அலெக்சாண்டர் கார்டியூ
அலெக்சாண்டர் கார்டியூ (Sir Alexander Gordon Cardew KCSI14 மார்ச்சு 1861 – 12 சனவரி 1937) என்பவர் இந்தியக் குடியியல் அதிகாரியாகப் பணி செய்த ஆங்கிலேயர் ஆவார். இவர் 1919 மார்ச்சு 29 முதல் 1919 எப்பிரல் 10 வரை அந்தக் காலத்து மெட்றாசு மாநிலத்தில் தற்காலிக ஆளுநராகப் வகித்தவர்.[1]
அலெக்சாண்டர் கார்டியூ | |
---|---|
பிறப்பு | 14 மார்ச் 1861 |
இறப்பு | 12 சனவரி 1937 (அகவை 75) |
இங்கிலாந்தில் சாமர்செட்டில் பிறந்த கார்டியூ சாமர்செட்சயர் கல்லூரியிலும் ஆக்சுபோர்டு குவீன்சு கல்லூரியிலும் படித்தார். பின்னர் இந்தியக் குடியியல் பணியில் சேர்ந்தார்.
1885 முதல் 1990 வரை அரசில் துணைச் செயலாளராகவும் 1892 முதல் 1899 வரை சிறைத் துறை அதிகாரியாகவும் 1906 முதல் 1919 வரை சென்னை மேலவை மன்றத்தில் உறுப்பினராகவும் பதவி வகித்தார்.
அன்றைய மெட்றாசு மாநிலத்தில் பல்வேறு துறைகளில் ஆதிக்க வகுப்பினரின் புள்ளி விளக்கங்களைத் தொகுத்து உரைத்தவர்.