டு விளைபொருள்களைக் கொடுக்கின்றன. அலுமினியம் டிரைபுரோமைடு கார்பன் டெட்ராகுளோரைடுடன் 100 ° செல்சியசில் வினைபுரிந்து கார்பன் டெட்ராபுரோமைடைக் கொடுக்கிறது.
- 4 AlBr3 + 3 CCl4 → 4 AlCl3 + 3 CBr4
பீரிடல் கிராப்ட்சு ஆல்க்கைலேற்ற வினையில் ஒரு வினையூக்கியாக அலுமினியம் டிரைபுரோமைடு செயல்படுகிறது[4] . எப்பாக்சைடு வளையத் திறப்பு வினைகள், இரும்பு கார்பனைல்களிலிருந்து உருவாகும் டையீன்களின் சிக்கல்நீக்க வினைகள் போன்றவையும் இலூயிசு அமில ஆதரவு வினைகளாகும். Al2Cl6 சேர்மத்தைக்காட்டிலும் இது வலிமையான இலூயிசு அமிலமாகக் கருதப்படுகிறது.
தற்காப்பு
தொகுஅலுமினியம் டிரைபுரோமைடு வினைத்திற்ன் மிக்க ஒரு சேர்மமாகும் [5].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Haynes, William M., ed. (2011). CRC Handbook of Chemistry and Physics (92nd ed.). Boca Raton, FL: CRC Press. p. 4.45. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1439855110.
- ↑ Troyanov, Sergey I.; Krahl, Thoralf; Kemnitz, Erhard (2004). "Crystal structures of GaX3(X= Cl, Br, I) and AlI3". Zeitschrift für Kristallographie 219 (2-2004): 88–92. doi:10.1524/zkri.219.2.88.26320.
- ↑ Dohmeier, Carsten; Loos, Dagmar; Schnöckel, Hansgeorg (1996). "Aluminum(I) and Gallium(I) Compounds: Syntheses, Structures, and Reactions". Angewandte Chemie International Edition in English 35 (2): 129. doi:10.1002/anie.199601291.
- ↑ Encyclopedia of Reagents for Organic Synthesis. 2001. doi:10.1002/047084289X. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0471936235.
- ↑ Renfew, Malcom M. (1991). "Hazardous laboratory chemicals: Disposal guide (Armour, M.A.)". Journal of Chemical Education 68 (9): A232. doi:10.1021/ed068pA232.2.